உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து #2 THE SPOKEN WORD IS THE ORIGINAL SEED #2 மாலை செய்தி, மார்ச்சு, 18, 1962 பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 1. ஓ... அது அருமையானது சகோதரனே..?.. அவர் தம்முடைய ....கூறிட விரும்புகின்றாரா..?. (ஒரு சகோதரன் ஒரு சாட்சியைக் கூறுகின்றார் - ஆசி) அது... அதுதான் சகோதரன் எட் அதுதான் அது. ஓ... இது மிகவும் அருமையானது அல்லவா. நான் அந்த சாட்சி... விரும்புகிறேன். இப்பொழுது... அந்த கார் ரேடியோ இணைக்கப்பட்டுள்ளது, அது அதற்காகத்தான் இங்கே இருக்கின்றது. (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி)  2. நீங்கள் எல்லாரும் இப்பொழுது நன்றாயிருப்பதாக உணர்கின்றீர்களா? நாம் இப்பொழுதே கூட்டத்தை ஆரம்பித்து, அதை நள்ளிரவு வரை நடத்துவோம். அதன் பின் ... நல்லது... கர்த்தர் நமக்கு உதவியதற்காகவும், நம்மை ஆசீர்வதித்ததற்காகவும் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நாம் ஆரம்பிக்கும் முன்பு, யாரைக் குறித்து பேசுகிறோமோ அவரிடம் சற்று ஜெபம் செய்வோம். 3. கிருபை நிறைந்த பரம பிதாவே, இந்த வயது சென்ற பயபக்தி யான பரிசுத்த மனிதனுடைய சாட்சியை நீர் செவிகொடுத்து கேட்டீர். எவ்விதம் அவருடைய மனைவி தன் கணவன் ஒரு பிரசங்கி யாக வேண்டும் என்று மன்றாடி கேட்டு கொண்டாளோ, அவ்விதமே இவ்வளவு காலம் அவர் பிரசிங்கியாயிருக்கிறார். ஒருசமயம் அவர் சிறந்த வைத்தியர்களால் கைவிடப்பட்டு, “ஒரு சில மணி நேரங்கள் கூட அவர் வாழ முடியாது, ஏனெனில் புற்றுநோய் அவருடைய சரீரத்தைத் தின்று விட்டது'' என்று அபிப்பிராயம் கூறினார்கள்; அவரால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை, பிதாவே, அவரை நீர் சுகப்படுத்தினீர். நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இதோ இன்னும் அவர் எங்கள் மத்தியில் இருக்கிறார். வார்த்தை பயிரிடப்பட்டவுடன், நீர் பாய்ச்சப்பட்டு பயிரை வளரச் செய்கிறது என்பதற்கு இது ஒரு அத்தாட்சியாயிருக்கிறது.  4. பிதாவே, இந்த பகலிலும் உம்முடைய வார்த்தையை நாங்கள் பயிரிடட்டும். கர்த்தாவே, இது உம்முடைய வார்த்தை. அது இருக்கிற விதமாக அதை பயிரிட நாங்கள் விரும்புகிறோம். உம்முடைய ஆவியாகிய தண்ணீரை நீர் அதற்கு பாய்ச்சும். எங்களை இச்செய்தியோடு உமக்கு சமர்ப்பிக்கிறோம். நீரே எங்களை உபயோ கப்படுத்த வேண்டுமாய் இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 5. இப்பொழுது, நாம் துரிதமாக துவங்குவோம். வயது சென்றவர்களும், மற்றவர்களும் எவ்விதம் கால் மரத்துப்போகும் அளவு நின்று கொண்டு, அசௌகரியத்தின் மத்தியிலும் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தனர் என்று இன்று காலை என் மனைவி என்னிடம் கூறினாள். உங்களுடைய உத்தமத்தைக் குறித்து நான் மிகவும் பாராட்டுகிறேன். இப்பொழுது நாம் நேரிடையாகவே செய்திக்குச் செல்வோம், நான் அதிக அவசரப்பட போவதில்லை. இருந்தாலும் என்னால் முடிந்தவரை இச்செய்தியை இப்பகலில் முடிக்கும்படி முயற்சி செய்ய விரும்புகிறேன். இக்கூட்டம் முடிந்தவுடன் நாங்கள் டிப்டான், ஜியார்ஜியா என்னும் இடத்தில் ஒரு பள்ளிக்கூடக்கட்டிடத்தில், நாளை ஒரு இரவு பிரசங்கத்திற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்திற்கு செல்லவிருக்கிறோம். அது ஒரு சாதாரணக் கூட்டம் தான். ஏனெனில் நான் இங்கு பிரசங்கித்த ஒன்றையே அங்கு பிரசங்கிப்பேன். அங்குள்ள ஜனங்களைக் கண்டு விசாரிக்கவே செல்கிறோம். ஏனெனில் அங்கு அவர்களுக்கு தொடர்ச்சியாக எந்த ஆராதனையும் அமையவில்லை.  6. ஆதியாகமம் 1ம் அதிகாரம் 11ம் வசனத்தில் இன்று காலை நாம் பேசிய “உரைக்கப்பட்ட வார்த்தையே மூலவித்து” என்ற பொருளைத் தொடர்ந்து கவனிப்போம். என்னுடைய செய்கைகள் ஏன் அவ்விதமாயுள்ளன என்பதை ஜனங்களாகிய உங்களுக்கு விளக்க முயற்சிப்பதே என்னுடைய இன்றைய நோக்கமா யிருக்கிறது. இச்செய்திகள் ஒலிப்பதிவாக்கப்பட்டு வெளியிடப்படப் போகிறது என்பதை நான் உணருகிறேன். ஒரு வேளை நான் இங்கிருந்து கடந்து சென்று விட்டாலும், இயேசுவின் வருகை தாமதித்தாலும் ஜனங்கள் அதை கேட்பார்கள். ஆனாலும் தேவனு டைய வார்த்தையே சத்தியம் என்பதை நான் விசுவாசிக்கிறேன் என்று கூறிடவே நான் விரும்புகிறேன்.  7. நாம் இப்பொழுது கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னர் தேசங்களைப் பற்றியெரியச் செய்த சுவிஷேகர்களின் ஊழியங்கள் என்ன வாயிற்று? எல்லாம் நின்றுவிட்டது போல் காணப்படுகின்றது. அவர்களெல்லாரும் ஊழியத்தினின்று சென்று விட்டார்கள் என்று நான் குறிப்பிடவில்லை. அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் பலன் ஏதும் காணப்படவில்லை. அவர்கள் ஒன்றையும் பெறமுடியவில்லை. பாருங்கள்? இது என்ன? நிலம் பயிரிடப்பட்டுவிட்டது என்பதே அதன் பொருள் 8. யாரோ ஒருவர் அந்த எபிரெய வார்த்தையை திரும்பவும் கூறுமாறு கேட்டுக்கொண்டார். யோவேல்: 2:28ல் இந்த முன்மாரியைக் குறித்தும் பின்மாரியைக் குறித்தும் கூறப் பட்டிருக்கிறது. முன்மாரி என்ற வார்த்தை எபிரெய மொழியில் மூரே (m-o-u-r-e-h) என்றுள்ளது. இதன் பொருள் 'போதகம்' என்பதாம். வேறு வார்த்தையில் கூறப்போனால், அது போதக மழையும், அறுவடை மழையுமாகும். நாம் ஏற்கனவே போதக மழையைப் பெற்றுக் கொண்டோம். இனி அறுவடை மழையைப் பெற்று கொள்ள ஆயத்தமாயிருக்கிறோம். விதையை விதைக்கும் போது பொழிவது முதல் மழையாகும். இதனால் பயிர் வளரத் தொடங்குகின்றது. பின்பு அது முதிர்ச்சியடையும் பருவத்திற்கு சற்று முன்பு மற்றொரு மழை வருகிறது. அதையே அறுவடை மழை யென்கிறோம். வசந்த கால மழையை நாம் அறிந்திருக்கிறோம். அதன் பின்பு ஜுன் மாதத்தில் ஒரு மழை பொழிகிறது, அதுவே உங்களுடைய பயிருக்கு அறுவடை சமயமாகும்.  9. இங்கு மழை என்பது ஆவியைக் குறிக்கிறது என்று நாம் கண்டோம். இப்பொழுது, அந்த முழுகாரியமும் என்னவா யிருக்கும் என்ற என் சிந்தனைகளைக் கொடுத்தவுடன் நாம் கலைந்து சென்றோம். அந்த மழை பொழியப்பட்டுவிட்டது என்றே நான் விசுவாசிக்கிறேன். ஏற்கனவே பயிரிடப்பட்டு விட்டதினாலேயே நாம் அமைதியாகிவிட்டோம். எது எங்கு விதைக்கப்படிருக்கிறது என்பதை நீங்கள் காணமுடியாது. ஏனெனில் அவை வானொலி, தொலைக்காட்சி, ஒளி நாடாக்கள் மூலமாகவும் வார்த்தையாகவும், தேசம் முழுமையும் விதைக்கப்பட்டிருக்கின்றன. விதைகள் விதைக்கப்பட்டுள்ளன. எவ்வித விதைகள் விதைக்கப்பட்டிரு கின்றனவோ அதையேயன்றி வேறொன்றையும் நீங்கள் பெற்று கொள்ள முடியாது. அதை புரிந்து கொண்டீர்களா? அது விதைக்கப் பட்ட விதையாகவேயிருக்கும். இப்பொழுது, அதின் மேல் ஆவியான மழை பொழியும். ஆனாலும் எத்தகைய விதையாக நிலத்தில் விழுந்ததோ அதே விதையையே அது அறுவடையின் போது கொண்டுவரும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 10. சரி. இந்த பெந்தெகோஸ்தே கூட்டமும், சுவிசேஷக் கூட்டமும் ஒன்றாக ஊழியம் செய்து ஒரு ஸ்தாபனமாக இணைந்து, பின்பு உலக ஐக்கிய ஆலோசனை சபையில் ஒரு அங்கமாக மாறும் என்பதனை நான் முன்னறிவிக்கிறேன். ஏற்கனவே அவர்கள் அவ்விதமாயிருக்கின்றனர். அவர்கள் மூலமாக மற்ற சபைகளுக்கு ஒரு ஆக்கப்பூர்வமான தடையுண்டாக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப் பட்ட அச்சபைகளைச் (union of churches) சார்ந்தது மட்டுமே நிலைத்திருக்கத்தக்கதான நிலைமை ஒன்று வருகிறதாயிருக்கிறது. ரோமமார்க்கமான மிருகத்தின் முத்திரையைப் பெற்று கொள்ளாத வர்கள் வாங்கவோ, விற்கவோ கூடாத அளவிற்கு ஒருதடை வரப்போகிறது என்று வேதம் கூறுகிறது. மிருகத்திற்கு ஒரு சொரூபம் கொடுக்கப்பட்டது. அதுதான் கத்தோலிக்க மார்க்கத் திற்கு விரோதமாய் பிரிந்த பிராடெஸ்டெண்ட் மார்க்கமாகும். இந்த சொரூபத்திற்கு (ஸ்தாபன சபைகள் --- தமிழாக்கியோன்) பேசத்தக்கதாக ஆவியையும் சத்துவத்தையும் கொடுக்க மிருகம் வல்லமையுள்ளதாயிருந்தது. ஸ்தாபன சபைகளாக ஐக்கிய ஆலோசனை சபையில் அவர்கள் சேரும்போது நடைபெறப்போவது அதுவே.  11. இங்கு அநேக வாலிபர்கள் இருக்கின்றீர்கள். ஒருவேளை இன்று பகல் அல்லது அடுத்த வருடம் இயேசு வரக்கூடும். அவர் எப்பொழுது வருவார் என்று நான் அறியாதவனாயிருக்கிறேன். ஆனால் ஒன்றை ஞாபகம் கொள்ளுங்கள்; அவர் வருவதை நான் பார்க்க ஜீவித்திராவிட்டால், (அவ்விதம் அவர் வருவதைக்காண நான் ஜீவித்திருப்பேன் என்று நம்புகிறேன்) இந்த என்னுடைய வார்த்தைகள் உங்கள் செவிகளையும் இருதயங்களையும் விட்டு அகலாதிருப்பதாக. பாருங்கள்? நான் இவைகளை கர்த்தருடைய நாமத்தினால் கூறுகிறேன். ஒரு சங்கம் (union) போன்று அது அமைந்து பின்பு ஆக்கப்பூர்வமான ஒரு தடையையுண்டாக்கும்; அவ்விதமாகவே ஸ்தாபனங்கள் முதிர்ச்சியடையும் என்று நான் என் இதயப்பூர்வமாக விசுவாசிக்கிறேன். இங்கு நம்மிடையேயுள்ள சபைகள் எல்லாம் மூடப்பட்டு, ஐக்கிய ஆலோசனைச் சங்கத்தின் அனுமதி அல்லது சான்றிதழ் இல்லாமல் பேசவோ, ஆராதனை நடத்தவோ முடியாத ஒரு நிலைமையுண்டாகும்.  12. இப்பொழுதே, அவ்விதமான காரியங்களும் கட்டுப் பாடுகளும் ஸ்தாபன சபைகளில் உண்டாயிருக்கின்றன. ஆம் ஐயா, அதை நீங்கள் பெற்று கொள்வீர்கள் என்பதற்கு அறிகுறியாக அவை அங்கேயுண்டாயிருக்கின்றன. அதிலேதான் அது முடிவடையும். கிறிஸ்துவின் ஒரு ஊழியக்காரனாக, நான் பெற்ற வார்த்தையின் வெளிப்பாட்டின் புரிந்துகொள்ளுதல் மூலமாக ஸ்தாபனங்கள் அவ்விதமான கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் என்று நான் முன் அறிவிக்கிறேன். எல்லா அடையாளங்களும் முடிவை சுட்டிக் காட்டுகின்றன. அதைக் குறித்து சற்று முன்புதான் நான் பிரசங்கித்தேன். 13. புத்தியில்லாத கன்னிகைகளும் கூட எண்ணெய்க்காக கதற ஆரம்பித்து விட்டார்கள். அவள் ஒரு கன்னிகையாயிருந்தாள் என்பதைக் கவனம் கொள்ளுங்கள். அவள் அவ்விதம் ஒரு கன்னி கையானால் அவளும் ஒரு சபையாயிருக்கிறாள். பாருங்கள். அதைக் குறித்து வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் கூறப் பட்டதை சற்று பின்பு பார்ப்போம், அவள் ஒரு கன்னிகையானால் அவள் சபையாகும். சபை என்னப்பட்டது ஒரு கன்னிகையாகும். பவுலும், “நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரு புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால்," என்று கூறினான். வெளிப்படுத்தின விசேஷத்தில் 17ம் அதிகாரத்தில் கூறப்பட்ட வேசியும் ஒரு சபையாகும். யோவான் அவள் அழகைக்கண்டு ஆச்சரியப்பட்டான். ஆனாலும் அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதை அவன் கண்டான். அவளால் கொல்லப்பட்ட பரிசுத்தவான்கள். இது உண்மை. 14. ஹிப்போ நாட்டை சேர்ந்தவரான பரி. அகஸ்டியன் என்பவரின் காலத்திலிருந்து, ரோமன் கத்தோலிக்க சபை சுமார் 68,000,000 மில்லியன் ப்ராடெஸ்டண்ட் கிறிஸ்தவர்களை தன்னு டைய கொள்கையை ஒப்புக்கொள்ளாததினால் கொல்லப்பட்டனர் என்று புனித தியாகிகளின் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதைக் கண்டேன்” என்று வேதம் கூறினதில் எந்த விதமான ஆச்சரியமும் இல்லை. 15. "உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத்தொண்டு செய்கிறவனென்று நினைக்கும் காலம் வரும்" என்று இயேசு கூறவில்லையா? அதைக் குறித்து அவர்கள் மிக உண்மையாயிருக் கின்றனர். அவர்கள் மாய்மாலக் காரர்கள் அல்ல. அவர்கள் அவ்விதமாகப் போதிக்கப்பட்டு, அதையே விசுவாசித்தார்கள், வார்த்தை விதைக்கப்பட்டபின்பு, அது பயிரை நிச்சயமாக வெளியே கொண்டு வரத்தான் வேண்டும். நிச்சயமாக. நாம் விதையைக்குறித்து தியானித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுதான் நாம் சிந்திக்கின்ற பொருளாகும். உரைக்கப்பட்ட வார்த்தையே ஆரம்ப வித்தா யிருக்கிறது. பாருங்கள்? அது திரும்பவும் இந்த வார்த்தைக்கு வந்து, பின்பு வார்த்தை என்ன கூறுகிறதோ அதை பிரதியுற்பத்திச் செய்யத்தான் வேண்டும். 16. அதன் காரணமாகத்தான் நான் தெய்வீக சுகமளித்தலிலும் தரிசனங்களிலும், தேவதூதர்களிலும், இச்செய்தியிலும் விசுவாசம் கொண்டுள்ளேன். ஏனெனில் அது தேவனுடைய வார்த்தை யினின்று வருகிறதாயிருக்கிறது. தேவவார்த்தைக்குப் புறம் பேயிருந்து வருகிற யாதொன்றையும் நான் விசுவாசிக்கிற தில்லை. ஒரு வேளை அது சரியாகவும் இருக்கலாம். ஆனாலும் நான் தேவன் கூறியதில் நிலைகொண்டிருந்து, நான் சரியாக இருக்கிறேனா என்று நிச்சயப்படுத்திக்கொள்வேன். தேவன் தாம் விரும்பினதை செய்ய முடியும். ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். அவருடைய வார்த்தையில் நான் நிலைகொண்டிருக்கும் வரை அதுவே சரியான தாகும் என்று நான் அறிந்திருக்கின்றேன். நான் அதை விசுவாசிக்கிறேன். 17. இந்த புத்தியில்லாத கன்னிகை ஒரு பெண்ணாகவும், ஒரு சபை யாகவும் இருக்கிறாள். ஆனால் அவள் புத்தியில்லாதவளாயிருந்தாள் என்பதை கவனியுங்கள். பாருங்கள்? அவள் மந்தபுத்தியுள்ளவளா யிருந்தாலும் தன்னை மணவாட்டி என்று அழைத்துக்கொள்கிறாள். மூன்று என்னும் எண்ணில் பரிபூரணம் அமைந்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவனுடைய தொழில்களான பிதா குமாரன், பரிசுத்த ஆவி மூன்று என்ற பரிபூரணத்தில் அமைந் திருக்கின்றது. தேவனாகிய பிதா அக்கினி ஸ்தம்பத்தில் ஜீவித்தவரா யிருந்தார். அவர் அங்கிருந்து இஸ்ரவேலரை தம்மிடம் இழுக்க முயற்சித்தார். ஆனால் அவர்களோ வரவில்லை. பிதாவாகிய தேவன் குமாரனில் ஜீவித்தார். அதே தேவன்தான், தேவகுமாரனாகவும், தேவனுடைய தற்சொரூபமாகவும், வெளிப்பட்ட தேவனுடைய வித்தாகவும் திரும்ப வந்து ஜனங்களை தம்மிடம் இழுக்க முயற்சித்தார். ஆனால் அவர்களோ அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். பரிசுத்த ஆவியும், ஆரம்பத்தில் தேவகுமாரனில் இருந்த அதே தேவனாயிருந்து இப்பொழுது மற்றொரு தேவத் தொழிலான பரிசுத்த ஆவியாக இந்த கடைசி நாட்களில் சபையில் ஜீவித்துக்கொண்டு, வார்த்தையை (மற்ற இரண்டு அலுவல்களின் மூலமாக, உரைக்கப்பட்ட வார்த்தையைக் கொண்டுவந்தது போல) ஜனங்களுக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனால் ஜனங்களோ அதை புறம்பாக்குகிறார்கள். அது அதே காரியம்தான். ஒரு தேவனில் மூன்று அலுவல்கள் அல்லது மூன்று வெளிப்படுத்தல்கள் கிரியையில் காணப்பட்டன. இன்று தேவன் தம்முடைய ஜனங்களில் இருந்து கிரியை செய்யும் காரியம் தேவனே கிரியைச் செய்கிறதாகும். பாருங்கள்? அது ஜனங்களில் தேவன் இருப்பதைக் குறிக்கிறது,  18. கர்த்தருக்குச் சித்தமானால் நாளையதினம் நான், "தேவன் தம்முடைய பிரபஞ்சத்திலும், தம்முடைய குமாரனிலும், தம்முடைய ஜனங்களிலும்” என்ற பொருளின் மேல் பிரசங்கிக்க விருப்பம் கொண்டுள்ளேன். நான் அதன்பேரில் முன்பே பேசியிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.  19. இந்த புத்தியில்லாத கன்னிகை, எண்ணெய் வாங்கச்சென்ற போது..... அவள் எண்ணெய் வாங்க அனுப்பப்பட்டாள். அவள் அவ்விதம் வாங்கச்சென்ற பின்புதான் காலம் அதிகம் கடந்து விட்டது என்பதை கண்டாள். ஏன்? ஏன் நண்பனே? ஏனெனில் வித்துக்கள் ஏற்கனவே விதைக்கப்பட்டாயிற்று. பாருங்கள்? சோதோமின் முடிவு நேரத்திற்கென மூவர் வந்துவிட்டனர். எப்பொழுதும் எல்லா நேரங்களிலும் மூன்று என்ற எண்தொடர்ந்து வருகின்றது. கிறிஸ்துவின் வருகை மூன்று முறை நிகழும். தம்முடைய மணவாட்டியை மீட்பதற்கென அவர் முதலில் வந்தார். இரண்டாவதாக தம்முடைய மணவாட்டியை எடுத்துக் கொள்ள வருகிறார். மூன்றாவதாக ஆயிரம் வருட அரசாட்சியில் தம்முடைய மணவாட்டியுடன் வருகிறார். எல்லாம் மூன்றிலிருக் கின்றது. மூன்று என்பது பரிபூரணமான எண்ணாக இருக்கிறது. ஐந்து என்னும் எண் கிருபையையும், ஏழு என்பது முடிவையும், பன்னிரெண்டு என்பது தொழுதுகொள்ளுதலையும் இருபத்து நான்கு - அல்லது - அல்லது - நாற்பது என்பது சோதிக்கப்படுதலையும், ஐம்பது என்பது விடுதலையையும் குறிக்கின்றதாயிருக்கின்றது. பெந்தெகோஸ்தே என்னும் வார்த்தை விடுதலை என்று பொருள் படும் - ஏனெனில் அது ஐம்பதாவது நாளில் சம்பவித்தது. பாருங்கள்? 20. தேவன் தம்முடைய எண்களிலும், தம்முடைய வார்த்தையிலும், தம்முடைய கிரியையிலும் பரிபூரணராயிருக்கிறார்; அவர் எல்லாவற்றிலும் பரிபூரணராயிருக்கிறார்---ஏனெனில் அவர் ஒரு பரிபூரணமான தேவன். ஆம், இந்த கன்னிகைகளையும், அழைக்கப் பட்ட வேசியையும் நாம் வேதத்தில் காண்கிறோம் (என்னுடைய சகோதரிமார்கள் என்னை மன்னிக்கவேண்டும். ஏனெனில், வேதம் அவ்விதம் கூறகின்றது. இன்று நான் மிகவும் வெளிப்படையாக பேசுகிறேன்), வேதம் அவளை மகாவேசியென்றும் வேசிகளின் தாய் என்றும் அழைக்கின்றது. இரண்டும் ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன. 21. மகாவேசி என்றும், (அது ஒருசபை) வேசி என்றும், (அதுவும் ஒருசபை) மணவாட்டி என்ற ஒரு சபையும் வேதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதை நீங்கள் கவனியுங்கள். (ஆங்கிலத்தில் WHORE என்றும் HARLOT என்றும் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு தமிழில் மகாவேசியென்றும், வேசியென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது --- தமிழாக்கியோன்) இங்கேயும் அந்த மூன்று. அவர்கள் யார் யாருடைய மணவாட்டிகள் என்றும் அவர்கள் எவ்விதம் தேவனால் புறக்கணிக்கப்பட்டார்கள் என்பதையும், கர்த்தருக்குச் சித்தமானால் சற்று பின்பு பார்ப்போம்.  22. முதலில் நான் ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்ல விருப்பமாயுள்ளேன். அதை நான் சற்று மறந்து போனேன். கம்யூனிசத்தைக் குறித்து ஒரு போதும் நீங்கள் பயப்படவேண்டாம். ஏனெனில் கம்யூனிசம் என்பது தேவனுடைய கரங்களில் இருக்கும் கிரியைக்குரிய ஒரு ஆயுதம்தான். கீழ்ப்படியாத இஸ்ரவேலரை ஒடுக்க தேவன் நேபுகாத்நேச்சாரை அனுப்பியது போன்று ஒரு காரியம்தான் அது. தீர்க்கதரிசி என்ன வரப்போகிறதென்று கூறி ஜனங்களைத் தங்கள் தேசத்தில் இருக்கும் படியாகவும், தேவனை நினைவுகூறுங்கள் என்று கூறின பின்பும், இஸ்ரவேலர் அவன் வார்த்தைக்குச் செவிகொடாமல் தேசத்தை விட்டு சென்று விட்டார்கள். அப்பொழுது நேபுகாத்நேச்சார் வந்து அவர்களைப் பிடித்துக் கொண்டான்.  23. கம்யூனிசம் எழுப்பப்பட்டதற்கு காரணம் ருஷியா தேசத்திலிருந்த கத்தோலிக்க சபையின் முறைகேடான வேசித்தன மான கிரியைகளேயாகும். எல்லா பணத்தையும் அவர்கள் எடுத்துக்கொண்டு, எல்லாக் காரியங்களையும் ஒன்று சேர்த்தனர். அதுதான் அதன் முடிவாயிருந்தது. அதுவே கம்யூனிசத்தை ஏற்படுத்துவதற்கு சரியான காரணமாயிருந்தது.  24. ஃபின்லாந்தில், மரித்துப்போன அந்த சிறுவன் உயிரோடு எழுப்பப்பட்ட போது, அங்கு நின்று கொண்டிருந்த பெரிய கம்யூனிஸ்டு சிப்பாய்களை நான் கடந்து சென்றபோது, அவர்கள் தங்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட எனக்கு வணக்கத்தை ஏறெடுத்து, "இத்தகைய தேவனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்" என்று கூறினார்கள் --- ஒரு தேவன் மரித்தவனை உயிரோடு எழுப்பி தம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வாரானால், நிச்சயமாக அத்தகைய தேவனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். பாருங்கள்? ஆனால் வெறுமையாக ஆலயத்திற்குச் சென்று, பிசாசுகளைப் போல் வாழ்ந்து, ஏனைய உலகத்தாரைப் போல் ஜீவித்து, ஒன்றும் செய்யக் கூடாதவர்களை அவர்களால் நம்ப முடியாது. உண்மையுள்ளவனாய் நான் உங்களுக்குக் கூறுவது: நான் ஒரு கம்யூனிஸ்டுமல்ல, ஒரு அவிசுவாசியும் அல்ல. அதுதான் உண்மை . அது உண்மை . பாருங்கள்? 25. கம்யூனிசம் உலகத்தை ஆளும் என்பதற்கு சான்றாக ஒரு தேவவசனமும் கிடையாது, ஆனால் ரோமமார்க்கம் உலகத்தை ஆளும் என்று அநேக வசனங்கள் கூறுகின்றன. ஆகவே உங்கள் கவனத்தை ரோமமார்க்கத்தின் மேல் வையுங்கள். 26. நேற்றிரவு, அந்த கென்டகியைச் சேர்ந்த அரசாங்க சபை அங்கத்தினன் (Senator) (கத்தோலிக்க மார்க்கத்தைச் சேர்ந்தவர்) ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒரு மனிதன் (இவர் ஒரு ப்ராடெஸ்டண்டு) கென்டகி மாநிலத்தின் பிரதிநிதியாயிருப்பதைக் குறித்து, "அவர் ஒரு ப்ராடெஸ்டண்டாக இருப்பதினால் ஒரு நன்மையும் இல்லை” என்று கூறினார். அவர்கள் எவ்வளவு துணிகர மடைய முடியுமோ அவ்வளவு துணிகரமுள்ளவர்களாகி வருகிறார்கள். அதனோடு மற்றக் காரியங்களும் செல்லுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  27. புத்தியில்லாத கன்னிகைகளின் நேரம் இது --- இது நாம் காண்கிறோம். இதற்கு முன்பு இவ்விதம் சம்பவிக்கவில்லை. காலா காலங்களில் வந்த ஒரு போதகனும் நாம் இன்று பேசும் காரியங்களைப் பேசவில்லை. 28. புத்தியில்லாத கன்னிகைகளும், கலப்பினமான பெந்தெ கோஸ்தேயினரும் (உலகத்தின் காரியங்களோடு கலப்பினமாக்கு வது)..... நினைவில் கொள்ளுங்கள். நானும் ஒரு பெந்தெகொஸ் தேயைச் சேர்ந்தவன்தான். ஆனால் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத் தைச் சேர்ந்தவனல்ல. ஸ்தாபனத்தைக் குறித்து நான் கோபம் கொள்கிறேன். நான் அனுபவத்தில் (Experience) ஒரு பெந்தகொஸ் தேவைச் சேர்ந்தவன். பெந்தெகொஸ்தேயின் அனுபவத்தை ஜனங்கள் பெற்றிருப்பார்களானால் அவர்கள் மெத்தோடிஸ் டானாலும், பாப்டிஸ்டானாலும், கத்தோலிக்கரானாலும் அவர்களும் பெந்தெகொஸ்தேயினரே. பெந்தெகோஸ்தேவை நீங்கள் ஸ்தாபனமாக்க முடியாது. ஏனெனில் அது ஒரு அனுபவமாயும் தேவனாகவும் இருக்கிறது, தேவனை நீங்கள் ஸ்தாபனமாக்க முடியாதே! 29. இப்பொழுது, இப்பொழுது, புத்தியில்லாத கன்னிகைகள் தங்கள் காலத்தில் எழுந்திருந்து எண்ணெயை விரும்பி பின்பு காலமானது தங்களுக்கு மிகவும் கடந்து விட்டது என்பதைக் காண்பார்கள் என்பதைக் குறித்தும் இவை சம்பவிக்கும் என்பதைக் குறித்தும் இயேசு நமக்குக் கூறியிருக்கிறார். பாருங்கள்? இப்பொழுது இந்த மூன்று சபைகளையும். கவனியுங்கள். அங்கே அந்த மகாவேசி காணப்படுகின்றாள்; ஒன்று மில்லாதற்காக அவள் அங்கு வரவில்லை. அவள் தன்னைத்தானே மையப்படுத்திக் கொண்டிருக்கிறாள். ப்ராடெஸ்டண்ட் சபையாகிய புத்தியில்லாத கன்னிகையும், மணவாட்டியும் அங்கே காணப்படுகின்றார்கள். பாருங்கள்? இப்பொழுது, கடைசி நாட்களில் காணப்படும் மூன்று சபை நிலையாக உள்ளது. 30. இப்பொழுது கவனியுங்கள், கர்த்தருக்குச் சித்தமானால் நாம் அவைகளை ஆதியாகமம் தொடங்கி இங்கே வெளிப்படுத்தின விசேஷத்தில் சபை எடுத்துக்கொள்ளப்படுதல் வரை பொருத்து வோம். 31. இங்கே எல்லாக் காரியங்களும், பெந்தகோஸ்தே ஸ்தாபன மும் காண்பதற்கு உண்மையைப் போல் இருக்கின்றது. "நான் பெந்தெகொஸ்தேயை சேர்ந்தவன். அதைப் பற்றி என்ன?" என்று நீ கேட்கலாம். அது பன்றியின் தொழுவத்தில் நீ வாழ்ந்திருந்ததைக் காட்டிலும் பரவாயில்லை என்று அர்த்தமாகாது! ஒரு சிறிதளவுகூட அதற்கும் இதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அது வெறும் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருக்கிறது. ஆம். நீ எதைச் சேர்ந்தவனாயிருந்தாலும் சரி. அதைக் குறித்து ஒரு காரியமும் இல்லை, நீ தேவ ஆவியினால் பிறவாமல் ... பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்து (நீ தேவ ஆவியினால் பிறவாத காரணத்தால்) எல்லா தேவனுடைய வார்த்தையையும் விசுவாசியாவிட்டால், நீ இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறவில்லை. அது உண்மை அது நிச்சயமான உண்மை . பரிசுத்த ஆவி... நீ சத்தியத்தைக் கேட்கும்போது பரிசுத்த ஆவியானவர் உன்னை சத்தியத்திற்கு நேராக வழிநடத்த வில்லையானால், பின் மற்றொரு ஆவி அங்கிருந்து உன்னை சத்தியத்திற்குப் புறம்பாக்குகிறது. ஆகவே உன்னில் நீ பெற்றிருக்கிறதான ஆவி பரிசுத்த ஆவியில்லை. ஓ! ஆம்.  32. சரி. யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல (அதைக் குறித்து நாம் பேசினோம்), இக்காரியங்களும் கடைசி நாளில் எவ்விதம் நடக்கும் என்பதை நாம் பார்த்தோம். பின்பு கடைசிக் குறிப்பாக, தேவன் ஒவ்வொரு விதையையும் அதனதன் ஜாதியின்படியே சிருஷ்டித்தார்; அவருடைய வித்தும் அவ்வாறே என்றும் பார்த்தோம். பின்பு அவர் தம்முடைய மனிதனை சிருஷ்டித்தபோது அவருடைய ரூபத்தின்படியும் சாயலின்படியும் சிருஷ்டித்தார். அது அவருடைய வார்த்தையின் வித்தாயிருந்தது. இயேசு மாம்சமானபோது, அவர் தேவவார்த்தையின் மாம்சமா யிருந்தார். நாமும் கூட தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்ளும் போது, நம்முடைய மாம்சத்தில் தேவ வார்த்தை யாகிறோம். பாருங்கள்? சபையானது அந்த நிலைமையில் தான் இருக்க வேண்டும். 33. இப்பொழுது, தேவன் மனிதனை தமது சாயலின்படி சிருஷ்டித்தபின்..... "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார் ...” அவர் இதைச் செய்தபின்பு... (இதைப் பெற்றுக் கொள்ளத் தவறாதீர்கள்) தேவன் தம்முடைய மனிதனை தமது உரைக்கப்பட்ட வார்த்தையின் மூலம் சிருஷ்டித்தார் --- அவன் ஒரு பரிபூரணமான மனிதனாயிருந்தான், ஆனால் அவனிலிருந்து ஒரு மணவாட்டியாகிய ஒரு உப சிருஷ்டியை (By-Product) தேவன் எடுத்தபொழுது அங்கே விழுந்து போதல் சம்பவித்தது. அதுதான் இன்றைய உபத்திரவத்திற்குக் காரணம். நீங்கள் ஆவிக்குரியவர் களாயிருந்தால் இதை ஏற்கனவே புரிந்து கொண்டிருப்பீர்கள். பாருங்கள், பாருங்கள்? அவன் ஆதாம் வஞ்சனைக்குள்ளாகவில்லை; ஆதாம் வார்த்தையை அவிசுவாசிக்கவில்லை. அவனுடைய மணவாட்டியே அவிசுவாசத்தினால் சோதனைக்குள்ளானாள். இயேசு வார்த்தையை அவிசுவாசிக்கவில்லை. ஏனெனில், அவரே வார்த்தை யாயிருந்தார். ஆனால் அவருடைய மணவாட்டியே வார்த்தையை அவிசுவாசித்தாள்.  34. கலப்பினம் என்பது, இங்குதான் வருகின்றது. கலப்பினம் ஆதாமின் மூலம் உண்டாகவில்லை. இதைக் காணத்தவறும் உங்களுக்கு வெட்கம் உண்டாகட்டும். பாருங்கள்? அது ஆதாமின் தவறல்ல. ஆதாமிற்கும் அதற்கும் எந்தவித சம்மந்தமில்லை. மரணம் ஆதாமின் மூலம் உண்டாகுமானால், அது தேவனால் வருகிறது என்று பொருள்படும். மரணம் தேவனுடைய வார்த்தையினால் உண்டாகிறதில்லை, வார்த்தையை ஸ்தாபனத்தின் கொள்கைகளின் மூலம் கலப்பினமாக்கும் போதே மரணம் உண்டாகிறது. கிறிஸ்துவுக்கு பதிலாக கொள்கைகளும், வார்த்தைக்குப் பதிலாக கோட்பாடுகளும் மரணத்தைப் பிறப்பிக்கின்றது. அது வார்த் தையினால் வரவில்லை. வார்த்தையே ஜீவன் - "என்னுடைய வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயுமிருக்கிறது'' என்று இயேசு கூறினார். ஆவியானது வார்த்தையை உயிர்ப்பித்து அதற்கு ஜீவனைக் கொடுக்கின்றது, அதைக் கலப்பினமாக்கும் பொழுது அங்கேதான் மரணம் சம்பவிக்கின்றது. ஆதாம் தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாயும் அவருடைய ஆரம்ப வித்தாயுமிருந்திருப்பா னென்றால் (ஏனெனில் ஆதாம் சிருஷ்டியில் முதலாவது சிருஷ்டிக்கப்பட்டவன்) இரண்டாம் ஆதாமும் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உண்டாக்கப்பட்டவரே. புரிந்துக் கொள்கிறீர் களா? ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை; அவனுடைய மணவாட்டியே வஞ்சிக்கப்பட்டாள். கிறிஸ்து இன்று வஞ்சிக்கப்படவில்லை, வார்த்தை வஞ்சித்துக் கொண்டிருக்கவில்லை. மணவாட்டியே வார்த்தையைக் கொண்டு வஞ்சித்துக் கொண்டிருக்கிறாள். உங்களால் இதைக் காண முடிகிறதா?  35. இப்பொழுது, இரண்டாம் ஆதாமிற்கு அடையாளமாக அவர் அவனுக்கு ஒரு மணவாட்டியைத் தந்தார். முதலாம் ஆதாமிற்கு ஒரு மணவாட்டியை அவர் தந்தார், அவள் விழுந்து போனாள். இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவுக்கும் ஒரு மணவாட்டியை அவர் தந்தார், அவளும் விழுந்து போனாள். அது நிச்சயமானது. ஏன்? அவள் ஆரம்ப சிருஷ்டியில் இல்லாமல் ஒரு உப-சிருஷ்டியாக இருந்தமையால் விழுந்து போனாள். இன்றுள்ள மணவாட்டியும் ஒரு உப- சிருஷ்டியே. அவள் தன்னை மணவாட்டி என்று கூறிக்கொள்கிறாள். ஆனால் அவள் யார்? ஸ்தாபனம் என்னும் வஸ்துவால் அவள் உண்டாக்கப்பட்டவள்; தேவவார்த்தையினால் அல்ல. போதுமான தேவவார்த்தைகள் அதில் அடங்கி உண்டாக்கப் பட்ட ஒரு உப-சிருஷ்டியைப் போன்ற மாய்மாலத்தன்மையை அது உண்டாக்குகின்றது. ஏவாள் ஏறத்தாழ எல்லா வார்த்தையையும் விசுவாசித்தாள். ஆனால் ஒரு பாகத்தை அவிசுவாசித்தாள். இன்று மத்தேயு 28:19ஐ அப்போஸ்தலர் 2:38 டோடு சம்பந்தப்படுத்தினால் அவள் குழம்புகிறாள். பாருங்கள். இது, அவள் இடறக் கூடிய நூற்றுக்கணக்கான மற்றவைகளில் ஒரு சிறிய இடம்தான்.  36. ஆதாமின் மணவாட்டி இரண்டாம் ஆதாமின் மணவாட்டிக்கு ஒப்புவமையானவள். தேவன் ஆதாமையும் ஏவாளையும் பார்த்து, "பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள்" என்று கூறினார். --- ஆதாமின் மணவாட்டியினால் அந்தமட்டும் காத்திருக்க முடியவில்லை. அது இனி சம்பவிக்கப் போகிற ஒரு காரியமா யிருந்தது --- அது ஒரு வாக்குத்தத்தம். ஏவாள் இன்னுமாக ஆதாமின் மணவாட்டியாகவில்லை. ஏனெனில் ஆதாம் அவளோடு இன்னும் வாழ்க்கை நடத்தவில்லை; கிறிஸ்துவின் மணவாட்டியும் அவருக்கு இன்னும் மணவாட்டியாகவில்லை, ஏனெனில் கலியாண விருந்து இனி சம்பவிக்க வேண்டியதாயிருக்கிறது. புரிந்து கொண்டீர்களா? கவனியுங்கள். ஓ , இது மிகவும் ஐசுவரியமானது! ஏவாள் அவசரப்பட்டுவிட்டாள், பின் என்ன செய்தாள்? - அவள் தன் வித்தை கலந்துவிட்டாள். தன்னுடைய வித்தை சர்ப்பத்தின் வித்தோடு கலந்துவிட்டாள், அவள் அதை செய்த பின்பு, உலகுக்கு எதைக் கொண்டு வந்தாள்? மரணம் என்ற ஒரு பிள்ளையை உலகுக்குக் கொண்டு வந்தாள், அது ஒரு தாறுமாறான பிள்ளை --- அதன் பின்பு ஏற்பட்ட எல்லா பிள்ளைகளும் தாறுமாறாக்கப்பட்டவர்களே. கன்னியாக பிறந்த இயேசு கிறிஸ்துவின் சபை பெந்த கோஸ்தே நாளில் கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்ட பின்பு ரோம சபையின் நாட்களில் தாறுமாறாக்கப்பட்டது ---அவள் என்ன செய்தாள்? அவள் எல்லைக் கோட்டைத் தாண்டி ரோம் சபையின் கொள்கையோடு தன்னைக் கலந்து விட்டாள். ப்ராடெஸ்டண்டு சபையும் அதே காரியத்தைத்தான் செய்தாள். அவளால் பொறுத்திருக்க முடியவில்லை. 37. சுத்தமான, நல்ல ஒரு வாலிபனுக்கு ஒரு பெண் கலியாணத்திற்கென்று நிச்சயம் பண்ணப்பட்ட பின்பு அவர்கள் கலியாணம் முடிந்து கூடிவரும் முன்பே அவள் வேறொருவன் மூலமாய் கர்ப்பவதியாக காணப்பட்டாள். விவாக நிச்சயம் செய்யப்பட்ட அவளுடைய சொந்த சரீரமும், வித்தும் வேறொரு மனிதனுடைய வித்தினால் நிறையப்பட்டிருந்ததை நிச்சயிக்கப் பட்ட அவள் கணவன் கண்டான். என்னே ஒரு அவமானம்! ஆதாமும் சரியாக அதையே கண்டான். 38. கிறிஸ்துவும் அதையே கண்டார். மணவாட்டியினால் காத்திருக்க முடியவில்லை. இன்றைக்குள்ள ஜனங்களோடும் அவ்வித மேயுள்ளது. உண்மையான பரிசுத்த ஆவி சபையை ஆண்டு கொள்ள ஜனங்கள் காத்திருக்கிறதில்லை. தம்முடைய ஜனங்கள் மத்தியில் கிறிஸ்து தம்முடைய உண்மையான உயிர்த்தெழுந்த வல்லமையை வெளிப்படுத்த ஜனங்கள் கர்த்தரிடத்தில் காத்திருப்பதற்கு பதிலாக, சபையானது அதிக அங்கத்தினர்களால் நிறையத் தக்கதாக, ஆரம்ப அடையாளம், அன்னியபாஷை பேசுதல் போன்றவைகளை யுத்தியாக உற்பத்தி செய்ய விழைகின்றார்கள். அவளால் பொறுத்திருக்க முடியவில்லை. 39. அவள் செய்தது என்ன? அவள் எல்லைக் கோட்டைத்தாண்டி சென்று ஸ்தாபனத்தினால் கர்ப்பவதியானாள், முதாலாவது, தேவ கூட்டு சபை அவ்விதமாக கெட்டு போனாள், பின்பு ஒருத்துவ சபையும் இவ்விதமாக மற்றவர்களும் தொடர்ந்து கெட்டு போனார்கள். இப்பொழுதோ தன்னை மணவாட்டி என்று அழைத்துக் கொள்ளும் இவள் போலியான எல்லாக் காரியங் களினாலும் கர்ப்பவதியானாள். அவமானம். பெண்களும், ஆண்களும், பிரசங்கிகளும் சிறிதளவேனும் தங்கள் கவனத்தை தேவ வார்த்தைக்கு திருப்பாமல் ஒன்றுமில்லாத இவ்வுலகத்திற்கு செவிகொடுத்து, பின்பு தங்களை மணவாட்டி என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.  40. அது என்ன? அவள் கர்ப்பவதியானாள். கிறிஸ்துவின் மணவாட்டி உலகத்திற்கேற்றபடி உடை உடுத்துதல், உலக வழக்கமாய் ஜீவித்தல், பெரிய அழகான ஆலயங்களைக்கட்டிக் கொள்ளுதல் போன்றவைகளினால் கர்ப்பவதியாகி இருக்கின்றாள். இக்காரியங்களெல்லாம் அவள் யார் என்பதை தெரியப்படுத்து கின்றது. அவள் பிசாசினால் உண்டாயிருக்கிறாள் ! இதைத்தான் பிசாசும் ஆரம்பத்தில் செய்தான், அவன் ஒரு அழகான ராஜ்ஜியத்தைப் பரலோகத்தில் கட்ட முயற்சித்து தேவனால் உதைத்து தள்ளப்பட்டு புறம்பாக்கப்பட்டான். நவநாகரீகமான கிறிஸ்துவின் மணவாட்டியும் அவ்வாறே உதைத்து தள்ளப்பட்டு புறம்பாக்கப்பட்டாள். ஏனெனில் அவள்தன் கன்னித்தன்மையைக் காத்துக்கொள்ளாமல் ஒரு வேசியாகிவிட்டாள். இது மிகவும் ஆழமாயிருக்கிறது. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.  41. ஆதாமின் மணவாட்டி காத்திராமல் தன்னுடைய வித்தை சட்டவிரோதமாக, சட்டவிரோதமாக கலந்து விட்டாள். நாம் தேவனுடைய வார்த்தையை மட்டும் விசுவாசிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது! 42. சகோதரர்களே, இங்கும், ஒலிநாடாவிலும் கேட்டுக் கொண்டிருக்கும், சகோதரர்களே, நான் ஏன் தேவனுடைய வார்த்தைக்காக வார்த்தைக்கு வார்த்தைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை உங்களால் காண முடிகின்றதா? தேவன் சத்தியபரர் என்று நான் விசுவாசிக்கிறேன் என்பதை நான் ஏற்கனவே உங்களுக்குக் கூறியிருக்கிறேன். தேவன் தம்முடைய வேதத்தைப் பாதுகாக்கிறார். அவர் இந்த உலகத்தை ஏதாவது ஒன்றைக் கொண்டு நியாயந்தீர்க்க வேண்டுமானால் அது வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமேயாகும், இந்த வார்த்தைதான் மாம்சமாகி இயேசு கிறிஸ்துவாக காணப்பட்டது ...... இது ஆழமாக உங்களில் பதிய விரும்புகிறேன். வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். 43. இந்த மணவாட்டியை கலப்பினமாக்கப்பட்டவளாக அவர் காண்கிறார். இத்தகைய ஒருவளை அவர் கலியாணம் செய்து கொள்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார். ஏனெனில் அவர் பரிசுத்தராயிருக்கிறார். அவளால் பொறுத்திருக்க முடியவில்லை. சட்டவிரோதம், ஆதாம் அதைத்தான் கண்டான். 44. சகோதரர்களே, சகோதரிகளே, திரும்பிப்பாருங்கள்... நீங்கள் ஏதாகிலும் ஒரு நிழலைப் பார்ப்பீர்களானால், அது வர இருக்கும் உண்மையான ரூபத்தின் சரியான தோற்றம் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். ஆதாம் தன் மணவாட்டியை கர்ப்பவதியாக காண நேர்ந்தது என்பதை கவனியுங்கள், அவளோ, "சர்ப்பம் என்னை வஞ்சித்தது,” என்று கூறினாள்.  45. கர்த்தருக்குச் சித்தமானால் இன்னும் சிறிது நேரத்தில் நான் இப்பொருளை இரண்டு வித கருத்தாக பேசி, பாருங்கள்? அது வேறு எந்த விதமாகவும் இருக்கமுடியாது என்பதை உங்களுக்குக் காட்டப் போகிறேன். 46. ஆதாமின் மணவாட்டி காத்திராமல் முதலில் சென்று கிரியை செய்தாள். அதைபோல இன்றுள்ள மணவாட்டியும் இருக்கிறாள். "கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக” என்று கூறி ஏதாகிலும் ஒன்றை உற்பத்தி செய்ய விரும்புகிறாள். அதை பிரசங்க பீடத்தில் செய்ய விரும்புகிறாள். அவள் எல்லாவற்றையும் பெற்றிருக்க வேண்டும். பாருங்கள்? அவள் என்ன செய்துக்கொண்டிருக்கிறாள்? அவள் ஏதோ ஒன்றை உற்பத்தி செய்துக்கொண்டிருக்கிறாள். 47. அது எங்கே போகிறது என்று கவனியுங்கள். அது ஒன்றுமில்லையென்று உங்களால் காணமுடியும். அது போலியா யிருக்கிறது. அது முற்றிலும் உண்மை . அது அவ்விதம் இல்லாம லிருந்தால், இவ்வுலகமும், சபையும் தேவனுடைய வல்லமை யென்னும் அக்கினியால் கொழுந்துவிட்டு எரியும்; ஓ...., மரித்தோர் எழுந்திருத்தல், போன்ற பல்வேறு அற்புதங்களும் அடையாளங் களும் நடக்கும். ஆனால் கிறிஸ்து தம்முடைய வித்தை அவளில் விதைக்கும் முன்பே அவள் வேறொன்றினால் விதைக்கப்பட்டு விட்டாள். அவள் எதைக் கொண்டிருக்கிறாள்? உலகம், ஸ்தாபனம் என்னும் களையான வித்தையே தன்னில் கொண்டிருக்கிறாள். அதன் காரணமாகத்தான் இன்று அவள் தன்னுடைய அறுவடையை அறுத்துக் கொண்டிருக்கிறாள். இது உங்களை குழப்பாது என்று நான் நம்புகிறேன். ஆனால் இது உங்களில் எங்கு இறங்க வேண்டும் என்று தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறாரோ அங்கு இது செல்லும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். பாருங்கள்? 48. சட்டவிரோதமாக தன்னுடைய வித்தை வார்த்தையிடம் கலந்து விட்டாள். அவள் எதைக்காண முயற்சித்தாள்? (இப்பொழுது விழிப்போடு கவனியுங்கள் ) அவள் எதன்பின் சென்றார்? ஞானம்! ஞானம்! அதைத்தான் இன்றுள்ள மணவாட்டியும் செய்திருக்கிறாள். தன்னுடைய பிரசங்கிகளை வேதப்பள்ளிகளுக்கு அனுப்பி வேதத்தில் காணப்படாத மனோதத்துவம் போன்ற எல்லாக் காரியங்களாலும் அவர்களை பயிற்றுவித்து, செயற்கை முறையாக குஞ்சு பொறித்துக் கொண்டிருக்கிறாள். அவள் அவ்விதம் செய்த பின்பு அதன் மூலம், தேவனுடைய செய்தியை மறுதலித்து எல்லாவற்றோடும் ஒத்து போகிற ஒரு கூட்ட ஜனங்களை கொண்டு வருகிறாள். தான் செய்வது இன்னதென்று அறியாதவளாயிருக்கிறாள்.  49. அவள் அதைக் குறித்த அறியாமையையுடையவளாய் இருக்கிறாள். தான் தவறென்று விசுவாசிக்கவில்லை - அவள் நினைக்கவில்லை. ஏவாளும் கூட தான் செய்தது தவறென்று நினைக்கவில்லை. ஏவாள் அது சரியென்றே எண்ணினாள். அது ஒரு உதாரணமாயிருக்குமானால், இதுவும் அதற்கு எதிர்மறையான ஓர் உதாரணமாகும். அந்த உதாரணம் எதை செய்ததோ அதையே இதுவும் செய்ய வேண்டும், என்னைப் பொறுத்த மட்டில் அது, இரண்டும் இரண்டும் நாலு என்பது போலவே அமைந்திருக்கிறது.  50. இப்பொழுது கவனியுங்கள். ஏவாளின் பிள்ளைகளுக்கு நேர்ந்தது என்ன? முதலாவதாகப் பிறந்த அவன்... "பலுகிப் பெருகி (தம்முடைய மணவாட்டிக்கும் ஆதாமின் மணவாட்டிக்கும்) பூமியை நிரப்புங்கள்” என்று தேவன் கூறியிருப்பாரென்றால், அது ஒரு தேவ கட்டளையாயிருக்கிறது; அவர்கள் இருவரும் கலக்காம்லே, அவள் அதை செய்திருக்கக்கூடும். ஆனால் நடந்தது என்ன? ஆதாம் அவளிடம் வருவதற்கு ஆயத்தமானபோது அவள் ஏற்கனவே தாயாகி இருந்தாள். நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பதை காண முடிகின்றதா? 51. அதே காரியம் கிறிஸ்துவின் சபைக்கும் - கிறிஸ்துவின் மணவாட்டிக்கும் சம்பவித்திருக்கிறது. இதற்கு மேலும் ஆழமாய் சில நிமிடங்களில் செல்லுவோம். கவனியுங்கள், ஏவாள் செய்தது என்ன? அவளுடைய முதல் பிள்ளை வெளியே வந்தது. அது ஒரு வேசிப்பிள்ளையாகவும், மரணத்தின் பிள்ளையாயும் மரணத்தை விளைவிக்கிறதுமாயிருந்தது. அதன் பின்பு வந்த ஒவ்வொருவரும் மரித்தனர்! அது பால் உணர்ச்சியாகத்தான் (Sex) இருந்திருக்க வேண்டும் என்பதை கவனியுங்கள். அது பால் உணர்ச்சியாயிரா விட்டால் பின் ஏன் நீங்கள் மரிக்கிறீர்கள்? தேவன் ஒரு கட்டளை கொடுப்பாரென்றால் அது அழிய முடியாதே! தேவன் நித்தியமான வராயிற்றே! அது ஒரு போதும் தவற முடியாதே! "பலுகிப்பெருகி பூமியை நிறப்புங்கள்" என்று அவர் சொன்ன போது --- அது ஒரு நித்திய நோக்கத்திற்காக கூறப்பட்டது: அதை நீங்கள் நிறைவேற்றும் போது மரிக்க முடியாது, ஏனெனில் அது தேவனு டையவார்த்தையாயிருந்து நீங்கள் ஜீவிக்கத்தான் வேண்டும். ஏவாளின் பிள்ளை சரியான முறையில் கொண்டுவரப்பட்டிருக்கு மானால், மரணமானது சம்பவித்திருக்க முடியாது; ஆனால் ஏவாளோ காத்திருக்கவில்லை.  52. இன்றைக்கும் அதுதான் காரியம். மணவாட்டியிடம் தேவனு டைய உண்மையான வார்த்தை வெளிப்படுவதற்கு காத்திருப் பதற்கு பதிலாக கூச்சலிடுவது, குதிப்பது, அன்னியபாஷை பேசுவது போன்ற போலியான முகப்பூச்சை அவள் விரும்புகிறாள். தேவனு டைய வார்த்தையை எடுக்கும் ஜாதியான உண்மையான தேவ மணவாட்டி தன்னுடைய பிள்ளைகளைப் பிறப்பிப்பாளானால் அவர்கள் வார்த்தையால் கொண்டுவரப்படுவதால் அவர்கள் மரிப்பதில்லை. ஏனெனில் அது வார்த்தையாயிருக்கிறது. ஆமென். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அவளால் மரிக்க முடியாது, ஏனெனில்... அந்த பிள்ளை மரிக்க முடியாது, ஏனெனில் அது வார்த்தையின் பிள்ளையாயிருக்கிறது; அது ஒரு வார்த்தை-வித்தின் பிள்ளையாயும், நித்திய பிள்ளையாயுமிருக்கிறது. அல்லேலூயா!  53. இயேசுகிறிஸ்து உரைக்கப்பட்ட நித்திய பிள்ளையாயிருந்தார். அவர் மரிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பாவக் கடனைத் தீர்ப்பதற்காக அவர் அவ்விதம் செய்தார். அந்த ஒரு வழியாகத்தான் கடனைத் தீர்க்க முடியும். அதை வேறு யாரும் செய்ய முடியாது; ஏனெனில் மற்றவரெல்லாம் பிசாசின் திட்டப்படி பால் உணர்ச்சியினால் பிறந்தவர்களாயிருந்தனர். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? பாருங்கள்?  54. ஒவ்வொரு மனிதனும், அவன் போப்பாக இருந்தாலும், கண்காணியாகவோ பிரசங்கியாகவோ, அல்லது யாராயிருந்தாலும் மரிக்கிறான். ஏனெனில் அவன் ஒரு கலப்பினமாக இருக்கின்றான். அது நிச்சயம். அவன் சாத்தானுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவன். நீங்கள் எவ்விதமாக வேண்டுமானாலும் உங்களை அழைத்துக் கொள்ளுங்கள், அது சாத்தானும் ஏவாளுமாயிருக்கிறது. ஆரம்ப வித்திற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, ஏனெனில் ஆரம்ப வித்து ஜீவனாயிருக்கிறது. சாத்தான் அதை கலப்பினமாக்கி மரணத்தைக் கொண்டுவந்தான்! இன்றுள்ள சபை தன்னை பெந்தெகொஸ்தே என்றும், பாப்டிஸ்டு என்றும் அல்லது வேறு எவ்விதமாகவோ தன்னை அழைத்துக்கொண்டு தேவனுடைய வார்த்தையை கொள்கைகளோடு கலப்பினமாக்கும் போது, அது மரணத்தின் பிள்ளையைப் பிறப்பிக்கின்றது. அவளுக்கு ஜீவன் இருக்க முடியாது! அவளும் அவள் பிள்ளைகளும் மரித்தவர்களா யிருக்கின்றனர்! 55. வெளிப்படுத்தின விசேஷத்தில் தேவன், "இதோ, நான் அவளை கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபச்சாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர் களையும் மிகுந்த உபத்திரவத்தில் தள்ளி, அவளுடைய பிள்ளை களையும் கொல்லவே கொல்லுவேன்'' என்று கூறுகிறார். அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? உலகம் என்னும் படுக்கையில் அவளைத்தள்ளி (அங்குதான் அவள் இருக்கிறாள் ) அவளுடைய பிள்ளைகளையும் அக்கினியால் அழிப்பார். கோதுமை செடிகளுக்கு இடையில் இருந்த பதர்களுக்கு என்ன நடக்கும் என்பதை கவனியுங்கள். அது எரிக்கப்பட வேண்டிய ஒரு பொருள். ஓ, தேவ வார்த்தையை நீங்கள் பொய்யாக்க முடியாது, அது சத்தியமாயிருக்கிறது. சில சமயங்களில் உங்கள் சந்தேகத்தினால் அதை தவறாய் மதிப்பிடுகிறீர்கள். ஆனால் அதை நேராக நீங்கள் போக விடுவீர்களானால் அது ஒன்று, இரண்டு---ஒன்று இரண்டு (ஜோடு, ஜோடாக ... தமிழாக்கியோன்) என்ற விதமாக ஒழுங்காகச் செல்லும். உலகமென்னும் படுக்கையில் அவளைத் தள்ளி... மரித்த பிள்ளைகளைத் தவிர அவளால் வேறொன்றும் கொண்டுவர இயலாது. 56. ஆக, ஒரு ஸ்தாபனமானது கலப்பினமான ஒரு பிள்ளையை மட்டுமே பிறப்பிக்க முடியுமானால், பின் ஏன் நீங்கள் அதை சேர்ந்தவர்களாயிருக்கவேண்டும்? சகோதரர்களே, அதன் காரண மாகத்தான் நான் அதை எதிர்க்கிறேன். அவள் ஆரம்பத்திலிருந்தே மகா. வேசியாயிருக்கிறாள், வேதம் அவளை அவ்விதம்தான் அழைக்கிறது. அது மிகவும் வெளிப்படையாயிருக்கிறது, அவள் யாரென்று நான் வெளிப்படையாகப் பேசப்போகிறேன் என்று ஏற்கனவே உங்களுக்கு கூறியிருக்கிறேன். அவள் வார்த்தையை விசுவாசிப்பதை விட்டு கொள்கைகளையும், கோட்பாடுகளையும் எடுத்துக்கொண்டு அதையே தன் பிள்ளைகளுக்கும் போதித்து, செய்ய வைப்பதினால் அவள் ஆவிக்குரிய விபச்சாரம் செய்கிறவளா யிருக்கிறாள்.  57. அவளுடைய பிள்ளைகள் கர்ப்பப்பையினின்று வரும் போதே மரித்தவர்களாயிருக்கின்றனர். அவளும் மரிக்கத்தான் வேண்டும். முற்றிலும் உண்மை . கர்ப்பம் திறந்துவரும் ஒவ்வொரு மனிதனும் எவ்விதம் மரிக்க வேண்டுமோ, அவ்விதமே அவர்களால் பிறக்கும் ஒவ்வொருவரும் மரிக்க வேண்டும், ஏனெனில் அவள் ஒரு கலப்பினமானவளானபடியால் அவளும் அவளுடைய பிள்ளை களும் சட்டவிரோதமானவர்களே. அதுதான் சரி. இது உங்கள் தலையில் பதியும் என்று நான் நம்புகிறேன். 58. யேகோவா ஒரு மணவாட்டியை உடையவராயிருந்தார். ஆதாமும், இயேசுவும் ஒரு மணவாட்டியை உடையவராயிருந் தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் அவளைத் தள்ளிவிட்டார். அவள் வேசியானதினிமித்தம் தேவன் அவளைத் தள்ளி விட்டார். அவர் சரியாக அதைத்தான் சொன்னார். அவள் வேசியானாள், விபசாரி. அவள் அவ்வாறு மாறுவதற்கு எது காரணமாயிருந்தது? (நமக்கு நேரமிருந்தால் அதை நான் படிக்க விரும்புகிறேன். அதைக் குறித்து சற்று பார்ப்போம்) சாமுவேல் தீர்க்கதரிசியின் நாட்களில், இஸ்ரவேலருக்கு தேவன் ராஜாவா யிருந்தார். அப்பொழுது இஸ்ரவேல் ஒரு கன்னிகையாக இருந்து, ஏதோ ஒன்றை உற்பத்தி செய்ய இருந்தாள். ஆனால் நடந்தது என்ன? அவள் தன்னை சுற்றிலுமுள்ள ராஜ்ஜியங்களில் ராஜாக்கள் ஜனங்களை ஆளுவதைப் பார்த்து தானும் அவ்விதமே இருக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டாள். 59. பின்வாங்கிபோன பெந்தகோஸ்தேயினரே, நீங்களும் அதையேத்தான் செய்தீர்கள். இன்றைக்கு ஏறத்தாழ 100 வருடங்களுக்கு முன்பு அங்கே பெந்தெகொஸ்தே இயக்கமானது தோன்றின போது, அவர்கள் ஸ்தாபனத்தைக் குறித்து ஒன்றும் பேசவில்லை. அவர்கள் அதற்கு செவிகொடுக்காமல், அதை பிசாசு என்று அழைத்தனர். அம்மனிதர்கள் சரியான கிறிஸ்தவர்கள்! ஆனால் இன்றுள்ள நீங்கள் என்ன செய்தீர்கள்? மற்ற சபைகளைப்போல் நீங்களும் நடிக்க வேண்டியதாயிருந்து, உங்களை ஸ்தாபித்துக் கொண்டீர்கள். உங்களுக்கு நடுவே வேலியுண்டாக்கி, பின்பு இவ்விதம் தான் போதிக்க வேண்டும் என்று கூறி, (தேவனு க்கு மகிமை. அல்லேலூயா) மேலும் கீழும் குதித்து, அன்னிய பாஷை பேசி, "அவனை இங்கு அங்கத்தினனாக்கு; அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டான்" என்றும் கூறுகிறீர்கள். அவன் தண்ணீரினாலும், பரிசுத்த ஆவியினாலும் சரியாக ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. அவன் தவறாயிருக்கிறான். அவனுடைய கனிகள் அவனை யார் என்று நிரூபிக்கின்றது. அவனுக்குள் தவறான வித்திலிருந்து வளருகிறவனாயிருக்கின்றானே : "தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக சகோதரனே, நாங்கள் உன்மேல் எங்கள் கைகளைவைத்து உன்னை இங்கு மூப்பனாக்குகிறோம்! தேவ கூட்டு சபையை விட இச்சபையை பெரிய ஸ்தாபனமாக கட்டப் போகிறோம் !" என்று கூறுகிறீர்கள். அவ்விதம் தான் அது சென்று விட்டது. பெந்தகோஸ்தேயினரின் சரித்திரத்தையும் மற்ற சபைகளின் காரியத்தையும் நீங்களே படித்து அது அவ்விதம் தானா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  60. பாப்டிஸ்டுகள் மெத்தோடிஸ்டுகளையும், மெத்தோடிஸ்டுகள் லூத்தரன்களையும், லூத்தரன்கள் கத்தோலிக்கரையும், ஒருவரை யொருவர் மிஞ்ச போட்டியிடுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு வரும் யாரோ ஒருவரை மிஞ்சப்பார்க்கின்றனர். பாருங்கள், அது அந்த .... அது ஸ்தாபனத்தின் ஆவியாயிருக்கின்றது. ஆனால் இயேசு, "இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப் படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகை தேடினாலும் அவர் களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். "தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர் " என்றும் இயேசு கூறினார் சிலர் என்று அவர் கூறியிருப்பாரென்றால் அதுதான் தேவவார்த்தையாகிய வித்து. அது சிலர் தான். அது லட்சங்களாக வோ, கோடியாகவோ அல்ல. வெகு சிலரே அதைக் கண்டு பிடிப்பார்கள். அவர்கள் அதை கேட்பதற்கென்று முன்குறிக்கப் பட்டவர்கள். முன்மாரியானது இப்பொழுது சென்று போயிற்று. 61. இப்பொழுது, யேகோவா தேவன் ஒரு மணவாட்டியை உடையவராயிருந்து அவளை நேசித்தார். ஆனால் அவளோ வெளியே சென்று விபச்சாரியானாள். உலகத்தின் மற்ற வல்லமைகளோடு அவள் விபச்சாரம் செய்தாள். இந்த வயது சென்ற தேவபக்தியுள்ள அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியோடு தேவன் என்ன செய்தார்? (தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வருகிறதாயிருக்கிறது) அவர் அந்த தீர்க்கதரிசியோடு நடந்து வந்தார். சாமுவேல் இஸ்ரவேலரைப் பார்த்து, "பிள்ளைகளே, என்னிடமாய் ஒரு நிமிடம் கூடி வாருங்கள், நான் உங்களோடு பேசவேண்டும், நீங்கள் எதற்காக ஒரு ராஜாவை விரும்புகிறீர்கள்? யேகோவா உங்கள் ராஜா வாயிற்றே! ஒரு கொள்கை உங்களுக்கு எதற்கு? வேதமே உங்கள் கொள்கையல்லவா? வேதம் சத்தியம், மற்ற கொள்கைகள் எல்லாம் பொய்களே, மனிதனுடைய கொள்கைகளைக் கைக் கொண்டால் மரணம் தான்” என்று கூறினான்.  62. "அப்போஸ்தலருடைய விசுவாச பிரமாணம்'' என்று இப்பொழுதுள்ளவர்கள் கூறுகின்றார்கள். அது வேதத்தில் இருக்கிறதா என்று எனக்குக் காண்பியுங்கள். அத்தகைய காரியத்தை யாராகிலும் கேள்விப்பட்டதுண்டா? "பரிசுத்த வான்களோடு ஐக்கியம் கொள்வதை நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுகிறார்கள். மரித்த பரிசுத்தவான்களின் ஐக்கியத்தை விசுவாசிப்பவர்கள், ஆவிகளோடு (பிசாசின்) தொடர்பு கொள்பவர் என்று அழைக்கப்படுவார் --- மரித்தவர்களோடு ஐக்கியப்படுதல், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரே ஒரு மத்தியஸ்தர் உண்டு. அவர் தான் கிறிஸ்து. அவர் மரித்தவர் அல்ல. அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து என்றென்றும் ஜீவிக்கிறவராயிருக்கிறார். பிராடெஸ்டண்டுகள் வட்டமான கழுத்துப்பட்டிகளை அணிந்தவர்களாய் சபையின் இத்தகைய உபதேசங்களை முழங்குகிறவர் களாயிருக்கின்றனர். ஏனைய உலகத்தார் நேசிப்பது போல் அவர்களும் அவைகளை நேசிக் கிறார்கள்.  63. "ஓ, நாங்கள் பெந்தெகொஸ்தேயினரைப்போல் இருந்தோட. நாங்கள் மூலையில் நின்று கொண்டு தம்பூராவை மீட்டி, பின்பு ஜெபித்தோம். பெண்கள் நீட்டமாக வளர்ந்த தங்கள் தலைமயிர் தொங்க அங்கே நின்று கொண்டு தேவனைத் துதித்தது போன்ற காரியங்களெல்லாம் எங்களிடத்தில் உண்டு” என்று கூறுகிறார்கள். ஓ! அதைக் காட்டிலும் மேலாக செய்ய இன்று நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். அவர்கள் உங்கள் முகத்திற்கு நேராக நகைப்பார்கள், எந்த ஒரு நல்ல கிறிஸ்தவனும் அவ்விதம் நகைப்பான். பானையைப் போன்று மயிரைக் கத்தரித்தவர்களாய், முகத்தில் வர்ணங்களைப் பூசினவர்களாய், உடம்பை பிடிக்கும் வண்ண உடை அணிந்தவர் களாய் அங்கு நின்று கொண்டு காரியங்களைச் செய்யும் நீங்களா தேவனுடைய பரிசுத்தவான்கள்? உங்களைக்காட்டிலும் உலகம் அதற்குமேலாகச் செய்ய அறிந்திருக்கிறது. உங்களுக்கு அவமானம், அதைத்தவிர வேறெந்த கனிகளையும் உங்களால் கொடுக்க முடியவில்லையென்றால், அவ்விதம் மூலையில் நின்று பிரசங்கிப்பதை விட்டுவிடுங்கள். நான் கேலி செய்யவும் இல்லை. என் பட்சமாகவும் பேசவில்லை. நான் சத்தியத்தைக் கூறுகிறேன். ஒரு நாளில் அதன் பலனை நீங்கள் காண்பீர்கள். காலமானது அதிகம் கடந்து விட்டதென்று அவர்கள் உணருமட்டும் அது அவ்விதமே ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு சமயமும் அவர்கள் அவ்விதமே செய்தார்கள்.  64. ஏனைய ஜனங்கள் செய்ய விரும்பினதையே யேகோவாவின் மணவாட்டியும் செய்ய விரும்பினாள். அதையேதான் இயேசுவின் மணவாட்டியும் செய்தாள். அங்கு அந்த வயது சென்ற சாமுவேல் தீர்க்கதரிசி அவர்களிடமாய் வந்து, "சற்று பொறுங்கள் என் பிள்ளைகளே, அக்காரியத்தின் பின்னே நீங்கள் போகவேண்டுவது என்ன? நான் கர்த்தருடைய நாமத்தினால் சொல்லிய ஏதாகிலும் தவறினதுண்டா ?" அவ்விதம் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறதை நீங்கள் படித்த ஞாபகம் உண்டா ? நிச்சயமாக நீங்கள் ஞாபகம் கொள்வீர்கள். "இன்னுமொரு காரியம். நான் பெரியக் கூட்டங்கள் நடத்தத்தக்கதாக சென்று உங்கள் பணத்தையெல்லாம் கொள்ளை யடித்திருக்கிறேனா, அல்லது நான் எப்பொழுதாவது பணத்திற்காக பிச்சையெடுத்திருக்கிறேனா?" - நான் சாமுவேல் தீர்க்கதரிசியைக் குறித்து பேசுகிறேன். வேறு யாரிடமாகிலும் தேவனுடைய வார்த்தை வந்ததா? சாமுவேல் மேலும், "எப்பொழுதாவது நான் காணிக்கை எடுக்கச் சொல்லி---இவ்வளவு, இவ்வளவு பணம் போட்டு இன்னின்ன காரியங்களை செய்யுங்கள் என்று கூறியிருக் கிறேனா?"  65. அதற்கு அவர்கள், “இல்லை, இல்லை. நீர் அவ்விதமாக செய்ய வில்லை, உண்மையைத்தவிர வேறொன்றையும் நீர் எங்களுக்குச் சொன்னதில்லை" என்றார்கள். 66. "பின் ஏன் உங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கூறிகிறீர் கள்?” என்றான். அதற்கு அவர்கள், “சாமுவேலே நீர் சொல்வது சரிதான். ஆனாலும் எங்களுக்கு அவ்விதம் தான் வேண்டும்'' என்றார்கள்.  67. இந்த பெந்தெகொஸ்தே சபையும் அவ்விதமாகவே செய்திருக்கிறார்கள். அதன் காரணமாகவே நான் அவர்களை சார்ந்தவனாயிருக்கவில்லை. நிச்சயமாக தேவனுடைய வார்த்தை யோடு ஒரு கன்னிகையாக நான் இருப்பதையே விரும்புகிறேன். பெரிய பகட்டான காரியங்கள் என்னிடத்தில் இருக்கவேண்டும் என நான் விரும்புகிறதில்லை. நான் அவ்விதமிருக்க மறுத்து விட்டேன். அத்தகைய காரியத்தில் என்னை பிணைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. இது என்னுடைய ஞான மாயிராமல் தேவனு டைய ஞானமாயிருக்கிறது. அவ்விதம் நான் செய்வேனானால், நான் ஜனங்களிடமிருந்து ஒரு “உறிஞ்சுகிறவன் போல்”, - பிசாசு - "இந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்காக இவ்வளவு தொகை நான் கொடுக்க வேண்டும்; இன்னும் வேறு சிலக்காரியங்களுக்காக நான் இவ்வளவு தொகை கொடுக்க வேண்டும். ஆகவே நீங்கள் அவைகளுக்காகப் பணத்தைக் கொடுங்கள்” என்று கூறி கொக்கியை இழுக்கிறவனா யிருப்பேன். ஆனால் கர்த்தருடைய நாமத்தினால் நான் உங்களுக்கு கூறிய யாவும் நிறைவேறாமல் இருந்ததில்லை. வார்த்தையைத் தவிர வேறெதையும் நான் உங்களுக்குக் கூறினதில்லை. நீங்களே நியாயந்தீர்த்துக் கொள்ளுங்கள். நான் ஏதாகிலும் ஒன்றிற்காக உங்களிடம் விண்ணப்பித்திருக்கிறேனா? இல்லை. ஐயா, இல்லை. தேவன் என்னுடைய காரியங்களைக் கவனித்துக் கொண்டார். என்னை ஆதரிப்பதற்காக பெரிய பெரிய திட்டங்களை நான் கொண்டிருக்கவில்லை. அவ்விதமான் எதுவும் என்னிடம் கிடை யாது. தேவனை சார்ந்தவர்களான ஒவ்வொருவரும் தேவனுக்கு செவிகொடுப்பார்கள்! தேவனுடைய ஆவியினால் நடத்தப்பட்டு எங்கு செல்ல வேண்டுமோ அங்கேயும், எதை செய்ய வேண்டுமோ அதையும் செய்யுங்கள். தேவை எல்லாம் அதுவே - அதையே கைக் கொள்ளுங்கள், கோடிக்கோடியாக பணங்களை குவிக்கும் திட்டங்களுக்கு உடன்படாதீர்கள், அநேகர் அவ்விதம் செய்கிறார்கள். கோடி கோடியான டாலர்களால் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். 68. நான் குற்றம் கண்டு பிடிக்கிறேன் என்பதைக் குறித்து மனம் வருந்தவில்லை. ஏனெனில் அது குற்றம் பிடிப்பதற்குரிய காரியமே. நான் யாருடைய உணர்ச்சிகளையும் துன்பப்படுத்த விரும்பவில்லை. ஆனால் தேவனுடைய உணர்ச்சிகளை நான் துன்பப்படுத்துவதைப் பார்க்கிலும் யாராகிலும் ஒரு மனிதனுடைய உணர்ச்சிகளை துன்பப் படுத்துவது பரவாயில்லை என்று எண்ணுகிறேன். அவர் உனக்கு கட்டளை கொடுத்து அனுப்பி இந்த இந்த காரியங்களை செய் என்று சொல்லி அதை ஜனங்கள் மத்தியில் நிரூபித்தாரென்றால், நீ நிச்சயமாக அதற்கு செவி கொடுக்கத்தான் வேண்டும். நான் சத்தியத்தை உங்களுக்குக் கூறுகிறேன். தேவனும் அது சத்தியம் தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அடையாளங்களால் மட்டுமல்ல, தம்முடைய வார்த்தையினாலும் அது சாத்தியம்தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அது முற்றிலும் உண்மை . 69. யேகோவாவின் மணவாட்டி விபச்சாரம் செய்யச்சென்று, அவள் என்ன செய்தாள்? பின் சட்டவிரோதமான பிள்ளைகளைக் கொண்டிருந்தாள். அது சரியா? அது சத்தியம் என்று நாம் அறிவோம். நேபுகாத்நேச்சார் என்னும் அரசனால் சிறை பிடிக்கப்பட்டாள். கிறிஸ்துவின் மணவாட்டியும் அதையே செய்தாள். காரியம் என்ன?---அவளால் காத்திருக்க முடியவில்லை. ஓ, இல்லை ஹூ... ஹூம், அவளால் காத்திருக்க மட்டும் முடியவில்லை.  70. அவர்கள் ஏதாகிலும் ஒன்றை உற்பத்தி செய்யவேண்டியதா யிருந்தது. பரிசுத்த ஆவி சபையில் வந்து பொறுப்பேற்கும் வரை அவர்களால் காத்திருக்க முடியவில்லை. பாருங்கள், அவர்களுடைய ஸ்தாபனத்திற்கு அதிகமான அங்கத்தினர்களை பெற வேண்டியதா யிருந்தது. 50 அல்லது 100 வருடங்களுக்கு முன்பு பெந்தெகொஸ்தே முதலில் தொடங்கி வார்த்தையானது பிரசங்கிக்கப்பட்டபோது இருந்ததைப்போல் இன்று இருந்திருக்குமானால், ஒருவேளை ஏறத்தாழ 50 அங்கத்தினர்கள் கூட இருந்திருக்க மாட்டார்கள். அதுசரி. ஆனால் அந்த சொற்பமான அங்கத்தினர்கள் இரத்தத்தினால் கழுவப்பட்டவர்களாயிருந்திருப்பார்கள்! தேவவல்லமை அவர்க ளோடு இருந்திருக்கும். இந்த உலகமானது வார்த்தைக்கு வார்த்தை உரைக்கப்படும் வார்த்தை மாம்சமாகி அதன் விளைவாக மகத்தான அசைவு உண்டாயிருக்கும். ஆனால் இன்றோ அது சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருக்கிறது. அது உண்மை . அது ஒரு அறிவீனமாகி, கேலிக்குரியதும், உலகத்திற்கும், தேவனுக்கும் ஒரு அவமான சின்னமாகி விட்டது. 71. ஒரு சமயம் நானும், இரண்டு சகோதரர்களும், அரிசோனா விலிருந்து மிஸ்சௌரியிலுள்ள, ஸ்பிரிங் பீஃல்டு என்னும் இடத்திற்கு காலை ஆகாரம் உட்கொள்ள வந்து கொண்டிருக்கும் போது, சகோ. உட் அவர்கள் என்னுடைய கவனத்தை அங்கு இருந்த ஒரு சகோதரியினிடமாகத் திருப்பினார். அச்சகோதரி, சகோதரி காலின்ஸ் என்றவரைப் போன்று அழகான நீண்ட மயிரை வைத்திருந்தாள். சகோ உட் என்னைப் பார்த்து, "சகோ. வில்லர்ட் காலின்சுடைய மனைவியைப் போல் அச்சகோதரி காணப்படு கிறாளல்லவா” என்று கேட்டார்.  72. அதற்கு நான், “அப்படிதான் இருக்கிறாள்” என்று கூறினேன், அந்நேரத்தில் அங்கு வேறொரு பெண் மணியும் வந்தாள், அப்பொழுது நான், "இந்தப் பெண் அவளுடைய தாயாரைப் போன்று இருக்கிறாள் என்று யூகிக்கிறேன், அந்த நீளமான அடர்த்தியான மயிரைப் பாருங்கள்” என்றேன். மேலும் நான், அது சரி. தேவகூட்டு சபையின் (Assemblies of God) தலைமை ஸ்தலம் இங்குதான் இருக்கிறது. அக்காரணத்தினால்தான் அவர்கள் அவ்விதம் இருக்கிறார்கள்.” என்றேன், அங்கு அமர்ந்திருந்த எல்லா சகோதரிகளும், தங்கள் மயிரைக் கத்தரித்து விட்டு இருந்தார்கள்; அவர்கள் அங்கு வேதாகமப் பள்ளியில் படிக்கும் மாணவிகள். அவர்கள் சிறிய "ரிக்கிகள்," ("Rickys"). அவர்கள் தங்கள் வேதாக மங்களை வைத்திருந்தனர்.  73. அவர்கள் நவநாகரீகமான பெண்களைப் போல கேலி பேசிக்கொண்டும் கெக்கலித்துக் கொண்டும் இருந்தார்கள். அவர்களனைவரும் புறப்பட்டுச் செல்லும் வரை நாங்கள் கவனித்துக் கொண்டேயிருந்தோம்---நாளையதினம் வர இருக்கும் பெந்தெ கொஸ்தே பயிர்கள் அவர்கள்---அதில் ஒரு கிறிஸ்தவன் இருந்தால்!- ஏன் ஒரு கிறிஸ்தவனும் கூட இல்லை? ஏனெனில் அத்தகைய விதைதான் அங்கு விதைக்கப்பட்டிருக்கின்றது. அது முற்றிலும் உண்மை . அந்த சகோதரி சென்ற பின்பு, மற்ற எல்லோரும் கூட சென்றுவிட்டனர், ஆனால் இந்த சிறிய பெண்மணி எங்களிடம் வந்து "உங்களுக்காக நான் ஏதாகிலும் செய்யவேண்டுமா” என்று கேட்டாள். அதற்கு நான், "உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவள் “கேளுங்கள், ஐயா?” என்றாள். நான், "(ஒரு அன்னியனைப் போல - எங்களை அவள் அறிந் திருக்கக் கூடும் என்று நான் நினைத்தேன்) அங்கு ஒரு வேதாகமப் பள்ளி உண்டு அல்லவா?'', என்றேன். அதற்கு அவள் “ஆம் ஐயா, அங்கு உண்டு” என்றாள். நான், "அங்கிருந்து உனக்கு அதிகப்படியான வியாபாரங்கள் கிடைக்கிறது என்று யூகிக்கிறேன்" என்றேன். (சபையின் பொக்கிஷ பொறுப்பாளர்களான சகோஃபிரட் சோத்மனும், சகோ பாங்க்ஸ் உட்டும் அங்கு என்னோடு அமர்ந்திருந்தார்கள்) அதற்கு அவள், “ஆம், ஐயா. அது அவ்விதம் தான்” என்றாள். “நீயும் கூட அதைச் சேர்ந்தவளா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவள், “இல்லை ஐயா, மன்னிக்கவும், நான் அதைச் சேர்ந்தவள் இல்லை" என்றாள். மேலும் நான், "நான் அவ்விதம் நினைத்ததன் காரணம் என்னவென்றால் அந்த மாணவிகளோடு இருந்த அந்த பெண்மணி உன்னைப் போலவே நீளமான மயிரை வளர்த்திருந்தாள், ஒரு வேளை உன்னுடைய தாயாரோ?" என்று கூறினேன். அதற்கு அவள், "இல்லை ஐயா, அப்பெண்மனி அங்கு வேலை செய்கிறாள். ஆனால் நான் வேலை செய்யவில்லை., நான் நீளமான மயிரை விரும்புகிறேன், எனக்கு ஒரு சிறு பெண் பிள்ளையும் உண்டு. அவளுக்கு கூட நீளமான மயிரை நான் வளர்த்திருக்கிறேன், என்னு டைய கணவருக்கு நீளமான மயிர் வளர்த்தாலே பிடிக்கும்" என்று கூறினாள். அதற்கு நான், “தேவன் உன் கணவரை ஆசீர்வதிப்பாராக” என்றேன். அதற்கு அவள், "நல்லது ஐயா?" என்றாள். 74. "தங்கள் மயிரைக் கத்திரித்தவர்களாய் இருக்கும் அந்த மாணவிகளோடு அந்த நீளமான மயிரையுடைய பெண்மணி, இருப்பது குறித்து மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது" என்று நான் கூறினேன். 'ஆம்'' 75. நாங்கள் நடந்து சென்று... பின்பு நான், “நன்றி” என்று கூறிவிட்டு, அங்கிருந்து நாங்கள் சென்று விட்டோம். நான் சகோதரர்களிடம், "அங்குள்ள அந்த தவறாய்ப் பிறந்த பிள்ளைகளின் மத்தியில் அச்சகோதரியை தேவன் அவர்களுக்கு ஒரு கடிந்து கொள்ளுதலுக்காக வைத்திருக்கிறார்" என்று கூறினேன். அது உண்மை - முறைதவறிப் பிறந்தவர்கள், உலகத்தின் பின் செல்லும் கூட்டம். தேசத்தின் ராணியான யேசபேலைப் போன்று அவளைப் பின்பற்றும் பெண்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? அவளைப் போன்ற எத்தனைபேர் இன்று பரலோகத்தில் இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? பாருங்கள்? உலகத்தின் காரியங்கள்--- உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால் அவனிடம் தேவனுடைய அன்பு இல்லையென்று வேதம் கூறுகின்றது. அது என்ன? அவர்கள் பெந்தெகொஸ்தேயின் நாளையப்பயிருக்கு இன்றையப் பாலாடையாயிருக்கின்றார்கள் (Cream). அந்த சபை தேசத்தில் ஒரு பெரிய அமைப்பாயிருக்கிறது. அதுவா மணவாட்டி! எனக்கு எட்டாததாயிருக்கிறது.  76. சரி, அவள் எதை செய்ய முயற்சிக்கிறாள்? ஓ பீடத்தினண்டை யில் குதித்து ஆடி எதையோ ஒன்றை உற்பத்தி செய்கிறாள் ---நான் அதைக் குறித்து கேலி செய்யவில்லை; அவ்விதம் செய்வதினால் தவறொன்றுமில்லை. அவள் ஏதோ ஒன்றை உற்பத்தி செய்கிறாள். ஏன் அவ்விதம் செய்கிறாள்? சபைக்கு அங்கத்தினர்களைச் சேர்ப்பதற்காக. காரியம் என்ன? அவளால் காத்திருக்க முடியவில்லை. பாருங்கள்? தேவனே அதை செய்யும் வரை அவளால் காத்திருக்க முடியவில்லை. பாருங்கள். எங்கிருந்தாவது அவர்களுக்கு அங்கத்தினர்கள் வரவேண்டும், ஆகவே அவர்கள் சபை மக்களிடம், "நீங்கள் அவ்விதமாகத்தான் செய்யவேண்டும்" என்கிறார்கள். பாருங்கள், அங்கேதான் அந்த வித்து வருகிறதாயிருக்கிறது. அவர்கள் அதைச் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறார்கள். 77. நான் ஒரு அப்போஸ்தலன். ஆப்பிரிக்கர்கள் ஒரு மிருகத் தினுடைய இரத்தத்தை எடுத்து தங்கள் மேல் அதை ஊற்றி (ஆணும், பெண்ணும் நிர்வாணமாயிருப்பார்கள்) தங்களுடைய முகங்களில் வர்ணங்களைப் பூசிக் கொள்வார்கள். இத்தகைய காரியம் ஒரு புறஜாதியானிடமிருந்து தான் வருகிறதாயிருக்கிறது. அது நமக்கு அல்ல. கிறிஸ்தவ விசுவாசிகளே, ஒரு போதும் இல்லை. ஒரே ஒரு ஸ்திரீ தன்னை வர்ணம் பூசிக்கொண்டாள் என்று வேதம் கூறுகிறது. அவள் யேசபேலேயல்லாமல் வேறுயாருமில்லை; அவள் ஒரு பிசாசு.  78. இவ்விதமாக ஆப்பிரிக்கர்கள் வர்ணத்தை தங்கள் முகத்தில் பூசி காதுகள் தொங்கும் அளவுக்கு மரத்தினால் ஆன துண்டுகளை காதுகளில் (ஜூலு என்ற இனத்தவர்) மாட்டிக்கொண்டும், சில சமயங்களில் உதடுகளைப்பிரிக்கும் அளவுக்கு அவைகளை மாட்டிக் கொண்டும், (அதை அழகு என்று அவர்கள் நினைக்கின்றார்கள்) மார்பகங்களிலும், கால்களைச் சுற்றிலும் கூட அவைகளை கட்டி, வரிக்குதிரையின் உடலிலுள்ள கோடுகளைப்போன்று உடலெல் லாம் வரைந்து, கூக்குரலிட்டு, ஆவியில் நடனமாடி அன்னிய பாஷைகளைப் பேசி, பிசாசுகளைத் தொழுது கொள்கிறார்கள்: இதுவா பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளம்!  79. இந்தியாவில் நான் இருந்தபோது, நெருப்பின் மேல் நடக்கிற வர்கள் அங்கிருக்கிறார்கள் என்ற காரியங்கள் உண்மையென்று நானறிந்தேன். ஒரு பெரிய விக்கிரகம் அங்கே வைக்கப்பட் டிருக்கும். அதன் காதுகளில் விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட காதணிகள் மாட்டப்பட்டிருக்கும், அந்த ஜனங்கள் குத்திக் கொண்டு, உபாதைப்படுத்தும் கருவிகளால் தங்கள் மாம்சத்தை துளைத்து கொண்டும், தங்களையே அடித்துக்கொண்டும், (பொய் சொன்னால் தங்கள் உதடுகளை தைத்து தங்களுக்குத் தாங்களே நீயாயத்தீர்ப்பு செய்து) ஒரு கூர்மையான கம்பியை மேல்வாயின் மூலம் குத்தி உதட்டைக் கிழித்து மூக்கினிடம் மட்டும் துருத்தி நிற்கும் படியாகவைத்து, கிறிஸ்துமஸ் மரம் பந்துகள் போல் இருக்கும் மீன் பிடிகொக்கிகளை ஆயிரக்கணக்கில் உடலெல்லாம் குத்தி தொங்கவிட்டு, அந்த விக்கிரகத்தின் முன்பாக நடனமாடிச் சென்று ஒரு கிடாரியை கொன்று விக்கிரகத்தை இவ்விதமாய் தொழுது கொண்டு, கொதிக்கிற நெருப்பின் மேல் நடந்து, ஒருவித வடுவும் கூட இல்லாதவர்களாய் காணப்படுகின்றார்கள். பெந்தெகொஸ்தேயினராகிய உங்களில் சிலர் அவ்விதம் முயற்சி செய்து பாருங்களேன்.  80. அது ஏற்கனவே எபிரேய வாலிபரால் நடந்தேறிய ஒன்று. ஆனால் அவர்கள் ஒருபோதும் தங்கள் தேவனாகிய கர்த்தரை சோதிக்கவில்லை; அவர்கள் நெருப்பிலே தூக்கியெறியப் பட்டார்கள். அவர்கள் எதையும் செயற்கையாக உற்பத்தி செய்ய முயற்சிக்கவில்லை. இன்றுள்ள பெந்தெகொஸ்தேயினரிடம் உள்ள காரியம் அதுதான். அவர்கள் எதையோ செயற்கையாக உற்பத்தி செய்கிறார்கள்! அவர்களால் காத்திருக்க முடியவில்லை! ஓ தேவனே, அவர்களால் காத்திருக்க முடியவில்லை. ஆகையால் அவர்கள் விபச்சாரம் செய்து விட்டார்கள். ஆமென். களைகளும் ஏதாவ தொன்றை உற்பத்திச்செய்யும், அது என்னத்தைக் கொண்டு வருகிறது?--- முதல் மணவாட்டி செய்தது போலவே, அவர்களாலும் காத்திருக்க முடியவில்லை.  81. அவள் வேசித்தனத்தினால் பிறந்த பிள்ளையின் மூலம் மரணத்தைக் கொண்டு வந்ததினால் அதன் மூலம் நாமும் அத்தகைய பிள்ளைகளாயிருக்கிறோம். தேவன் மாம்சத்தில் வந்து நமக்கு வேறாரு பிறப்பைக் கொடுத்து, அதன் மூலம் நம்மை ஆரம்ப குமாரரும், குமாரத்திகளுமாக திரும்ப பெற்றார். பாருங்கள்? அதுதான் காரியம். 82. ஏவாளின் சரியான வித்து ஒருபோதும் சம்பவிக்கவில்லை, ஏன்? அவள் அதை கலப்பினமாக்கி விட்டாள். அவள் அதை விலக்கிவைத் தாள். நியமிக்கப்பட்ட நேரத்தில் ஆதாம் தன் மணவாட்டியாகிய ஏவாளிடத்தில் வரும் முன்பே ---அதை போலவே கிறிஸ்துவும் சபையாகிய அந்த கூட்டத்திற்கு வரவேண்டியவராயிருக்கிறார்; அவ்விதம் செய்வதாக அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். பலுகிப் பெருக தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், ஆனால் அவர்கள் தேவனுடைய நேரத்திற்காக காத்திருக்கவேண்டும்.  83. அதுதான் இன்றுள்ள காரியம். தேவனுடைய நேரத்திற் கென்று காத்திருக்க அவர்கள் விரும்பவில்லை. அதற்கு பதிலாக வேறு எதையோ விரும்புகிறார்கள். ஆகவே பிசாசு ஞானத்தைக் கொண்டவனாய் இருந்து மற்றவர்களைக் காட்டிலும் ஒரு பெரிய ஸ்தாபனத்தை உண்டாக்கத்தக்கதாக அதை அவர்களுக்கு கொடுக்கிறான்.  84. நான் ஏன் அதற்கு எதிராய் இருக்கிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா? நிச்சயமாக, எனக்குள் இருக்கும் எல்லா வற்றாலும் நான் அதற்கு எதிரிடையாயிருக்கிறேன். தேவனுடைய வார்த்தை என்னில் உள்ள வரையிலும் அது எப்பொழுதும் எதிரிடையாகத்தான் இருக்கும். ஏனெனில் தேவன் அதை எதிர்க்கிறார். தேவன் அதற்கு எதிராக இருக்கிறார் என்றே அவரே கூறினார். அது சரி. காத்திருக்குமட்டும்..... 85. ஏவாளின் வித்து ஒரு போதும் சம்பவிக்கவில்லை. அது சாத்தானின் பொய்க்கு கலப்பினமாக்கப்பட்டு ஆதாமின் அழகான மணவாட்டி கறைபட்டுபோனாள். அதைப்போலவே கிறிஸ்துவின் மணவாட்டியும். கறைபட எது காரணமாயிற்று? (இப்பொழுது, ஆதாமின் மணவாட்டி) --- அவள் தேவனுடைய வார்த்தையில் ஒரு போதும் தரித்து இருக்கவில்லை. அது சரியா? அது சரியில்லை யென்றால் ஒன்றும் கூறவேண்டாம், சரியென்றால் ஆமோதியுங்கள் .. அங்கு மூன்று காரியங்கள் காணப்படுகின்றன; ஆதாம், கிறிஸ்து, தேவன். சரியான ஜீவனையுடைய பிள்ளையை ஆதாமின் மனைவி கர்ப்பந்தரிக்கவில்லை. ஏனெனில் அவள் தேவனுடைய வார்த் தையை அவிசுவாசித்தாள். அது உண்மையானால், "ஆமென்” என்று கூறுங்கள் (சபையார், "ஆமென்' என்று கூறுகிறார்கள்). யேகோவாவின் மனைவி அல்லது மணவாட்டி தள்ளப் பட்டதின் காரணம் அவள் தேவனுடைய வார்த்தையான தீர்க்கதரிசியை புறம்பாக்கினாள். அது உண்மையா? கிறிஸ்துவின் மணவாட்டி விவாகரத்தின் மூலம் தள்ளப்பட்டதின் காரணம் அவள் ஏவாளைப் போன்றும் மற்றவர்களைப் போன்றும் தேவனுடைய வார்த்தையை புறம்பாக்கினதேயாகும்; சரியாக , இவர்களெல் லோரும் வேசிகளும், கறைபட்டவர்களுமாயிருக்கின்றனர். அவர்களுடைய கணவன்மார்கள் அவர்களிடம் செல்ல முடியவில்லை. ஏனெனில் கணவன்மார்கள் அவர்களிடம் வருவதற்கு முன்பே அவர்கள் கர்ப்பவதிகளாகக் காணப்பட்டனர். 86. ஓ, தேவனே! அது ஒரு பரிதாபமான காட்சியல்லவா! யோசித்துப் பாருங்கள். ஒரு வாலிபன் நியமிக்கப்பட்ட தன் மணவாட்டியிடம் சேர விரும்பும்போது, அவள் ஏற்கனவே இன்னொருவனுடைய வித்தினால் நிறையப்பட்டிருப்பதைக் காண்கிறான். என்னே ஒரு காரியம்! தேவனுக்குச் சம்பவித்தது அதுவே; ஆதாமுக்குச் சம்பவித்ததும் அதுவே; கிறிஸ்துவுக்குச் சம்பவித்ததும் அதுவே. ஓ.  87. ஆம், அவள் வார்த்தையில் நிலைநிற்காமல் கலப்பினத்தை உண்டாக்கினாள். அதைத் தான் இஸ்ரவேல் செய்தது. கிறிஸ்துவின் மணவாட்டியும் அதையே செய்தாள். அவள் எங்கே இருக்கின்றாள் என்று பாருங்கள்? அவர்கள் மற்றவர்களிடமே சென்றனர். கிறிஸ்துவின் பெந்தெகொஸ்தே மணவாட்டியும், அதையே செய்தாள். 88. அவளால் வார்த்தையாகிய ஆவிக்குரிய பிள்ளைகளைக் கொண்டு வரமுடியவில்லை. ஏனெனில் அவள் தன்னிலே ஒரு கலப்பினமாயிருந்தாள். தன்னை ஸ்தாபனத்தோடு கலப்பினமாக்கின பின்பு எவ்வாறு அவளால் கிரியை செய்ய முடியும்? அவர்களோடு இணைந்து உலக ஐக்கிய சபைகளோடும் இணைந்து எல்லாம் அவர்களைப் போலாகி, மற்றவர்களைப் போல கலப்பினமானாள். பின் எவ்விதம் அவள் சரியான பிள்ளையைக் கொண்டுவரமுடியும்? அவளால் முடியாது.  89. இப்பொழுது, இங்கு இன்னும் அநேகம் உள்ளன. நான் துரிதமாக இவைகளை முடிக்க வேண்டும். நான் ... நான் இவைகள் ஒவ்வொன்றின் மீதிலும் பிரசங்கிக்க வேண்டும். பாருங்கள்?  90. கவனியுங்கள். உண்மையான மணவாட்டி... அல்லேலூயா, உண்மையான மணவாட்டியென்று ஒருத்தியிருக்கிறாள் ! ஏன்? அல்லேலுயா. அவள் முன்குறிக்கப்பட்டவள். அவள் தன்னை ஸ்தா பிக்கமாட்டாள். ஏனெனில் அவள் முன்குறிக்கப்பட்ட வள். ஏதாகிலும் சில ஸ்தாபனங்களைக் குறித்து அவள் கவலைக் கொள்ள வேண்டியதில்லை. அவள் தன் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளும்படியாக ஏற்கனவே முன்குறிக்கப் பட்டிருந்தாள்.  91. கவனியுங்கள், மரியாளைப்போல... இதை நீங்கள் தவறாமல் புரிந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்--- ஆயத்தமாயிருக்கிறீர்களா? அப்படியானால், "ஆமென்'' என்று கூறுங்கள் (சபையார், "ஆமென்” என்று கூறுகிறார்கள்.). கிறிஸ்து தம் மணவாட்டியிடம் வரும்போது, அவள் மரியாளைப் போன்று கன்னியாக இருப்பாள். ஏனெனில் தேவன் கிறிஸ்துவையும். மணவாட்டியையும் ஒரு வேசியின் கர்ப்பப்பையின் மூலமாக கொண்டுவர முடியாது. தம்முடைய வார்த்தையை, வார்த்தையைக் கலப்பினமாக்கின ஒரு வேசியின் மூலமாக அவரால் கொண்டுவர முடியாது. அது கடினமான வார்த்தை , ஆனால் அதைத்தான் வேதம் கூறுகிறது. வேதம் என்ன சொல்லுகிறதோ அதையேதான் நானும் சொல்லுகிறேன். ஏனெனில் இவை புரிந்துக் கொள்ளப்பட வேண்டும். 92. மரியாளைப் போன்று, உண்மையான மணவாட்டி, ஒரு கன்னிமையான கருப்பையை கிறிஸ்து என்ற வார்த்தைக்காக கொண்டிருப்பாள். கிறிஸ்து என்ற வார்த்தை மணவாட்டியிடம் வரும்போது, அவள் அவரைப் போன்றே கலப்பில்லாத வார்த்தையாயிருப்பாள். இது புரிந்து கொள்ளப்படுகிறது என்று நம்புகிறேன்.. சகோ. நெவில் அவர்களே, பாருங்கள், பாருங்கள். நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அவர் யார்? --- வார்த்தையானவர்!--- வார்த்தையாகிய தேவன். "ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய நாமம் வஸ்திரத்தின் மேல் எழுதப்பட்டிருந்தது''. அவருடைய நாமம் "வார்த்தையாகிய தேவன்." "ஆதியிலே, வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, இந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி ...... நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவருடைய மணவாட்டி வரும்போது, அவள் அவரைப் போன்றே கன்னியான உற்பத்தியாயிருப்பாள்.  93. கிறிஸ்துவும் யேகோவாவும் ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்தவரா? மணவாட்டியும் கூட அவ்விதம் இல்லை! அவள் அவரில் பாகமா யிருக்கிறாள். அவளுக்கு ஒரு கோட்பாடு தேவையில்லை. அவள் ஒரு பூரண கன்னியாயிருக்கிறாள். எப்படி? அவளுடைய கிரியை களினால். ஆமென். அவள் ஒவ்வொரு தேவனுடைய வார்த்தை யையும், "ஆமென், ஆமென்'' என்று சொல்லி "உம்முடைய வார்த்தையின் படியே எனக்கு ஆகக்கடவது" என்பாள். ஓ! அது தான் காரியம்.  94. ஒரு கன்னி கருப்பையையுடையவளாயிருக்கிறாள். அவள் வார்த்தையென்னும் கன்னி கருப்பையினின்று வெளிவந்தாள். இயேசு எதினின்று வெளிவந்தார்? ஒரு கன்னியின் கருப்பையின் மூலமாக! பாருங்கள்? 95. ஆதாம் தன்னுடைய மணவாட்டியிடம் வந்தபோது அவள் ஏற்கனவே கர்ப்பவதியாயிருந்தாள். அவள் ஏதோ ஒன்றை செய்து விட்டாள். அவள் தன்னைக் கலந்து கலப்பின பிள்ளையை உற்பவித்தாள், அது மரித்தது. ஆனால் யோசேப்பு தன் மணவாட்டி யிடம் வந்தபோது, அவளும் ஏற்கனவே கர்ப்பமுற்றிருந்தாள். ஆனால் அதுவோ ஜீவனாயிருந்தது. ஆதாம் தன் மணவாட்டியிடம் கூடிவரும் முன்னர்---யோசேப்பும் மரியாளையும் போல, கிறிஸ்துவும் சபையும் போல (இதைக் காண முடிகிறதா?) பாருங்கள்? அவர்கள் கூடிவரும் முன்னே (ஆதாமும் ஏவாளும்) அவள் சர்ப்பத்தினால் ஒரு கறைப்பட்ட வித்தைக் கர்ப்பமுற்றிருக்கக் கண்டான். ஆதாம் தன் மனையிடம் வந்தபோது, அவள் மரணத்திற்கு கர்ப்பமுற்றிருந்ததை அவன் கண்டான். பாருங்கள்? எவ்வித மரணம்? --- ஆவிக்குரிய விதமாகவும், மாம்சத்திற்குரிய விதமாகவும் அது மரித்ததாயிருந்தது; ஆனால் யோசேப்பு என்னும் மனிதன் தன் மணவாட்டியிடம் வந்தபோது (மகிமை! அவளை அவனால் பெற்றுக்கொள்ள முடியவில்லை!) அவள் நித்திய ஜீவனால் கர்ப்ப முற்றிருந்தாள், வார்த்தையாகிய தேவன் நமக்குள்ளே மாம்ச மானார். 96. உரைக்கப்பட்ட வார்த்தையை திரும்பவும் கொண்டுவா! இங்குள்ள வார்த்தை, வார்த்தையாகிய தேவன் மனித கருப்பையின் மூலமாக வருகை புரிதல். ஆமென்! தேவன் எப்படியாயினும் அதை நிறை வேற்றுவார். அவர் உரைத்தார், அது அப்படியே ஆகவேண்டும். ஓ மகிமை! ஆமென். அவர் நம்முடைய தேவன். இது ஐசுவரியமாயிருக்கிறது. சகோதரர்களே, இதை நீங்கள் ஜீரணித்தால் புரிந்துக்கொள்ள முடியும். அங்குதான் அவர்களை அவர் கண்டுபிடித்தார்.  97. ஆதாம் தன் மனைவியிடம் வந்தபோது, அவள் தவறான வித்தினால் கருவுற்றிருந்தாள். ஜோ... அந்த வித்து மரித்தது. யோசேப்பு தன் மனைவியிடம் வந்தபோது, அவளும் கருவுற்றிருந் தாள். ஏவாளின் கர்ப்பத்தையும், மரியாளின் கர்ப்பத்தையும் எது வித்தியாசப் படுத்திற்று? ஆதாமின் மணவாட்டி வார்த்தையை சந்தேகித்தாள். அது சரியா? யோசேப்பின் மணவாட்டியோ வார்த்தையை விசுவாசித்தாள். அதுதான் வித்தியாசம். அப்படியானால் அதன்பின் என்ன? அதுதான் வார்த்தை, ஓ! அந்த விலையேறப்பட்ட வார்த்தை! இவ்வுலகம் அந்த தேவவார்த்தை யினால் உண்டாக்கப்பட்டது! அல்லேலுயா! என்னுடைய இளைப்பாறும் இடம் அதுவே. எல்லா ஸ்தாபனங்களும் மற்றயாவும் எதை வேண்டுமாலும் செய்து விழுந்து போகட்டும்: நானோ வார்த்தையின் பேரிலே மட்டும் சாருவேன்.  98. அதன் காரணமாகவே நான் எதைச் செய்தேனோ அதைச் செய்தேன். அதன் காரணமாகவே நான் ஸ்தாபனங்களை புறம்பாக்கு கிறேன். "அவன் சபைகளை உடைக்கிறான்" என்று கூறுகிறார்கள். நம்முடைய கர்த்தரைக் குறித்தும் அதையே அவர்கள் கூறினார்கள். அதையே எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பாருங்கள்? 99. இப்பொழுது, இப்பொழுது... அவன் அதைக் கண்டான். கிறிஸ்து தமது மணவாட்டியிடம் வருகிறார். அவர் அவளில் எதைக் காண்கிறார்? அதே காரியத்தை. ஏன்? கிறிஸ்துவின் மணவாட்டி முதலில் ஆரம்பித்து வெளிவந்த போது --- (கவனியுங்கள், நீங்கள் இதை தவறவிட நான் விரும்பவில்லை) அவள் ஆரம்பித்த பொழுது அவள் ஒரு கன்னியாக இருந்தாள். ஆதிசபை - அவள் சரியாகவே இருந்தாள். அச்சபை மிகவும் அற்புதமாயிருந்தது. தேவன் அவருக்கு ஒரு மணவாட்டியை அளித்தார். ஆனால் அவள் என்ன செய்தாள்? சரித்திரம் உங்களுக்குத் தெரிந்திருந்தால் நலமாயிருக்கும். கி.பி.606ம் வருடத்தில் அவள் ரோமசபையின் கோட்பாடுகளினால் கர்ப்பம் தரித்து ஒரு ஸ்தாபனமானாள். அதன் பிறகு, வேதத்தில் குறிப்பிடப்பட்ட அந்த மகா வேசியான அந்த தாய், சபைகளைப் பெற்றெடுத்துக்கொண்டே இருந்தாள். அவர்கள் வேசிகளாய் (Harlots) இருந்தார்கள் --- (இவர்கள்தாம் ப்ராடெஸ்டண்டு கிறிஸ்தவர்கள்) அவளால் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் - ஸ்தாபனத்தை சுதந்தரித்துக் கொண்டார்கள். நான் ஏன் அதற்கு விரோதமாயுள்ளேன் என்பதை உங்களால் காணமுடிகிறதா? சரி.  100. இங்கு வார்த்தையின் பிறப்போ கிறிஸ்துவாயிருக்கிறது. அது ஸ்தாபனங்களோடு தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளவில்லை. ஆதி சபையானது ஸ்தாபன இயக்கமாயிராமல் தேவனுடைய வார்த்தை யாலும், ஆவியாலும் நீர்பாய்ச்சப்பட்டதாயிருந்தது. சகோதரனே, தேவன் அங்கு வார்த்தையை அவ்விதம் விதைத்திருந்தார்; பரிசுத்த ஆவி அதற்கு நீர் பாய்ச்சினது. அவளும் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஆனால் அவளாலும் தொடர்ந்து ஒன்றும் செய்யக் கூடாமல் இருந்தது? ஏனெனில் அவளும் முற்றிலுமாக தன்னை ஸ்தாபன மாக்கிக்கொண்டு உலகத்தை தன்னோடு கலந்து விட்டாள். அவளால் ஒன்றும் செய்யக் கூடாமல் இருந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள்..  101. இப்பொழுது, இப்பொழுது, கவனியுங்கள் தேவன் தம்முடைய வார்த்தையை தம்முடைய சரீரத்தின் மூலம் உறுதிப்படுத்தினார். அது சரியா? ஆனால் அவள் ஆதாமின் மணவாட்டி ஏதேனில் விபச்சாரம் செய்தது போலவும் யேகோவாவின் மணவாட்டி சாமுவேலின் நாட்களில் ஒரு ராஜாவை ஏற்படுத்தி, தேவனையும் வார்த்தையையும் தள்ளிவிட்டு (அவளுக்கென்று விவாக நிச்சயிக்கப்பட்ட கணவன்) மற்ற தேசங்களைப் போல விபச்சாரம் செய்தது போலவும் செய்து விட்டாள்; ஆகவே தேவன் அவளை விவாகரத்து செய்து விட்டார். அதையேதான் இன்றும் செய்தார்.  102. மணவாட்டியின் குமாரர்கள் மணவாட்டியுடன் விபச்சாரம் செய்தார்கள்; பெந்தெகொஸ்தேயினின்று வந்த தேவகுமாரனு டைய மணவாட்டி வார்த்தையின் கன்னிகையாயிருந்தாள், ஆனால் அவள் ஆதாமின் மனைவியைப் போன்று, யேகோவாவின் மனைவியைப் போன்று விபச்சாரம் செய்தாள்; இங்கே தேவகுமார னுடைய மனைவி, ரோமக் கடவுள்களோடு (பன்மை) விபச்சாரம் செய்து கொண்டு ரோம கடவுள்களாகிய தனது நேசர்களை பிரியப் படுத்தத்தக்கதாக தனது சொந்த கணவனை மூன்று கூறாக்கினாள் ! தேவன் அவர்களுக்கு இரக்கம் பாராட்டுவாராக, நிச்சயமாக. அவர்கள் சூரியக் கடவுளான அஸ்தரோத் பாலாம், பரலோகத்தின் ராணி என்பன போன்ற நூற்றுக்கணக்கான கடவுள்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மணவாட்டி, தன்னுடைய கீர்த்தியற்ற நேசர்களை சாலமோனின் உன்னதப்பாட்டில் தேவன் தம்முடைய மணவாட்டி ஒவ்வொரு தன் நேசர்களுக்காகவும் தன்னை விரித்து வைத்து சோரம் போய் இவ்விதம் அவள் ஒரு வேசியாயிருந்தாள் என்று கூறுவதை நீங்கள் வாசிக்கவில்லையா? நான் வெளிப்படையாக பேசுகிறேன். வேதமும் அவ்விதம்தான் கூறுகின்றது. அவளோடு கூடச்செல்ல விருப்பமுள்ள எந்த மனிதனும் அவளோடு போகலாம். விருப்பமுள்ள எந்த மனிதனும் அவளோடு போகலாம். கிறிஸ்துவின் மணவாட்டியும், எல்லா பழைய அசுத்தத்திற்கும், அருவருப்பான பழக்க வழக்கங்களுக்கும் தன்னை உட்படுத்தி எல்லா ஸ்தாபனங்களும் தன்னோடு விபச்சாரம் செய்யத்தக்கதாக தன்னை விரிவாக்கி வைத்துவிட்டாள்.  103. நான் இவ்விதமாக பிரசங்கம் செய்கிறதற்காக கடுமையாக விமரிசிக்கப்பட போகிறேன். அதைக் குறித்துப் பரவாயில்லை. ஏனெனில் அதற்காக நான் ஆசீர்வதிக்கப்படவும் போகிறேன். நான் பிரசங்கிக்கும் காரியங்கள் சத்தியமாயிருக்கிறது. ஏனெனில் தேவன் சத்தியபரராயிருக்கிறார். அவர் அவ்விதம் சொல்ல விரும்புகிறார். நானும் என்னால் முடிந்தவரை அதையே கூற முயற்சிக்கிறேன்.  104. அவள் தனது அநேக நேசர்களைப் பிரியப்படுத்த முயற்சித் தாள். ஹூ... ஹூம். அவ்விதம் பிரியப்படுத்த நினைத்தபோது, அவள் தேவனுடைய வார்த்தையைத் தனது நேசர்களோடு கலப்பினமாக்க முயற்சித்தாள்; ஆனால் அது கிரியை செய்யாத படியினால் “தேவ வார்த்தையின் மேல் குற்றம் சுமத்து” என்ற தன்னு டைய சொந்த பிரமாணத்தை உண்டாக்கி விட்டாள். இந்த ப்ராடஸ்டண்டுகள் கத்தோலிக்கரைப் பார்த்து, 'அவர்கள் கத்தோலிக்கர்" என்ற விதமாய் அழைக்க விடாதீர்கள். ஏனெனில் இவர்களும் தங்கள் சபைகள் சங்கத்தில் கத்தோலிக்கர்களின் கிரியைகளைத்தான் செய்கிறார்கள் --- விபச்சாரம். வேதம் இவர்களை வேசிகள் (Harlots) என்று அழைத்ததைக் குறித்து வியப்பொன்று மில்லை! அது கடினமான வார்த்தை இல்லையா? அது உன் முதுகில் உள்ள தோலை உலுக்குவதாகும். ஆனால் சில சமயங்களில் அத்தகைய உலுக்குதல் உங்களை விழித்தெழச்செய்ய தேவையாயிருக்கிறது.  105. அவளும் சரியாக அவ்விதமாகவே செய்தாள் இஸ்ரவேல் என்னும் மணவாட்டி வார்த்தை - அபிஷேகிக்கபட்ட தீர்க்கதரிசியான சாமுவேலை விட்டு செங்கோலை ஏந்திய சவுலைத் தெரிந்துக் கொண்டது போல, இயேசுவின் மணவாட்டி தன்னு டைய வார்த்தையாகிய மணவாளனைவிட்டு விட்டாள்! அவள் முடிவில் செங்கோலை ஏந்திய ராஜாவிடம் ஆயிரம் வருட அரசாட்சியில் வந்திருக்க வேண்டும். ஆனால் அன்றே அவள் அதை புறம்பே உதறித்தள்ளினவளாய் காணப்பட்டாள். ஆகவே தேவன் புறஜாதியில் ஒரு மணவாட்டியை தெரிந்தெடுக்கச் சென்று விட்டார். அது சரியா? அது தான் வார்த்தையாயிருக்கிறது.  106. இப்பொழுது, அவள் வார்த்தையாகிய இயேசுவை தள்ளிவிட்டு போப் என்னும் வேறொரு மனிதனையும் அவன் கொள்கையையும் விவாகம் செய்து கொண்டாள். இப்பொழுது அவளுக்கு இயேசு இல்லை; கத்தோலிக்க மதத்தலைவன் (Pope) தான் இருக்கின்றான். ப்ராடெஸ்டண்டு மார்க்கத்தார்களுக்கும் இப்பொழுது இயேசு இல்லை; அதற்கு பதிலாக மிருகத்திற்கு கொடுக்கப்பட்ட சுரூபமாகிய ஸ்தாபனம் தான் இருக்கின்றது.  107. அவளாலும் ஸ்தாபனங்களாலும் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. ஏனெனில் அவள் வேசியாயிருக்கிறாள். வேதம் அவளை அவ்விதம் தான் அழைக்கிறது. தன் வேசித்தன மாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற் பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். வேசித்தனம் என்றால் என்ன? அது அசுத்தமாக ஜீவித்தலேயாகும். ஜனங்களுக்கு அவள் கொடுக்கும் உபதேசமாகிய அசுத்தமே வேசித்தனமாகும். பூமியின் ராஜாக்களும், குடிகளும் அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் வெறி கொண்டிருந்தார்கள். அது முற்றிலும் சரி. சகோதரனே அதை கவனி , அதற்காக அவர்கள் உன்னுடைய தொண்டையை அறுக்கவும் தயங்கமாட்டார்கள். கத்தோலிக்கர் மட்டுமல்ல, இந்த ப்ராடெஸ்டண்டுகளும் கூட.  108. ஜோசப் ஸ்மித் (Joseph Smith) என்பவரைக் கொன்ற மெத்தோடிஸ்டுகளே, நீங்கள் இப்பொழுது காக்கையைப் போல் கத்துகின்றீர்கள். அவருடைய உபதேசத்தை நான் விசுவாசிக்கிற தில்லை. அதுபோல் உங்களுடைய உபதேசத்தை நான் விசுவாசிக்கிற தில்லை. அது அதுவல்ல! அது நீங்களே. அதன் காரணத்தினால்... இந்த நாட்டிலே நீங்கள் உங்கள் உபதேசத்தை பிரசங்கிக்க எவ்வளவு சுதந்திரம் பெற்றிருக்கிறீர்களோ அவ்விதம் ஜோசப் பெற்றிருந்தார். ஆனால் உங்கள் உபதேசத்தைக் காட்டிலும் அவர் சற்று வித்தியாசப்பட்டார் என்பதினால், இல்லினாய்ஸ் (Illions) என்னும் இடத்தில் நீங்கள் அவரை காரணமின்றி சுட்டுக் கொன்றுவிட்டு, பின்பு கத்தோலிக்க சபையைக் குறித்து கூக்குரலிடுகிறீர்கள்! நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்ட மெத்தோடிஸ்டுகளே! உங்கள் அருவருப்புகளினின்று வெளியே வாருங்கள் - உங்கள் செயல்களைக்கண்டு ஜான் வெஸ்லிக்கு அவர் கல்லறையிலும் கூட நிம்மதி இராது. ஜான் வெஸ்லி அவ்விதமாக ஒரு சபையை உண்டாக்கவில்லை . "ரிக்கீகளும்" (Rickies) "எல்வீசுகளும்" (Elvises) போன்றதொரு கூட்டம் ஜான் வெஸ்லியின் மரணத்திற்குப் பின்பு தான் உண்டாயின. அது உண்மை. இன்றைக்கு இருக்கிறதான காரியங்களை ஆதிபெந்தெகொஸ்தே சபை உருவாக்கவில்லை. ஆதி பெந்தெகொஸ்தேயினரின் மரணத்திற்கு பின்பே இவைகள் உண்டாயிற்று. அது உண்மை. இன்றைக்கு தங்களை பெந்தெ கொஸ்தே என்று அழைத்துக் கொள்ளும் அமைப்பை இயேசு கிறிஸ்து உண்டாக்கியிருக்க முடியாது; பரிசுத்த ஆவியும் அதை உண்டாக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக வேறெதையோ நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்; பரிசுத்த ஆவியை அவர்கள் ஒரு போதும் கொல்ல முடியாது. அது ஒரு மணவாட்டியை எப்படியாயினும் ஆயத்தப்படுத்தும். அது எப்படியாயினும் ஒன்றை ஆயத்தப் படுத்தும். அம்மணவாட்டி ஏற்கனவே முன்குறிக்கப்பட்டிருக் கிறாள் என்று அவர் கூறியிருக்கிறார். 109. அவள் வேசியாயிருந்ததினிமித்தம் தன்னுடைய வார்த்தை மணவாளனை விட்டுவிட்டு கத்தோலிக்க மதத்தலைவனை விவாகம் செய்து கொண்டு விட்டாள், ஆவிக்குரிய பிரகாரமாக அவளால் பிரசவிக்க முடியாது. ஆனால் ஸ்தாபனத்தை அவளால் பிரசவிக்க முடியும். ஏனெனில் ஸ்தாபனத்தின் வித்து அவளிடம் நிறைந்து இருக்கிறது. அவள் வேசியாயிருப்பதால் ஆவிக்குரிய பிரகாரமாக அவளால் பிரசவிக்க முடியாது. கத்தோலிக்க சபையானது சில கிறிஸ்துவ மத மூட நம்பிக்கைகளின் மேலும் அநேக ரோம கொள்கைகளின் மேலும் கட்டப்பட்டிருக்கின்றது. பெந்தெ கொஸ்தே சபையானது அதைவிட கேவலமாக --- குதித்தல், கூக்குரலிடுதல் அன்னிய பாஷை பேசுதல் போன்ற காரியங்களின் மேல் கட்டப்பட்டிருக்கின்றது. ஒரு வேதக் கேள்விக்கு பதில் கூற வேண்டும் என்ற விவாதம் வரும்போது மூர்க்கத்தினால் நிறைந்து உங்களை அவர்கள் சபையினின்றே துரத்திவிடுவார்கள். தேவன் அங்கு வந்து ஒரு மரித்தவரை உயிரோடு எழுப்பியிருந்தாலும், நீங்கள் அவர்களுடைய ஸ்தாபனத்தை சேராதவர்களாயிருந்து அவர்களோடு ஒத்து போக வில்லையென்றால், அவர்கள் உங்களை விரட்டி விடுவார்கள்.  110. இந்த பழைய மகாவேசி பாவங்களை மன்னிப்பதற்கு தனக்கு அதிகாரம் உண்டு என்று உரிமை கொண்டாடுகிறாள். உன்னுடைய உரிமைகளின் நிமித்தம் நீ நியாயந்தீர்க்கப்படவோ அல்லது அறியப்படவோ முடியாது, உன்னுடைய கிரியைகளினி மித்தமாகவே நீ அறியப்படுகின்றாய். அவள் எவ்விதம் பாவத்தை மன்னிக்க முடியும்? அவளைக் கவனியுங்கள். இயேசு, "என்னிடத்தில் பாவம் (அவிசுவாசம்) உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? தேவனுடைய வார்த்தையை எங்கு அவிசுவாசித்திருக்கிறேன் என்று காண்பியுங்கள் பார்க்கலாம்" என்றார். 111. பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் உண்டு என்று உரிமை கொண்டாடுகிறார். ஆனால் அதுவோ வார்த்தையினால் மட்டுமே வருகின்றது. அது சரி. பாவத்தை மன்னிக்க தேவனுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. அது சரியா? அந்த பரிசேயர்கள் அவ்விதம் கேட்டார்களல்லவா? அந்த குருட்டு மாய்மாலக் காரர்களைக் குறித்து என்ன காரியம்? ஏன்? வார்த்தையாகிய அவர் அவர்கள் மத்தியில் நின்று கொண்டிருப்பதை அவர்களால் காணமுடியாதவாறு குருடராயிருந்தார்கள்? அவரே வார்த்தை யாயிருக்கிறார் ! தேவனுக்கு மகிமை! அதன் காரணமாகவே அவர் பாவங்களை மன்னிக்க முடியும். அவர் தேவனாயிருந்தார். அவரே வார்த்தை மாம்சமானவர்.  112. தங்களுக்கு இயேசு வல்லமை கொடுத்திருக்கிறார் என்று கத்தோலிக்கச் சபை கூறுகின்றது. சபைக்கு அவர் வல்லமையைக் கொடுத்திருக்கிறார், அது சரிதான், அதை நாம் விசுவாசிக்கிறோம், ஆனால் அவளுடைய ஸ்தாபன குமாரத்திகளெல்லாம் வேசிகளா யிருக்கின்றனர். "சகோ. பிரன்ஹாமே, அது ஒரு பெரிய வார்த்தை " என்று நீங்கள் கூறலாம். அது என்னுடைய வார்த்தையில்லை; தேவனுடைய வார்த்தை. அது உண்மை. அது என்னுடையது அல்ல, அது அவருடையது. 113. சரி. எவ்விதம்? "அவர்கள் எவ்விதம்...? அவர்கள் எவ்விதம் வேசியானார்கள்? ஏன் அவர்களெல்லோரும் நல்ல ஜனங்களா யிற்றே" என்று நீங்கள் கூறலாம். அதைக் குறித்து நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர்கள் எப்படியிருக்கிறார்களென்பதைக் குறித்து நான் சொல்கிறதில்லை. கத்தோலிக்கர்கள் நல்லவர்கள் அல்ல என்றும் நான் கூறுகிறதில்லை. எல்லோரைப் போலவும் அவர்களும் நல்லவர்களே. அவர்கள் நம்மைப்போல மனித பிறவிகள். ஆனால் அந்த பழைய ரோம சபையைக் குறித்து பேசும்போது, அவள் தவறாயிருக்கிறாள். ப்ராடெஸ்டண்டுகளும், மெத்தோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும் அவ்வாறே எல்லோரைப் போன்றும் நல்லவர்களே. 114. காரியம் என்ன வெனில், பின் அவள் எவ்விதம் ஒரு வேசியாக இருக்க முடியும்? ஏன்? ஏன் அவள் ஒரு வேசி என்று அழைக்கப்படுகிறாள்?... அவளுக்கு ஒரு வார்த்தை பரிசோதனையைக் கொடுங்கள். அதுதான் அவளை யாரென்று கண்டுபிடிக்கும் முறை. ஹூ... ஹூம். வார்த்தையை அவளிடம் கூறி அதற்கு அவள் என்ன சொல்லுகிறாள் என்று பாருங்கள். "ஓ, நாங்கள் வேதப் பள்ளியில் கல்வி பயின்றிருக்கிறோம், அத்தகைய காரியங்களெல்லாம் அப்போஸ்தலருடைய நாட்களுக்குத்தான் பொருந்தும், இன்றைக்கு அல்ல" என்பார்கள். கிறிஸ்துவின் சபை (Churchof Christ) என்று உன்னை அழைத்துக் கொள்பவளே, "வேதம் எங்கு பேசுகிறதோ அங்கு பேசு, எங்கு அமைதியாயிருக்கிறதோ அங்கு அமைதியாயிரு” என்று கூறுபவளே, நல்லது; இப்பொழுது நீ சிறிது பேசி நான் கேட்க விரும்புகிறேன். இல்லையென்றால் பேசாமல் வாயை மூடிக்கொள். தேவனுடைய வார்த்தை எல்லா வாயையும் மூடும் சகோதரனே. ஒரு மனிதனும் வீம்புச் செய்ய முடியாது. அது உண்மை . 115. அவளுடைய எல்லா குமாரத்திகளும் வேசிகள். எவ்வாறு? அவர்களுடைய தாயாரைப் போலவே வார்த்தைக்கு விரோதமாக ஆவிக்குரிய விபச்சாரம் செய்கிறார்கள். அவ்விதம்தான் கத்தோலிக்க சபையானது மகா வேசியானது. அவளுடைய குமாரத்திகளும் அவ்விதமே வேசியானார்கள்; அதே காரியம், வார்த்தைக்கு விரோதமான வேசித்தனம். அவளும் அவளுடைய குமாரத்திகளும் விபச்சாரத்தின் கருப்பையையுடையவர்கள். மரணம் மட்டுமே அவர்களிலிருந்து வரமுடியும். தேவன், ஜீவனை மரணத்தினின்று கொண்டு வர முடியாது, இறந்தே பிறக்கும் எதுவும் உயிரோடு இருப்பதில்லை. அதைக் குறித்து யோபு "அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ ? ஒருவனுமில்லை " என்று கூறினான். சரி. நல்லது. அவள் தன்னில் மரித்திருக்கும் போது எவ்விதம் பிரசவிக்க முடியும்? அவள் வேசியாயிருக்கையில் எப்படி கன்னிகையாயிருக்க முடியும்? பாருங்கள், அதுதான் காரியம். அந்த முழு காரியமும் அதுவே.  116. ஓ, நாம் இப்பொழுது ஆழமான ஐசுவரியத்தை அடையப் போகிறோம். அது ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் முடிய அடங்கியுள்ள உயிர் சத்துக்கள். கவனியுங்கள். அவனும், இவனுடைய குமாரத்திகளும் விபச்சார கருப்பையைக் கொண்டிருக்கிறார்கள். மரணம் மட்டுமே அவர்களிலிருந்து உற்பவிக்கும். நீங்கள் ஒரு ஸ்தாபனத்தில் சேர விரும்பினால், அவ்வாறு செய்வது சரியென்று நீங்கள் நினைத்தால், எங்கே போய் முடியப் போகிறீர்கள் என்பதை பாருங்கள். நீங்கள் சரியாக மரணத்தின் மத்தியில் போய் முடிவீர்கள். அது முற்றிலும் சரி. அதை இப்பொழுது உங்களால் காணமுடியவில்லையென்றால் நீங்கள் ஆவிக்குரிய குருடராயிருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். பாருங்கள்? 117. இப்பொழுது, நாம் சற்றுபின் சென்று அதை மறுபடியும் எடுத்து ... நாம் கடந்த ஞாயிற்று கிழமையன்று ஆராதனையில், "ஆத்துமாவின் வாசல்" என்ற பொருளை சிந்தித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? இப்பொழுது கவனியுங்கள். மாம்ச பிரகாரமான கருப்பை என்று ஒன்றும், ஆவிக்குரிய பிரகாரமான கருப்பை என்று ஒன்றும் இருக்கின்றது. அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? ஆவிக்குரிய பிரகாரமான கருப்பை மாம்சபிரகாரமான கருப்பை . மனம் (mind) அல்லது சிந்தனை ஆவியின் கருப்பையாயிருக்கிறது. ஏன்? நினைவில் கொள்ளுங்கள், கடந்த ஞாயிறன்று நான் அதை உங்களிடம் கூறி, வரைந்து காண்பித்தேன். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். ஐந்து விதமான உணர்ச்சிகள் வெளிபுறத்திலிருந்து உள்ளேயுள்ள வித்திற்கு வந்து நுழைகின்றன என்பதை நான் உங்களுக்கு வரைந்து காண்பித்தேன் : அவைகள் பார்த்தல், ருசித்தல், உணர்தல், முகர்தல், செவிசாய்த்தல் என்பன. ஐந்து விதமான உணர்ச்சிகள் உள்ளேயிருந்து கிரியை செய்கின்றன, அவைகள்: மனோபாவனை, மனசாட்சி, ஞாபகம், யூகித்தல், பாசம் என்பன. ஆனால் ஜீவனின் பக்கம் ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. அது நீங்கள் ஏற்றுக்கொள்ளவோ அல்லது புறம்பாக்கவோ தக்கதாக சுயாதீனப் பிரதிநிதியாக (Free moral agency) செயல்படுகிறது. பாருங்கள்? 118. அந்த விதமாகத்தான் ஆவிக்குரிய விபச்சாரம் செய்யப் பட்டது. தேவ வார்த்தையின்படி சரியென்று அறிந்த பிறகு, தேவவார்த்தைக்கு விரோதமாக பிசாசின் பொய் சிந்தனையோடு உறவு (Inter course) கொள்ளுதல் --- சரியாக இதைத்தான் ஏவாள் செய்தாள். சாத்தானின் பொய்யை விசுவாசித்து ஆவிக்குரிய உறவானது ஏவாளின் கருப்பையாகிய சிந்தனையில் முதலாவது சம்பவித்தது, பின்பு அது அவளுடைய ஆத்துமாவைக் கறைப்படுத்தி அங்கே மரணத்தை உண்டாக்கின பின்புதான், மாம்சப்பிரகார மான உறவு சாத்தானோடு நடந்தது. ஒரு பெண் முதலாவது, யாராவது ஒரு மனிதன் தன்னிடம் பேச இடங்கொடுத்து தன் கணவனல்லாத அவனை ஏற்றுகொள்வதென்பது, அவள் தன் கணவனுக்கு விரோதமாக விபச்சாரத்தில் ஈடுபடுவதற்குகந்த ஒரு நிச்சயமான வழியாயிருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மணவாட்டி, மனிதனால் உண்டாக்கப்பட்ட கொள்கைகளையும், கோட் பாடுகளையும் தேவனுடைய வார்த்தையின் இடத்தை ஆட்கொள்ள விடும் போது அங்கே அவள் விபச்சாரம் செய்கிறாள். 119. “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் ஏற்கனவே அவளோடே விபச்சாரஞ் செய்தாயிற்று' என்று இயேசு கூறவில்லையா? ஏன்? அவன் தன் சிந்தனையில் அதை வரவிடுகிறான். அதுதான் கருப்பை; அங்கேதான் அது தன் உற்பத்தியை தொடங்குகிறது. சாத்தான் அங்கு வந்து தன் வார்த்தையை விதைத்து விடுகின்றான். "ஏதாவது ஒரு நாளில் நான் என்னுடைய ஜீவனைக் கொண்டு வந்து இப்பூமியை சீர்படுத்தி அதை நிரப்புவேன்” என்று தேவன் கூறினார். ஏவாள் எதை செய்யத் தவறினாளோ அதை மரியாள் செய்தாள். மரியாள் தேவவார்த் தையை ஏற்றுக்கொண்டாள். ஏவாளோ, சாத்தானின் பொய்யை ஏற்று கொண்டாள். மரியாளின் வித்தின் மூலமாகவும், அவருடைய வார்த்தையாகிய மணவாட்டியின் மூலமாகவும் திரும்பவும் இந்த உலகம் பெருகி ஆயிரம் வருட அரசாட்சியில் காணப்படும். அனு ப்பப்பட்ட வார்த்தையானது ஒவ்வொரு முன் குறிக்கப்பட்ட ஆத்துமாக்களிலும் பயிரிடப்பட்டு, ஆவியானது கீழிறங்கி வந்து அதன் மேல் நீர்ப்பாய்ச்சுவதினால் அவர்கள் மரிக்க மாட்டார்கள் “நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன்'' என்றார். ஓ! சகோதரர்களே, சகோதரிகளே அது உண்மை .  120. அது என்ன? சிந்தனையே ஆவியின் கருப்பையாயிருக்கிறது. என்ன? ஏற்றுக் கொள்ளுதல் அல்லது தள்ளிவிடுதல். அவ்விதம்தான் அவர்கள் விபச்சாரம் செய்கின்றனர்- தேவனுடைய வார்த்தைக்கு எதிராக சாத்தானின் பிசாசு ஆவி அவர்களுக்குள்ளே வருவதால், விபச்சாரம் செய்கின்றனர். ஏவாள் (இதை கவனியுங்கள்) தவறான வார்த்தை வித்தை, சாத்தானின் பொய்யை, யேகோவாவின் வார்த்தைக்கு விரோதமாக ஏற்றுகொண்டாள். அதன் கனி மரணமாயிற்று.  121. இன்னும் சில நிமிடங்களில் நாம் இந்தப் பொருளைக் குறித்து பேசுவதை நிறுத்துவோம். ஆனால் நாம் அதை நிறுத்தும் முன்பாக இது உங்களில் மிகவும் ஆழமாய்ப் பதிய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இன்னும் ஒரு நிமிடத்தில் இந்தப் பக்கத்தை....  122. இப்பொழுது, கவனியுங்கள். ஏவாள்... என்ன? இவள் என்ன செய்தாள்? அவள் தவறான வித்தைப் பெற்றுக்கொண்டாள். அதை எவ்விதம் செய்தாள்?--- சாத்தானின் பொய்யை விசுவாசிப்பதினால். எத்தனைபேர் அது சரியென்று கூறுகின்றீர்கள்? ஏன், நிச்சயமாக அது சரியே, நிச்சயமாக. அவள் சாத்தானின் பொய்யை ஏற்றுக்கொண்டாள். அவ்விதம் செய்ததினால் அவள் எதைக் கொண்டு வந்தாள்? சாத்தான் அவளைப் பார்த்து, "இது மகிமையானது என்று உனக்குத் தெரியுமா? இது ஒரு அற்புதமான காரியம், இது உங்களுக்காகவே உண்டாக்கப்பட்டதென்று உனக்குத் தெரியுமா? ஏன், இக்காரணமாகத்தான் நீங்களும் உண்டாக்கப்பட்டு இருக்கிறீர்கள்” என்றான். “ஓ, அவ்விதமாகவா நாங்கள்?” என்றாள் ஏவாள். சாத்தான், "இது கண்களுக்கு இன்பமாயிருக்கிறது, மிகவும் நல்லது. நீ நிச்சயமாக இதை முயற்சி செய்து பார்?” என்றான். அதற்கு ஏவாள், “ஆனால் தேவனாகிய கர்த்தர் ‘கூடாது, கூடாது! கூடாது- கூடாது அதற்கு இது சமயமில்லை' என்றாரே, நாங்கள் இதைச் செய்யக் கூடாது. இல்லை! இல்லை" என்றாள். சாத்தான், "உனக்கு ஒன்று தெரியுமா ...?” என்று கேட்டான். அதற்கு ஏவாள், 'ஓ அதை நாங்கள் செய்தால், நாங்கள் ........'', என்றாள். 123. சாத்தான், 'நீங்கள் நிச்சயமாக சாவதில்லை" என்றான். அந்த சொல் நயமுடைய நாவுள்ள சாத்தான். சாத்தான், மிருகத்தின் குளம்புகளைப் போல் பாதங்களும், பிரிந்திருக்கிற வாலும் உடை யவன் என்பதை நீங்கள் விசுவாசிக்கும் படி அவர்கள் பிரசங்கிக் கிறார்கள். அவன் அப்படிப்பட்டவனல்ல; அவன் பிரசங்கபீடத்தின் பின்னால் இருக்கும் சொல்நயம் படைத்தவன். அது உண்மை . அல்லது வாத்தைப் போன்று தன்னுடைய தலைமயிரை கீழிழுத்து வாரிவிட்டிருக்கும் சில "'ரிக்கி" (Ricky) யைப் போன்று, அங்கே உட்கார்ந்திருந்து யாராவது ஒரு தாயாரின் மகளுக்குத் தீங்கு செய்ய காத்திருக்கின்றவனைப் போன்று சாத்தான் இருக்கின்றான். அப்படிப்பட்ட மனிதன் தான் அவன். அவன் அழகான தோற்றம் கொண்ட வன். ஓ....  124. இப்பொழுது, அந்த கருப்பை... ஏவாள் அந்த தவறான வார்த்தை வித்தை ஏற்றுக்கொண்டாள். இப்பொழுது, சற்று நெருக்கமாய் கவனியுங்கள். கர்த்தருக்குச் சித்தமானால் நாம் இப்பொழுது இதை ஆழமாக செலுத்த போகிறாம். அவள் தவறான வார்த்தை வித்தை ஏற்றுக்கொண்டாள். அது என்ன செய்தது? அவள் ஞானமடைவாள் என்றும், ஒரு பெரிய சபையை சேரலாம் என்றும், நகரத்திலேயே அதிகமாகப் போதிக்கப்பட்ட வளாயிருப்பாள் என்றும், மற்ற ஜனங்களைப்போல அவளும் இருக்கலாமென்றும் சாத்தான் அவளிடம் பொய் சொன்னான். நிச்சயமாக அப்படித் தான் யேகோவாவின் மணவாட்டியும் விசுவாசித்திருப்பாள். அது முற்றிலும் உண்மை . மரியாளிடம் தேவவார்த்தை வந்தபோது அவன் மரியாளிடம் அந்த விதமாகத்தான் சாத்தான் அவளிடம் கூறியிருக்கக்கூடும். ஆனால் மரியாள் அதை உதறித் தள்ளினாள். மரியாள், “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே' என்றாள். தேவதூதன், “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமான வருடைய பலம் உன் மேல் நிழலிடும், அது வார்த்தையாகிய தேவன்” என்றான். அதற்கு மரியாள் “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது' என்றாள். அது ஜீவனைக் கொண்டு வந்தது. அதுதான் காரியம். ஆனால் சாத்தான் அவளைப் பார்த்து, "எல்லோரும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள்” என்றான். 125. அந்த அழகிய பெண்மணி, அதைகுறித்து ஒரு கவனமும் செலுத்தவில்லை. யூதேயா தேசத்திற்கு அவள் சென்று, "நான் ஒரு பிள்ளையை பெறப்போகிறேன்" என்று கூறினாள்; எதையும் அவள் தன் சரீரத்தில் உணர்வதற்கு முன்பு அவள் அவ்விதம் கூறினாள், ஏனெனில் வார்த்தையானது ஏற்கனவே அங்கு வந்து விட்டது. அதுதான் காரியம். அவள் இரண்டாம் தடவை ஜெப வரிசைக்கு செல்ல அவசியமிருக்கவில்லை. ஆம் ஐயா; அவள் அதை விசுவாசித்தாள். ஜீவனுக்குரிய எந்த அடையாளமும் அங்கு காணப்படவில்லை; கர்ப்பத்திற்குரிய எந்தவித அடையாளமும் அவள் அடையவில்லை; எல்லாம் எப்போதும் இருக்குமாப்போல காணப்பட்டது. ஆனாலும் எல்லோரிடமும் அவள், "நான் ஒரு பிள்ளையைப் பெறப்போகிறேன்'' என்றாள். ஏன்? கர்த்தர் உரைத்தார். அது என்ன?... அதுதான் ஆபிரகாமின் ராஜரீக வித்து. 126. "அந்த பெண்ணின் மூலமாகவா ஒரு பிள்ளையைப் பெறப் போகிறாய் ஆபிரகாம்" என்று ஜனங்கள் கேட்டார்கள். அதற்கு அவன், "ஆம், தேவன் அவ்விதம் கூறினார்” என்றான். அதற்கு அவர்கள், “25 வருடங்களுக்கு முன்பு இதையேதான் எங்களிடம் கூறினாய்” என்றார்கள். அதற்கு அவன், "அது எனக்குத் தெரியும். ஆனால் தேவன் அவ்விதமாக சொன்னார்.” என்றான். அது தான் காரியம். அது, அதே காரியம்தான். "நல்லது, ஸ்தாபனமானது உங்களை வெளியே துரத்திவிடுமே" என்று ஜனங்கள் கூறினால் இன்றைக்கு நீங்கள் என்ன கூறுவீர்கள்? - "தேவன் அவ்விதம் கூறினார்; தேவன் அவ்விதம் கூறினார்” என்று கூற வேண்டும். "அந்தவிதமாக நீ ஞானஸ்நானம் எடுத்தால் ---” என்று கூறுவார்கள். "நல்லது, தேவன் அவ்விதம் கூறினார். அவ்வளவுதான் எனக்குத் தெரியும்," என்று கூற வேண்டும். அங்கேதான் உங்கள் கன்னித்தன்மை. ஞானஸ்நான உபதேச மட்டுமல்ல, எல்லா தேவனு டைய வார்த்தைக்கும் கீழ்ப்படிய வேண்டும். பாருங்கள்? ஆகவே கவனியுங்கள். 127. ஆவிக்குரிய பிரகாரமாகவும், மாம்சப்பிரகாரமாகவும் அது ஏவாளோடு காணப்பட்டது. முதலிலும், அதன் பின்பும், ஒவ்வொரு சமயமும் அவ்வாறே இருந்தது. ஏதாவது ஒரு சமயத்தில் ஒரு பெண் தவறான அடி எடுத்து வைக்கும் போது நான் எவ்விதம் அதைக் கூறுவேன் என்றும், அதை குறித்து என்னை மன்னிக்கும் படியாகவும் இன்று காலையே சகோதரிகளாகிய உங்களுக்கு நான் கூறியிருக்கிறேன் - நான் கிறிஸ்துவையும் அவர் மணவாட்டியையும் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன் - ஆனால் எப்பொழுதாவது ஒரு பெண் தவறான அடி எடுத்து வைப்பாளென்றால், அவள் முதலாவதாக அதை தன் சிந்தனையில் ஏற்றுக் கொள்கிறாள். அது உண்மை . யாராகிலும் ஒரு சொல் நயம் படைத்தவன் வசப்படுத்தும் போது, அவள் தன்னுடைய சரியான கணிப்புக்கு எதிராக அதற்கு செவி கொடுக்கும் போது, விபச்சாரம் அங்கு நடக்கிறது. ஆகவே சாத்தான் ஏவாளின் சிந்தனையை முதலில் தாக்கினான். அவளுடைய சிந்தனையின் கருப்பை தேவனுடைய வார்த்தையை சந்தேகித்த தினால் மாம்சமான கிரியை அங்கு சம்பவித்தது. 128. நாம் மறுபடியும் பிறப்பதற்கு ஒரே வழி, முதலாவதாக நம் சிந்தனையாகிய கருப்பையில் வார்த்தையை ஏற்று கொள்வதாகும், அதன் பின்தான் ஆவி அதன் மேல் ஊற்றப்பட்டு அதை உயிர்ப்பிக் கின்றது. அங்குதான் காரியம் இருக்கின்றது. அதுவே சரியான சுவிசேஷச் செய்தியாயிருக்கிறது சகோதரனே. இந்த மணி நேரத்தில் பரி. பவுல் இன்று பிரசங்கிப்பாரென்றால் இதையேதான் பிரசங்கிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். சரி.  129. ஏவாளிடம் பலன் எவ்வாறு இருந்தது? ஆவிக்குரியதும், மாம்சத்திற்குரியதுமான மரணமாயிருந்தது. இதற்கொத்ததான மற்ற வார்த்தையைப் பெற்றவர்களுடைய பலன்கள் என்ன? அது கேளிக்கைக்கும், சரசத்திற்கும் சென்றது. ஆவிக்குரிய பிரகார மாவும், மாம்சபிரகாரமும் மரணம். சரீரமும் ஆவியும் சேர்ந்து ஒன்றுமில்லாமல் அழிந்து போகும், அது சரியான உண்மை.  130. கவனியுங்கள். மரியாளின் சிந்தனை கன்னி கருப்பையா யிருந்தது. ஏன்? அவள் தேவனுடைய வார்த்தையை விசுவாசித் தாள். யார் எவ்வளவு கேலி செய்திருந்தாலும், அதைக்குறித்து மற்றவர் எவ்வளவாகக் கூறியிருந்தாலும் அவளுக்கு கவலையொன்று மில்லை, அவள் தேவவார்த்தையை மட்டும் விசுவாசித்தாள்.  131. ஓ! நீங்கள் இதை புரிந்து கொள்கிறீர்களா? பாருங்கள், அது முதலாவது அவளுடைய சிந்தனையை தாக்குகிறது. அவளுடைய மாம்ச கர்ப்பப்பையில் இயற்கையான செயல் சம்பவிக்குமுன், ஆவிக்குரிய செயல் முதலில் சிந்தனையில் சம்பவித்து, பின்பு ஆவியானது மற்ற கிரியைகளை முடிக்கிறது. ஓ . உண்மையான ஆவிக்குரிய பிறப்பு சம்பவிக்குமுன் தேவவார்த்தையானது உங்களுடைய சிந்தனையில் முதலாவது நுழைய வேண்டியதா யுள்ளது; இதை விசுவாசியுங்கள். "என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், (அல்லது உபத்திரவ காலத்திற்குள் வராமல்) மரணத்தை விட்டு நீங்கி, ஜீவக்குட் பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லு கிறேன்” என்று இயேசு கூறினார். 132. ஓ, என்னே. இப்பொழுது. அவனுடைய கன்னித் தன்மையான கருப்பை, கவனியுங்கள், அவருடைய வார்த்தையை விசுவாசிப்பதற்கு கன்னித்தன்மையான சிந்தனை அவசியமா யிருக்கிறது. ஓ, சரி. ஒரு வேளை நீங்கள், "சகோ. பிரன்ஹாமே, அது சாத்தியமில்லை, அது அவ்விதமல்ல. அது அவ்விதமிருந்திருக்கு மானால் ஜான் வெஸ்லி அதைக் கண்டிருப்பார்; இன்னார், இன்னாரும் அதைக் கண்டிருப்பார்கள் " என்று கூறலாம். 133. நிச்சயமாக பிசாசு, மரியாளிடமும் அதே காரியத்தைத்தான் கூறியிருக்கக்கூடும். “நீயா? இந்தப் பட்டணத்திலேயே நீ மிகவும் ஏழை, இருந்தால் 16, 18 வயது கூட உனக்கு இருக்காது. இந்த குழாயினண்டையில் வந்து தண்ணீர் எடுக்கிறவள், உன் தகப்பனார் மரித்து விட்டார், உன் தாயார் குருடியாயிருக்கிறாள். (அன்னாள் தான் அவளுடைய தாய் என்று கூறப்படுகிறது) நீயா பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரிக்கப்போகிறாய்?” என்று பிசாசு மரியாளிடம் கூறியிருக்கக் கூடும்.  134. அதற்கு மரியாள், “கவனி பிசாசே, என்னுடைய வயது சென்ற தாயார் கண் தெரியாதவள் தான், ஆனால் அவள் ஒரு பயபக்தியுள்ளவள். அவளுடைய வாயின் மூலம் என் இருதயத்தில் ஒரு வித்தை விதைத்திருக்கிறாள். ஏசாயா என்னும் புத்தகத்திலே 7ம் அதிகாரம் 14ம் வசனத்தில், தேவனுடைய வார்த்தை , "இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்” என்று எழுதியிருக்கிறதை நான் படித்திருக்கிறேன்" என்றாள். 135. அல்லேலூயா! வார்த்தையானது மாம்சமாவதை உங்களால் காண முடிகிறதா? அதுதான் காரியம். தேவன் ஒரு சபையை பெறப் போகிறார். அது தேவனுடைய வார்த்தையினால் பிறந்த சபையாயிருக்கப்போகிறது. ஏனெனில் அது தேவனுடைய ஜீவிக்கிற வார்த்தையாயிருக்கிறது. உங்களால் அதைக் காணமுடிகிறதா? "அதை நீ எவ்விதம் அறிந்து கொள்வாய்?, இன்றிலிருந்து நீ எவ்விதம் அழைக்கப்படப் போகிறாய் என்று உனக்குத் தெரியுமா?" நீ இவ்விதமாக அழைக்கப்பட...'' என்றெல்லாம் அவன் மரியாளிடம் கேட்டிருக்கக்கூடும்.  136. அதற்கு அவள், "நான் எவ்விதம் அழைக்கப்படப் போகிறேன் என்பதைக் குறித்து கவலையில்லை; அவருடைய வார்த்தை யின்படியே எனக்கு ஆகக்கடவது” என்று சொல்லியிருப்பாள்.  137. அவ்விதம் இன்று எல்லோராலும் சொல்லக் கூடுமா? “கர்த்த ருடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது'' என்று ஜனங்கள் தங்கள் இருதயத்தின் ஆழத்தினின்று சொல்லக்கூடுமா? உண்மையாகவே சொல்லக் கூடுமா? எங்காவது உள்ள முன்குறிக்கப்பட்ட ஒன்று இரண்டுபேர் அதை பொறுக்கி எடுத்து அவ்விதம் அதை உண்மையாக விசுவாசிப்பார்கள். சகோதரர்களே, நீங்கள் அதை உண்மையாகவே பெற்று கொண்டு, பின் வார்த்தையின் மீது தண்ணீரானது பாய்ச்சப்படும் போது, நீங்கள் அக்கினியைப் பரப்புகிறவர்களாயிருப்பீர்கள். ஆம் ஐயா. 138. இப்பொழுது, அது என்ன? சிந்தனை என்னும் கருப்பை ஒரு பிள்ளை வருவதற்கென்று கன்னியாக வைக்கப்பட்டிருக்கின்றது. அதன் கனிகள் என்ன? அது நித்திய ஜீவனாகும். ஏவாளும் கன்னித் தன்மையைக் கொண்டவளாயிருந்தாள், ஆனால் முதலாவதாக தேவனுடைய வார்த்தையை ஒரு பொய்யின் மூலம் அவிசுவாசிப்பதற்கு இடம் கொடுத்து விட்டாள். பின் சாத்தான் என்ன செய்தான்? தவறான வழியில் அவள் தொடர்பு கொள்ளுமாறு செய்துவிட்டான். அவளுடைய பிள்ளை மரணமா யிருந்தது. 139. மரியாளின் கருப்பை கன்னித்தன்மையாயிருந்தது. தேவதூதன் அவளிடம், "நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்" என்றான். சாத்தான் அவளைப்பார்த்து, "நீ பேசாமல் இருந்தால் நலமாயிருக்கும்” என்றான். அதற்கு தேவதூதன், "இது தேவனுடைய செயல்" என்று கூறினான். மரியாள். ஏசாயா: 9:6ஐ சந்தேகமில்லாமல் நினைவு கூர்ந்து, "இதோ நான் ஆண்டவருக்கு அடிமை" என்று கூறினாள். அதன் பலன் என்ன? கன்னிப்பிறப்பின் மூலம், நித்திய வார்த்தை அவளுக்குள்ளிருந்து, நித்திய ஜீவனைப் பிறப்பித்தது. 140. சரி. யேகோவாவின் மணவாட்டி வார்த்தையைக் கலந்தாள். "இப்பொழுது அவ்விதமாகவா சொல்கிறீர்கள் சகோ. பிரன்ஹாம்? இன்று காலை நீங்கள் யேகோவாவின் மணவாட்டி விபச்சாரம் செய்து விட்டாள் என்று கூறினீர்களே?''  141. அந்த தொடர்ச்சியை நான் விடமாட்டேன். இப்பொழுது கூர்ந்து கவனிப்போம். நமக்கு இன்னும் ஒரு மணி நேரம் உண்டென்று நான் விசுவாசிக்கிறேன். நான் இன்னும் சிலவற்றை வைத்துள்ளேன். நான் சிலவற்றை விட்டுவிட்டு, இன்னும் சிலநிமிடங்கள் என்னால் முடிந்த வரை மிக வேகமாக வாசிப்பேன். நீங்கள் என்னுடன் பொறுமையுடனிருந்து, என்னுடன் ஜெபியுங்கள். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடுவேன் என்று நம்புகிறேன்.  142. இப்பொழுது யேகோவாவின் மணவாட்டி எங்கே தவறு செய்தாள்? அது சரியா? யேகோவா தம்முடைய மணவாட்டியை எகிப்திற்கு ஏன் அனுப்பினார்? தேவன் ஆபிரகாமிடம் தம்முடைய மணவாட்டியாகிய வித்து எகிப்தில் 400 வருடங்கள் பரதேசியா யிருப்பாளென்று வாக்குத்தத்தம் செய்திருந்தார், அது உண்மையா? அவர்களின் விடுதலைக்கென்று வார்த்தையின் நிறைவேறுதல் வந்தது ... நாமும் கூட அப்படிப்பட்ட வார்த்தையின் நிறைவேறுதலுக்காக காத்திருக்கிறோமா? நிச்சயமாக. சரி. அவர்கள் எவ்விதம் வார்த்தையைப் பெற்றுக் கொண்டார்கள்? அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கினார்களா?, ஒரு கூட்ட ரபிக்களாக அவர்கள் கூடிவந்து, "சகோதரர்களே, நாம் பரிசேயர்' என்ற ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கப் போகிறாம். அதற்காக சீட்டு போட்டு அதை ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்போகிறோம், அதன் மூலமாக தேவன் கிரியை செய்யப்போகிறார்" என்று கூறினார்களா? தேவன் அவ்விதமான ஒரு காரியத்தை ஒருபோதும் செய்யமாட்டார். எப்பொழுதும் செய்ததில்லை.  143. அவர்களிடத்திற்கு யாரை அனுப்பினார்?... மோசே என்ற ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியிடத்திற்கு வருகிறதாயிருக்கிறது. தேவன் மோசேயை அவர்கள் மத்தியினின்றே எழுப்பி, அபிஷேகித்து, அற்புதங்களை செய்த மற்ற பிசாசுகளின் மத்தியில் அவனை நிரூபித்துக் காண்பித்தார். ஏனெனில் மோசே வார்த்தையில் நிலை நின்றான்.  144. தம்முடைய ஜனங்களான இஸ்ரவேலரை தேவன் வெளியே கொண்டு வந்தார்; ஆனால் ஜாதிகளும் அவர்களோடு கலந்து வந்தார்கள். அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வரும் முன்பு, அவருடைய அருமையான மணவாட்டி மோவாபிய ரோடு விபச்சாரம் செய்துவிட்டாள். அதை அவள் எவ்விதம் செய்தாள்? அவள் அவ்விதம் செய்யவில்லையென்று உங்களால் கூறமுடியுமா? தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான ஒரு கள்ள தீர்க்கதரிசியின் மூலமாகச் செய்தாள். மோசேயைப் போன்று அவன் எல்லாவித ஆவிக்குரிய அடையாளங்களையும், முறைமை களையும் உடையவனாயிருந்தாலும் அவன் கள்ள தீர்க்கதரிசி யாயிருந்தான். 145. கவனியுங்கள் ! இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். இங்கே இஸ்ரவேலர் தங்கள் பாளையத்தில் ஒரு ஸ்தாபனமற்றவர்களாகக் காணப்பட்டனர். அது உண்மை . அது என்ன? அவர்கள் சரியாக செய்துக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியையும், ஒரு அக்கினி ஸ்தம்பத்தையும், தண்ணீரை அவர்களுக்குத்தந்த ஒரு கன்மலையையும் கொண்டவர்களாயிருந் தார்கள். ஏழுவித பலிபீடங்களின் மேல், கிறிஸ்துவின் வருகையைக் குறிக்கும் ஆட்டுக்கடா, போன்ற ஏழு சுத்தமான மிருகங்களை பலியிடுதல் என்ற பரிபூரணமானக் காரியங்களைக் கொண்டிருந் தார்கள். 146. மோவாப்.... ஆனால் என்ன நடந்தது? பிலேயாம் அங்கே சென்ற போது அவர்களிடமிருந்ததைப் போன்று அவன் சரியாக ஏழு பலிபீடங்களை அங்கே கட்டினான். நீங்கள் எதை பேசுகிறீர்களோ அதைக் குறித்து நன்றாக அறிந்தீர்களானால் நலமாயிருக்கும். ஏனெனில் அவர்கள் அடிப்படையில் தவறாக இருக்கவில்லை. இயேசு, "கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர் களையும் வஞ்சிக்கத்தக்கதாக " என்று கூறினார். ஆவிக்குரிய வெளிப்பாடு...... வார்த்தையை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள், பின்பு வார்த்தை உங்களில் வெளிப்படுவதைக் காண்பீர்கள்.  147. கவனியுங்கள், அவர்கள் அங்கே இருந்தனர், இங்கே பிலேயாம் இருந்தான். பிலேயாம் ஒரு கண்காணி என்பதற்கு சந்தேகமில்லை. அவன் ஒரு பெரிய மனிதன், அவன் ஏழு பலிபீடங்களைக் கட்டினான். கிறிஸ்துவின் வருகையை விசுவாசிப்பதன் அடையாளமாக ஏழு ஆட்டுக்கடாக்களை அவன் அங்கு வைத்தான். சகோதரர்களே, அடிப்படையான உபதேசம் என்ற காரியத்தில் தேவன் அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய வராயிருந்தார்.  148. காயீன் தேவனுக்கென்று பலிபீடத்தை கட்டினபோது (சாத்தானின் குமாரன் கர்த்தருக்கு பலிபீடத்தைக் கட்டுகிறான்) அது ஆபேலின் பலிபீடத்தைப் போன்றுதான் இருந்தது. அவர்கள் இருவரும் ஆலயத்திற்கு சென்று தங்கள் கடன்களை செலுத்தி, ஒரே தேவனைத் தொழுது கொண்டார்கள். ஆனால் ஒருவன் ஏற்றுக் கொள்ளப்பட்டான், மற்றவனோ தள்ளப்பட்டான். அது எவ்விதம் சம்பவித்தது? 149. இே யசு "இந்த கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்," என்று கூறினார். "பேதுரு என்ற கல்லின் மேல் அவர் சபையைக் கட்டினார்" என்று கத்தோலிக்கர் கூறுகின்றனர். பேதுரு அதனடியில் புதைக்கப்பட்டிருக்கிறான் என்று கத்தோலிக்கர் கூறுகின்றனர். அது ஒரு பொய்யாயிருக்கின்றது. ஏனெனில் எனக்குத் தெரிந்த மட்டும் அவன் அங்கு புதைக்கப்பட்டான் என்று கூறிக்கொண்டிருக்கும் போது, வேதப் பிரகாரமாக பேதுரு எருசலேமில் புதைக்கப் பட்டான். இருந்தாலும் அவர்கள் அப்படித்தான் கூறுகின்றார்கள். பாருங்கள்? அவன் ஒருபோதும் அங்கே செல்லவில்லை பேதுரு அங்கேதான் (ரோமாபுரியில் --- தமிழாக்கியோன்) புதைக்கப் பட்டதாயிருக் கட்டுமே, அது எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்கப் போவதில்லை. அந்த விதமான காரியத்தைக் குறித்து இயேசு பேசவில்லை. எவ்விதமாக அவர்கள் ஆவிக்குரியதல்லாத தைக் கலந்து விட்டார்கள் பாருங்கள் !  150. “இல்லை, இல்லை, தம்மைத்தான் இயேசு அந்த கல் என்று கூறினார்” என்று ப்ராடெஸ்டண்டுகள் கூறுகின்றனர்.  151. இப்பொழுது, அவர் ஒருபோதும் அதைக் கூறவில்லை. அவர், கவனியுங்கள், யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும், இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை -"நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து', என்றார். மாம்சமும் இரத்தமும்.... அவன் அதை ஒருபோதும் வேதப் பள்ளியில் கற்கவில்லை. "சில ஸ்தாபனங்கள் இதை உனக்கு போதிக்கவில்லை. ஆனால் பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார், மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் (தேவனுடைய வார்த்தையின் ஆவிக்குரிய பிரகாரமாக வெளிப்படுத்தப்பட்ட சத்தியம் ) என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை” என்று இயேசு கூறினார்.  152. மோவாபும் அதையே செய்தது. அவன் அங்கு வந்து இஸ்ரவேலரைப் பார்த்து, “நண்பர்களே, இங்கு கவனியுங்கள்.” (பெந்தெகொஸ்தேயிலும் அவர்கள் அவ்விதம்தான் செய்தனர்) (இப்பொழுது கவனியுங்கள்) நாம் எல்லோரும் ஒன்றுதானே? ஒரே தேவனை விசுவாசிக்கவில்லையா? என்று கூறினான். இந்த மோவாபியர், லோத்தின் மூலம் அவனுடைய குமாரத்திகளுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் சொந்த தகப்பனோடு விபச்சாரம் செய்தனர் என்பதை எத்தனைப்பேர் அறிந்திருக்கிறீர்கள்? அந்த கும்பலும் அங்கு தப்பி வந்திருக்கிறதை பாருங்கள்? அவர்கள் இன்னும், "பிஸ்கோத்தில் காணப்படும் மயிரைப் போன்று'' என்ற பழமொழிக்கிணங்க காணப்படுகின்றார்கள். “நாம் எல்லோரும் ஒன்றுதான்'' என்று கூறுகிறார்கள். "மெத்தோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்களாகிய நீங்கள், நாமெல்லோரும் ஒன்று” என்று கூறி “உங்களுடைய எண்ணெயில் கொஞ்சம் எங்களுக்குத் தாருங்கள்” என்று கேட்கிறீர்கள்! அங்கு இஸ்ரவேலர் என்ன செய்தார்கள்? தங்களுக்கு பெண் கொண்டார்கள்! விவாகம் செய்து கொண்டார்கள்! அதைத்தான் இந்த பெந்தெ கொஸ்தேயினர் ப்ராடஸ்டண்டுகளுக்குச் செய்துவிட்டனர். அவள் ஐக்கிய சபைகளின் சங்கத்தை விவாகம் செய்து கொண்டு தன்னை ஸ்தாபித்துக் கொண்டாள். இப்பொழுது அவள் எங்கே இருக்கிறாள்? இஸ்ரவேலைப் போலவே, ஆவிக்குரிய பிரகார மாகவும், மாம்சபிரகாரமாகவும் விபச்சாரம் செய்து விட்டாள். அந்த நேரத்திலிருந்து தேவன் அவளை ஏற்று கொள்ளவில்லை. அங்கு இஸ்ரவேலர் சமாரியர்களாக மாறினபோது தேவன் அவர்களை சபித்தாரே, அது உண்மையா? யேகோவா அவளை விவாகரத்து செய்துவிட்டார். 153. கிறிஸ்துவின் மணவாட்டியும், ஸ்தாபனத்தின் வித்தை தன்னுடன் கலந்து தனக்கு விவாகத்திற்கென்று நியமிக்கப்பட்ட மணவாளனாகிய கிறிஸ்துவை தள்ளிவிட்டாள். உலர்ந்து போன பெந்தகோஸ்தே கூட்டமே, உனக்கு நேர்ந்தது என்ன? வெளி 3:20ல் லவோதிக்கேயா சபையின் காலத்தில், இயேசு கிறிஸ்து தம்முடைய சொந்த சபைக்கு புறம்பாக்கப்பட்டு, வெளியே நின்றவராய் கதவை தட்டுகிறதை நாம் பார்க்கிறோம். (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டி உதாரணப்படுத்துகிறார்) .... திரும்பவும் உள்ளே வருவதற்கு முயற்சி செய்யும் மிக பரிதாபமான ஒரு காட்சி. அவள் என்ன செய்தாள்? அவள் விபச்சாரத்தை தெரிந்து கொண்டாள். இயேசு வரும்போது, அவர் எதைத் தட்டப் போகிறார்? இயேசு தம் மணவாட்டியை பெற்று கொள்ளத் திரும்ப வருகிறார்; அவர் அவ்விதம் கதவைத்தட்ட வரும்போது (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தெடவை தட்டுகிறார்) அதை முழுவதும் பூட்டி விடுகிறார்.  154. பரிசுத்த ஆவியினால் நிறைந்து உண்மையான தேவனுடைய வார்த்தை வெளிப்படும் ஊழியத்தை உடைய ஒரு நல்ல உண்மையான மனிதனுக்கு நீங்கள், "நீ இங்கு வந்து எழுப்புதல் கூட்டம் நடத்தக் கூடாது, நீ பிரசங்கியாயிருப்பதற்கென்று நியமிக்கப்பட்ட சான்றிதழ்களை காட்டு பார்க்கலாம்" என்று கூறுகிறீர்கள். நீங்கள் அவனுக்கு விரோதமாய் ஒருமுறைகேடையும் எதையும் சுட்டிக் காட்ட முடியாது. அதைக் குறித்து அவனை குற்றம் சுமத்துகிறவன் யார்? "அவன் ஒருத்துவம், தேவ கூட்டு சபை, திரித்துவம், திரித்துவம் அல்லாத போன்ற எந்த ஸ்தாபனங் களினின்றும் வராதவனாயிருக்கிறான்” என்கிறீர்கள்.  155. பரிதாபத்திற்குரிய முறை தவறிப் பிறந்த கூட்டமே, உங்களுக்கு அவமானம்! தேவன் கதவுக்கு வெளியே இருக்கிறார். யோவான் ஸ்நானகனும் அதை குறித்து, (இயேசுவின் முதலாம் வருகைக்கு முன்னோடியான தூதன்) “தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்; நாங்கள் இதைச் சேர்ந்தவர்கள், அதைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள்'' என்று கூறினான். “தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்”.  156. சரி, நாம் தொடர்ந்த செல்கையில்... ஓ! நான் இதை எவ்வளவாய் விரும்புகிறேன். கிறிஸ்துவின் மணவாட்டி ஆதாமின் மணவாட்டியைப் போன்றும், மற்றவர்களைப் போன்றும் வித்தைக் கலந்துவிட்டு, ஸ்தாபனமாகி கிறிஸ்துவை வெளியே தள்ளி விட்டாள். அவள் உண்மையாகவே அதைச் செய்தாள். அவள் நிச்சயமாகவே அதைச் செய்தாள். அவள், ஏவாளைப் போன்று, தன் வருங்கால கணவனான தேவனை மறுத்து, சாத்தானின் பொய்யான களைகளை ஏற்றுக் கொண்டாள். அதனால் அவளிலிருந்து ஒரு பாரம்பரியமான சபையே பிறந்தது. இப்பொழுது, அது பொய்யென்று உங்களால் கூறமுடியுமா?  157. உங்கள் பெந்தெகொஸ்தேயினர் எங்கே? இன்றைக்கு இந்த பெந்தெகொஸ்தேயினர் பாப்டிஸ்டுகளை விட பாரம்பரியத்தில் மோசமாகி விட்டனர். நிச்சயமாக, அது என்ன தெரியுமா? அது ஒரு மோசமான காட்சிபோல் இப்பொழுது சரியாக காட்சியளிக் கின்றது, அல்லவா? ஆனால் யோவேல் 2:28ல் என்ன கூறுகிறான்? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி) இந்த லவோதிக்கேயா - காலம் (சகோதரன் பிரன்ஹாம் தட்டுகிறார் - ஆசி)- அவர் மீண்டும் திரும்பவர முயற்சித்துக்கொண்டு கதவைத் தட்டிக் கொண்டிருக் கிறார் - வேதத்திலே மிகவும் பரிதாபமான காட்சி. (ஒலி நாடாவில் காலியிடம்- ஆசி). “நான் திரும்ப அளிப்பேன்”, என்று கர்த்தர் கூறுகிறார். 158. ஹு ஹூ. ஆதாம் தன் மணவாட்டி சாத்தானின் பொய்யை ஏற்று கொண்டதினிமித்தம் மரணத்தை கர்ப்பந்தரித்தாள் என்று கண்டான், ஆனால் யோசேப்பு தன் மணவாட்டி தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டதினிமித்தம் தேவனுடைய வித்தைக் கர்ப்பந்தரித்தாள் என்று கண்டான்.  159. இவைகளெல்லாம் என்ன? நான் எதைக் கூற முயற்சிக் கிறேன்? இங்கு கூடாரத்திலிருக்கும் உங்களுக்கும், வெளியிலுள்ள எல்லோருக்கும், நான் ஏன் வார்த்தையிலே மட்டும் சார்ந்திருக்க முயற்சி செய்து அதிலே நிலைக்கொண்டு, ஸ்தாபனங்களைக் குற்றம் பிடிக்கிறேன் என்பதை உங்களால் காண முடிகிறதா? அதைச் சார்ந்த எந்த ஒரு மனிதனையாவது, பெண்ணையாவது நான் எதிர்க்க வில்லை; அவர்களுக்கு விரோதமாக எனக்கு எந்த ஒரு காரியமு மில்லை. ஆனால் அந்த ஸ்தாபனம் என்ற அடிப்படையில் மட்டும் என்னால் ஒத்து போகமுடியவில்லை. ஏனெனில் அது தவறா யிருக்கிறது.  160. நான் மேற்கோள் காட்ட ஒரு வேதவசனத்தை வைத்துள்ளேன். பிசாசு இயேசுவை சோதித்தபொழுது, “உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் அவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன். அவைகள் என்னுடையவைகளாயிருக்கின்றன'' என்றான். பாருங்கள்? ஏவாளிடமும் அவ்வாறே கூறினான். “நீர் சாஷ்டாங்க மாய் விழுந்து என்னை பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்'' என்று கூறினான். முதலாவது அவன், "இந்தக்கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்" என்றான். பாருங்கள்? அவன், "நீர் என்னைப் பணிந்து கொண்டால் நான் இவை எல்லாவற்றையும் தருவேன், நீர் என்னு டைய குழுவின் சேர்ந்து கொள்ளும்,” என்றான்.  161. அவர் பிரதியுத்தரமாக, "மனுஷன் அப்பத்தினாலே மாத்திர மல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.  162. அது என்ன? ஸ்தாபனத்திற்குள்ளாக வரவிடாமல் செய்து விடுவார்களே என்று கலங்கி, உங்கள் நிலையில் நிற்க பயப்படுகிற பிரசங்கிகளே! "அதை தவிர்த்து எங்களால் வேறு என்ன செய்ய முடியும்? ...... எங்களை வெளியே துரத்தி விடுவார்களே!'' என்கிறீர்களா? உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். முதலாவது அது உங்கள் பலவீனம். அது உண்மை . தேவன் பேரில் உள்ள உங்கள் விசுவாசம் எங்கே? எனக்கும் அதையேதான் அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக தேவன் என்னை வெளியே எடுத்து இவ்விதமாய் உருவாக்கும் வரை 17 வருடங்கள் உழைத்து, அதன்பின், "இப்பொழுது, சாத்தானே இப்பொழுது வா, பார்க்கலாம்” என்று நினைத்தேன். அது எங்கேயிருக்கிறது என்று பாருங்கள். தேவன் உனக்குச் சத்தியத்தை வெளிப்படுத்திவிட்டார் என்பதை நீ உணரும்போது உலகத்திலுள்ள வேறு எந்த சக்தியும் உன்னிலுள்ளதை மேற்கொள்ள முடியாது. அது தான் காரியம். நீ முற்றிலும் மேற்கொள்ளப்பட முடியாதவனாகிவிடுகின்றாய்; முற்றிலுமாகவே, நீ தோற்கடிக்கப்பட முடியாதவன், அது நீயல்ல, தேவன் உன்னிலிருந்து அதை செய்கிறார். கிறிஸ்து அல்ல - ஆனால் சரீரமல்ல, அவருக்குள் இருந்த வார்த்தை . மரியாள் அல்ல, அவளிடமிருந்து பிறந்த வார்த்தையே கிரியை செய்கின்றது. 163. ஆகவே மனிதன் எதினால் பிழைக்கின்றான்? --- ஆகாரக் கட்டண சீட்டினாலல்ல, தேவனுடைய வார்த்தையினால் பிழைப்பான்; உனக்கு தங்க இடம் கொடுக்கும் ஸ்தாபனத்தினா லல்ல, தேவனுடைய வார்த்தையினாலே பிழைப்பான். "நல்லது. உன்னுடைய நற்சாட்சி பத்திரங்களைக் காட்டு பார்க்கலாம், உனக்கு நல்ல நிலைமையுண்டாயிருக்கின்றதா? அதை நாங்கள் சோதிக்க வேண்டும். நல்லது, நீ நூறு சதவிகிதம் சரியாயிருக்கிறாய், சரி. உன்னைக் கொண்டு சில நாட்கள் ஒரு எழுப்புதல் கூட்டம் நடத்தி உன்னுடைய காரியம் எப்படி இருக்கிறது என்று சோதித்து பார்க்கப்போகிறோம்'' என்று கூறுகிறார்கள். ஓ! அத்தகைய கூட்டத்தின் மத்தியில் தேவன் எவ்விதம் கிரியை செய்யக் கூடும்? அவர்கள் இலையுதிர்ந்து கனியற்று இரண்டு தரஞ்செத்து வேறற்றுப் போன மரங்கள். ஓ, என்னே! மற்றொரு காரியமும் உண்டு. 164. ஓ! ஜனங்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, எனக்கு செவிகொடுங்கள். தேவனுடைய வார்த்தையைத் தவிர வேறெதையும் நான் விசுவாசிக்கிறதில்லை, அதுவே என் ஜீவனாயும் என்னுடையவைகளெல்லாம் அவராகவே கொண்டிருக்கிறேன். நீங்களும் அதையே செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உங்களுடைய நடைகளும், பேச்சுகளும், அசைவுகளும், நீங்கள் எதைச் செய்தாலும் அவைகள் தேவனுடைய வார்த்தையிலிருக் கட்டும். கிறிஸ்துவின் சிந்தையை உங்களில் வரவிடுவீர்களானால் அது உங்களை வார்த்தையினால் கர்ப்பந்தரிக்கச் செய்யும். ஸ்தாபனத்தின் சிந்தனையை உங்களில் வரவிடுவீர்களானால், நீங்கள் ஸ்தாபனத்தையே கர்ப்பந்தரிப்பீர்கள். கிறிஸ்துவின் சிந்தனையை உங்களில் வரவிடுவீர்களானால், அவர் ஒருபோதும் தம்முடைய வார்த்தையை மறுதலிக்க மாட்டார். ஏனெனில் அவர் தேவனா யிருக்கிறார். அப்பொழுது நீங்கள் வார்த்தையை உற்பவித்து அதை விசுவாசிப்பீர்கள். உங்களை ஸ்தாபனத்தார் வெளியே தள்ளி உதைத்துத் தள்ளி, ஓடச் செய்து, எல்லாக் கதவுகளையும் அடைத்தாலும் நான் அதற்காக கவலைப்படமாட்டேன், நீங்கள் அவ்விதமாகவே வார்த்தையோடு நடந்து செல்வீர்கள்! ஆமென்! வூயூ! நான் துரிதமாக முடிக்க வேண்டும்.  165. இப்பொழுது கிறிஸ்து தமக்கு ஒரு மணவாட்டியை எடுத்து, தமது வார்த்தையாகிய வித்து அவளுடைய கருப்பையில் கர்ப்பந் தரிக்க செய்து கொண்டிருக்கிறார். (ஆவிக்குரிய கருப்பையில்) அவளுடைய சிந்தனையில் ஸ்தாபனத்தின் பதர் கலக்காது. ஏனெனில் அவள் அவருக்கு ஒரு கன்னிகையாயிருக்கிறாள். 166. ஓ! மூன்று நாட்களாக அங்கு அந்த அறையில் உட்கார்ந்து உபவாசித்து, ஜெபித்துக் கொண்டு கர்த்தரிடத்தில் காத்திருந்ததை நினைவு கூறுகிறேன். அந்த வெளிப்பாடு என்னில் உதித்தபோது நான், ஓ , "தேவனே, இது என்ன? நான் இப்பொழுது ஒரு காட்சியையுடையவனாயிருக்கிறேன், இதோ நான் இங்குள்ளேன். இதின் எல்லா காரியங்களையும் சபைக்குச் சொல்வேனானால், நான் எங்கு இருப்பேன்? நான் அவர்களைப் பிய்த்து விடுவேனே, நான் என்ன செய்வேன்? சபையை எல்லா அவமானங்களுக்கும், நிழல்களுக்கும் ஒப்புவமைச் செய்து அவள் மரித்துப்போனாள் என்று காட்டினேனே. நீர் என்ன செய்யப் போகிறீர்” என்றேன்.  167. பின்பு தேவனுடைய வேறொரு வார்த்தையையும் நினைத்தேன்' "நான் திரும்பத்தருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்பதே அது. “நான் திரும்ப அளிப்பேன்”. ஹூ.. ஹூ.. ஹூ. பழைய அந்த தேவதாரு மரத்தை ஞாபகங் கொள்ளுங்கள்; அக்கினியானது அவளை எரித்து கீழே சாய்த்த பின்பு, தன்னுடைய ஒரு விதையை அவள் கடைசியாக கீழே விட்டாள். அந்த வித்து வேறொரு புதிய தேவதாரு மரத்தைக் கொண்டு வந்தது. அது தான் சரி. பழைய மரங்கள் ஸ்தாபனங்களும் மற்றவைகளும் எரிந்து விட்டன. ஆனால் அங்கு ஒரு தேவவித்து தரித்து இருந்தது. அது தேவ வார்த்தையாயிருக்குமானால் நிச்சயமாக திரும்பவும் தன்னை உற்பத்தி செய்து தேவவார்த்தை என்று காண்பிக்கும். ஆம், அவள் அதை தவற விடமாட்டாள்.  168. கவனியுங்கள். ஆனால் கிறிஸ்து... நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம். அவ்விதம் தானே? பயிர் என்று ஒன்று வளரும் முன்பு ஒரு விதையானது நடப்பட வேண்டும் என்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நான் வார்த்தையில் மட்டும் நின்று, ஸ்தாபன சபைகள் என்னை பலவிதமான பெயர்களால் அழைத்து, பலவிதமாக வசைபாட ஏன் அவர்களை விட்டுவிட்டேன் என்று உங்களுக்குத் தெரியுமா? பாருங்கள்? அங்கே ஒரு பயிர் உள்ளது; விதையானது நடப்பட்டாயிற்று; விதையானது ஏற்கனவே பயிரிடப்பட்டுவிட்டது நண்பர்களே. அது முடிந்து விட்டது என்று நான் இப்பொழுது திட்டமாய் சொல்ல முடியும். அது போலவே ஸ்தாபன விதையும் பயிரிடப்பட்டுவிட்டது; மற்றவர்களும் அவ்விதமே பயிரிடப்பட்டுவிட்டனர்.  169. நம்முடைய மகத்தானவிலையேறப்பெற்ற சகோ, பில்லிகிரஹாம் ஒரு சமயம், பரி. பவுல் ஒரு பட்டிணத்திற்கு சென்று எழுப்புதல் கூட்டம் நடத்தினால் ஒருவன் மனந்திரும்புவான், பின்பு அடுத்த வருடம் அதே இடத்திற்கு பவுல் போகும் போது அந்த ஒருவனாலே மேலும் அவர் 60 பேரைபெற்றார். “நான் ஒரு பட்டிணத்திற்குச் சென்று ஆறு வார எழுப்புதல் கூட்டம் நடத்தி 20,000 பேர் மனந்திரும்புவார்கள். ஆனால் ஆறு மாதங்களுக்குப்பின் அங்கு திரும்பி போகும் போது 20 பெயரைக் கூட அங்கு மனந் திரும்பினவர்களாய் காணமுடிகிறதில்லை!” என்றாராம்.  170. அது என்ன? அவர்கள் மனந்திரும்பினவர்கள் அல்ல! அவர்க ளெல்லாரும் ஸ்தாபனத்திற்கென்று மனந்திரும்பினவர்கள். அது தான் காரியம். நிச்சயமாக, நீங்கள் பயிரிடும்படி.... பாருங்கள், ஸ்தாபனத்தின் விதையை நீங்கள் விதையுங்கள்; அதையே திரும்பவும் பெற்றுக் கொள்வீர்கள். "சகோதரனே, இங்கு வந்து சேர்ந்து கொள்ளுங்கள்; இங்கு புத்தகத்திலே உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். அது உண்மை.  171. பெந்தெகொஸ்தேயினர் அன்னிய பாஷை பேசி பல காரியங்களைச் செய்கின்றனர். அதுதான் அவர்களால் செய்ய முடியும். "இங்கு வந்து எங்கள் சபையை சேர்ந்து கொள்ளுங்கள்" என்கிறார்கள். உங்களுடைய தவறான ஞானஸ்நானம் போன்ற மற்ற எல்லா உபதேசங்களோடு சென்று கொண்டேயிருங்கள், உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான், அதைத்தான் நீங்கள் செய்ய முடியும். பாருங்கள்? 172. ஆனால் கிறிஸ்து வருகிறாரென்றால், அது கறைதிறையல்லாத, ஸ்தாபனமல்லாத, கோட்பாடோடும், கொள்கைகளோடும் கலவாத ஒரு கன்னிகையான சபைக்காகத்தான் அவர் வருகிறார். அது வார்த்தையாக மட்டுமே இருக்கும்.  173. இப்பொழுது, ஓ, மனிதனே, நாம் இங்கேயுள்ளோம். கர்த்தருக்கு மகிமையுண்டாவதாக! கிறிஸ்துவுக்கு மணவாட்டி யாகப் போகும் அவருடைய சரீரத்திற்கு நாம் இப்பொழுது வருகிறோம். அவருடைய மாம்சத்திற்கு மாம்சமும் அவருடைய எலும்புக்கு எலும்புமாகயிருக்கிறோம். இப்பொழுது, நாம் துரிதமாக முடிப்போம். அவருடைய மாம்சத்துக்கு மாம்சமும், எலும்புக்கு எலும்புமாய்....  174. ஏன்... (நான் ஒரு கேள்வி கேட்கிறேன்) உங்களுடைய முன்மாரி மழைகளெல்லாம் ஏன் கிறிஸ்துவின் மணவாட்டியைக் கொண்டு வரவில்லை? நீங்கள் அதற்கு பதில் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்! 175. அது வருகிறதாயும், ஏற்கனவே வருவதற்கு சமயமுமாயிருக்கு மானால், நாம் அதை விசுவாசிப்போம், நோவாவின் நாட்களில் உண்டாயிருந்த நீடியப் பொறுமையைப் போல அவர் தம் மணவாட்டியை ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறார். ஏன் இந்த மழைகள்..... சில காலத்திற்கு முன்பிருந்த பெந்தெகொஸ் தேயினராகிய நீங்கள் (40 அல்லது 50 வருடங்களுக்கு முன் நீங்கள் ஆரம்பித்தபோது) கிறிஸ்து என்னும் மணவாளனை மணவாட்டி யினிடம் ஏன் கொண்டுவரவில்லை? இன்னும் சிறிது நிமிடத்தில் இதை ஆழமாக பதியவைக்கப் போகிறேன். ஏன் அவ்விதம் செய்யவில்லை? ஏனெனில் நீங்கள் ஸ்தாபனங்களோடு உங்களை கர்ப்பவதியாக்கிக் கொண்டீர்கள்; அதைத்தான் நீங்கள் சரியாக செய்தீர்கள். அவர் ஒரு வேசியை விவாகம் செய்யமாட்டார். அவர் ஒரு கன்னிகையைத்தான் விவாகம் செய்வார். அது வெளிப்படை யாயிருக்கிறது, ஆனாலும் அதுதான் உண்மை . அதை வெளிப் படையாகவே அறிகிறீர்கள். அதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். அதைக்குறித்து நான் இடறலடையப் போகிறதில்லை; நான் உங்களுக்குச் சத்தியத்தைக் கூறுகிறேன். 176. ஏன் அவளிடம் கொண்டு வரவில்லை? அவளிடம் கிறிஸ்துவை உங்களால் ஏன் கொண்டுவர இயலவில்லை? ஏனெனில் அவள் தகுதியுடையவளாயில்லை. அவர் அவளை ஒரு விபச்சாரியாகக் கண்டார். அதன் காரணமாகவே பிறக்கும் பிள்ளைகள் நீண்ட காலம் ஜீவிக்காமல் மரிக்கின்றன. ஆதாம் தன் மனைவியை கர்ப்பவதியாகக் கண்டான். அந்த காரணத்தினாலேயே யேகோவா புறஜாதியி லிருந்து ஒரு மணவாட்டியைப் பெற்றார்; அவள் கர்ப்பந்தரிக்கப் பட்டிருப்பதை அவர் கண்டார். ஆகவே கிறிஸ்து இப்பொழுது அவருக்கு ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்து கிறார். அவர் இவ்விதமாக அழைக்கப்படுகின்ற கூட்டமானது கர்ப்பம் தரிக்கப் பட்டிருப்தைக் கண்டார். இப்பாதையின் கடைசியிலே அவர் தமது வித்தை விதைக்கப் போகின்றார். முன்குறிக்கப்பட்ட சபை என்ற யாரோ ஒன்று அதை பெற்றுக் கொள்ளப்போகின்றது.  177. ஆதாமையும் யேகோவாவையும் போல் கிறிஸ்துவும் தம்முடைய மணவாட்டியை மனிதனால் உண்டாக்கப்பட்ட ஸ்தாபனக் கோட்பாடுகளினால் கர்ப்பந்தரிக்கப்பட்டவளாகக் கண்டார். ஆதியாகமம் 1ல் சொல்லப்பட்ட சத்தியம் போல, ஒவ்வொரு விதையும் அதனதன் ஜாதியைப் பிறப்பிக்க வேண்டும். ஆகவே ஆவியானது அவள் மேல் பொழியப்பட்டபோது, மனிதன் தன்னுடைய சொந்த சிந்தனையாகிய ஸ்தாபனம் என்னும் விதைகளை அவளுடைய கர்ப்பப்பையில் நுழையப் பண்ணின படியால், அவள் இப்பொழுது இருக்கிற விதமாக இருந்து, கிறிஸ்து அவளிடம் வர முடியாதவராயிருக்கிறார். ம்ம்ம் ........ அது மிகவும் கடினமாயுள்ளது, அப்படித்தானே?  178. ஒரு நாள், நான் 'கீரீன்ஸ் மில்'லிருந்தபொழுது இரண்டு நாட்கள் ஜெபத்தில் தரித்திருந்தேன். அநேக வருடங்களுக்கு முன்பாக, மிஷிவாக்கா (Mishawaka) என்னும் இடத்திற்கு, நான் சென்றிருந்தேன். (இதை ஒலிப்பதிவு செய்வதற்கென்று இதற்குமுன் நான் கூறினதில்லை) அந்த ஆப்பிரிக்க வாலிபனை பற்றி நீங்கள் ஞாபகம் கொள்கிறீர்களா? அப்பொழுதுதான் நான் அந்த பெந்தகோஸ்தே ஜனங்களை சந்தித்தேன்; அவ்விதமான ஒன்று இருந்ததாக நான் ஒருபோதும் அறிந்ததேயில்லை. அங்கு நான் சென்ற போது, ஒரு கூட்ட தேவதூதர்கள் மத்தியில் வந்து விட்டேனோ என்று நான் எண்ணினேன். அங்கே அவர்கள் தரையில் மேலும் கீழுமாக ஓடி அன்னிய பாஷை பேசிக்கொண்டிருந்தனர். நான் அதை அவ்விதம் கேட்டதே இல்லை. “அது மிகவும் அற்புதமானது!" என்று நான் எண்ணினேன். அவர்கள் பழைய ஐக்கிய பெந்தகோஸ்தேயும் (United Pentecost), வெள்ளையருக்கென்ற பெந்தகோஸ்தே சபையும் (Pentecost Assembly for white) இணைந்த ஒரு இயக்கமாய் காணப்பட்டனர். அது வெள்ளையருக்கும், கறுப்பர்களுக்கும் இடையே இருந்த ஒரு பிரிவினையாயிருந்தது; அவர்கள் இருசாராரும் இணைந்த ஒரு கூட்டமாய் அது இருந்து அதை அவர்கள், வடக்கு பாகத்தில், இந்தியானாவிலுள்ள மிஷிவாக்காவில் நடத்தினர்.  179. அன்று என்னிடம், வீட்டிற்கு திரும்பும் வரை ஆகும் செலவுக்குத்தக்கதாக 1 டாலரும் 75 செண்டுகளும் மட்டுமே இருந்தது. என்னிடம் சிறிது ரொட்டியிருந்தது. ஒரு கூஜாவில் நான் தண்ணீர் எடுத்துக் கொண்டேன். பின்பு நான் என்னுடைய பழைய போஃர்டு காரின் உட்காரும் இடத்தை வெளியே வயல்வெளியில் போட்டு, அதற்கு மேலாக என் உரை போடும் வண்ணம்) போட்டு அதன்மேல் படுத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலை நான் திரும்பவும் அங்கு சென்றேன். அவர்களோடு நான் உணவருந்த விரும்பவில்லை; நான் அவர்களோடு உணவருந்த வரவேற்கப்பட்டேன்; ஆனால் நான் போகவில்லை. ஏனெனில் காணிக்கையாக செலுத்துவதற்கு என்னிடம் ஒன்றுமில்லாதிருந்தது. 180. அன்று அவர்கள் ஆவியில் பாடி துள்ளி குதித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது நான், “ஓ, அது மிகவும் நன்றாக இருக்கிறது! ம்ம் ....!” என்று நினைத்தேன். ஒரு மனிதன் எழுந்து அன்னியபாஷை பேசுவான்; இன்னொருவன் எழுந்து அதற்கு அர்த்தஞ் சொல்லுவான். சபையில் அமர்ந்திருக்கும் ஜனங்களின் பெயர்களை சொல்லி அழைத்தார்கள். சகோதரர்களே அது அவ்விதமாயிருந்தது. அப்பொழுது நான், "ஓ, சகோதரனே, அது அற்புதமாயிருக்கிறது!” என்று நினைத்தேன்.  181. "சகோதரி ஜோன்ஸ் அல்லது இன்னார்- இன்னாரை இங்கு வரச் சொல்லுங்கள், கர்த்தர் அவளை அழைக்கிறார்” என்றார்கள் .... அங்கே ஜோன்ஸ் அம்மையார் வந்தார்கள். அது எவ்வளவு உண்மையா யிருந்தது.  182. ஒருவர் அன்னியபாஷை பேச இன்னொருவர் அர்த்தம் சொல்லுவார், நான் நினைத்தேன், “ஓ. ஆயிரம் வருட அரசாட்சி ஆரம்பித்து விட்டது போலும், அது இது தான்" என்று. ஆகவே 'இத்தகைய தேவ மனிதர்களின் கைகளை நான் குலுக்கினால் நலம்' என்று நினைத்தேன். பின்பு வெளிப்பக்கமாக நடந்து செல்லும்போது அவர்களில் ஒருவரை சந்திக்கலாம் என்று நினைத்தேன். அவர்களுக்கு என்னைத் தெரியாது. நான் அவர்கள் மத்தியில் ஒரு சிறியவனாகவே இருந்தேன். ஆகவே, சிறிது இடைவெளி நேரம் அங்கு விடப் பட்ட போது நான் அந்த ஆலயத்தைச் சுற்றி நடந்து வந்து கொண்டிருக்கும்போது, அவர்களில் ஒருவரை நான் சந்தித்தேன். அவருடைய கையை நான் குலுக்கி, "சகோதரனே எப்படியிருக் கிறீர்கள்?” என்று கேட்டேன்.  183. காரியங்களை அறிந்துக்கொள்ள வேண்டிய சமயத்தில் அதை அறிந்துக் கொள்ளத்தக்கதாக, தேவன் எனக்கு ஒரு சிறு வரத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். பாருங்கள்? அப்பொழுது நான், "இம்மனிதனை நான் பேச வைத்து, அவர் என்னிடம் ஏதாகிலும் பேசினால், அப்பொழுது இவரில் இருப்பது உண்மையா இல்லையா என்று கண்டுபிடிப்பேனே” என்று நினைத்தேன். அவர்கள் இருவரும் (அன்னிய பாஷை பேசி மொழிப் பெயர்த்தவர்கள்) அங்கு அந்த கூட்டத்திற்கு ஒருவகை தலைவர்கள் போல காணப்பட்டனர். ஆக, இந்த முதல் மனிதனின் கைகளைக் குலுக்கி, சிறிது நேரம் அவரிடம் பேசின பின்பு அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவர் என்று கண்டு பிடித்து, “கர்த்தருக்கு மகிமை" என்று எண்ணினேன் 184. பின்பு சிறிது நேரம் கழித்து நான் ஒரு மூலைக்கு வந்தேன், அங்கு அந்த மற்ற சகோதரனைக் கண்டு, "சகோதரனே, எப்படி யிருக்கிறீர்கள்?” என்றேன். அவரோடு நான் பேசிக்கொண்டிருந்த பொழுது, அவர் ஒரு மாய்மாலக்காரன் என்றும், கருப்புநிறமுள்ள அந்த மனிதன் கறுப்பு தலைமயிர்கொண்ட ஒரு பெண்ணின் மூலம் ஒரு குழந்தையும், சிகப்பு தலைமயிர் கொண்ட ஒரு பெண்ணின் மூலம் இரண்டு குழந்தைகளும் கொண்டவராயிருந்தார் என்று ஒரு தரிசனத்தின் மூலம் பார்த்தேன்.  185. அப்பொழுது நான், “ஓ நான் இப்பொழுது குழப்பமடைந்து விட்டேன், எப்படி ஒரே தேவ ஆவி, தேவபக்தியுள்ள அந்த மனிதனின் மேலும், மாய்மாலமான இந்த பிசாசானவனின் மேலும் இருக்க முடியும்?, கர்த்தாவே, இக்காரியத்தை நான் இவ்விதமே விட்டுவிடுகிறேன். ஏனெனில் இது எனக்கு விளங்கவில்லை” என்று நினைத்தேன். நான் பத்தொன்பது அல்லது இருபது வயதுடைய வனாயிருந்தேன். ஆகவே நான், "இக்காரியத்தை இவ்விதமே விட்டுவிடுவது நல்லது. நல்லது, நான் ஒன்றும் அறியேன். உலகம் எவ்விதம் இப்படி இருக்க முடியும்? அதைக்குறித்து என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அதை எதிர்த்தும் என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை", என்று நினைத்தேன். ஆனால் ஒன்று அறிந்திருந்தேன், அந்த மனிதன் தவறானவன் என்று. பரிசுத்த ஆவி இவன் மேலும் விழுந்து அதே பயனை விளைவித்ததை நான் கவனித்தேன். அப்பொழுது நான், “இதில் எங்கோ தவறிருக்கிறது; அதுதான் காரியம்” என்று நினைத்தேன்.  186. அந்த மனிதன் (மாய்மாலக்காரன்) என்னிடம், “நீ எப்பொழு தாவது பரிசுத்த ஆவியைப் பெற்றீரா?” என்று கேட்டான். அதற்கு நான், "நீங்கள் அடைந்திருக்கிறதான அதை நான் அடையவில்லை என்று விசுவாசிக்கிறேன்”, என்றேன். அதற்கு அவர், “தேவனுக்கு மகிமை! எப்பொழுதாவது நீ அன்னியபாஷை பேசினதுண்டா?” என்று கேட்டார். அதற்கு நான், “இல்லை ஐயா” என்றேன். அவர் மேலும், “நீர் இன்னும் அதை பெற்றுக் கொள்ள வில்லையா?” என்றார். அதற்கு நான், “நல்லது, நான் அதை பெற்றுக்கொள்ளவில்லை என்று எண்ணுகின்றேன். மேலும் இது எனக்கு புதியது, இத்தகையக் காரியத்தை இதற்கு முன்பு நான் பார்த்ததும், கேள்விப்பட்டதும் கிடையாது" என்றேன். பாருங்கள்? அப்பொழுது அவர், "நல்லது, உள்ளே சென்று அதை பெற்று கொள்ளும் -- நிச்சயமாக நீர் அதை பெற்றுக் கொள்ளலாம்” என்றார். 187. அதற்கு நான், "நன்றி ஐயா" என்று கூறினேன். அப்பொழுது நான், “சகோதரனே, நீ என்ன பெற்றிருக்கிறாயோ அது எனக்கு வேண்டாம்!” என்று நினைத்தேன். பிறகு சிறிது நேரம் அங்கேயிருந்து விட்டு, அந்த இரவில் நான் காட்டிற்குள் சென்றேன் "தேவனே, கிருபையாயிரும், நான் இப்பொழுது என் வீட்டிற்குச் செல்கிறேன்" என்று ஜெபித்து விட்டு, பின்பு நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அதைக்குறித்து எதையும் சொல்லவோ, அல்லது எதிராகச் சொல்லவோ, என்னால் இயலவில்லை. 188. ஒரு சமயம் நான் கிரீன் மில் (Green Mill) என்னும் இடத்தில் இருந்தேன். (நான் எப்பொழுதும் ஜெபிக்கச் செல்லும் அந்த என்னு டைய சிறிய குகையைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்). நான் வேறு ஒரு காரணத்திற்காக அங்கு ஜெபிக்கச் சென்றிருந்தேன். இரண்டு மூன்று நாட்கள் நான் அங்கு தங்கி உபவாசித்து ஜெபித்துக் கொண்டிருந்தேன். குகைக்குள் மிகவும் தூசு படிந்ததினால், நான் அந்த மதியம் அதை விட்டு வெளியே வந்தேன் --- இலைகளினூடே சூரியனின் கிரகணங்கள் மிக அழகாய் இருந்தது. அங்கு ஒரு பழைய மரம் கீழே விழுந்திருந்தது. (அங்குள்ள ஒரு சிற்றோடையினிடமாக) நான் அதின் மேல் அமர்ந்தவனாய் என் கண்களைத் தேய்த்துவிட்டு கொண்டிருந்தேன். (நான் அதற்கு சற்று முன்பாக குகையில் இருந்த படியால்). என்னுடைய வேதாகமத்தை அங்கு கீழே வைத்தவனாய், “நல்லது, இப்பொழுது வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தை வாசித்தால் நலம்" என்று யோசிக்கலானேன். அப்பொழுது நான் அந்த மரத்திலிருந்த ஒரு கொப்பின் மேல் சாய்ந்தவனாக இளைப்பாறிக் கொண்டிருந்தேன். என் மேல் முழுவதும் தூசியாக இருந்தது. 189. இவ்விதமாக யோசித்து வேதாகமத்தை எடுத்து திறந்த பொழுது, அது எபிரெயர் 6ம் அதிகாரமாயிருந்தது. பாருங்கள்? அதில், "ஏனெனில் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசி பார்த்தும் பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனை தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப் படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம், எப்படியெனில் தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள் செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப் படுகிறதற் கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு" என்ற பாகத்தை வாசித்தேன். 190. "நல்லது இது என்ன?” என்று நினைத்தேன். நான் "அது என்ன?" என்று நினைத்தேன். "ஓ, இதில் ஏதோ ஒன்று இருக்கிறது," என்று சொல்லிக்கொண்டேன். இப்பகுதி? மறைந்தது. நான் வேறு ஏதோ ஒரு காரணத்திற்காக அங்கு ஜெபிக்க வந்திருந்தேன்.  191. பின் என் வேதாகமத்தை கீழே வைத்து விட்டு, “சரி. பழைய ஏற்பாட்டில் ஒரு பாகத்தைப் படிப்போம்” என்று நினைத்தவனாய் பழைய ஏற்பாட்டிற்கு வேதாகமத்தை திருப்பி வைத்தேன். திடீரென்று காற்று அங்கு வந்து அதை எபிரெயர் 6ம் அதிகாரத்திற்கு அதை சரியாக திருப்பிற்று. ஆகவே அதை நான் திரும்பவும் படிக்கலானேன். சற்று முன்பு படித்த அதே பாகத்தையே நான் திரும்பவும் படித்துக் கொண்டிருந்தேன். "நல்லது, பில்லி நீ என்ன மூடபக்தியுள்ளவனாக்கிக் கொண்டிருக்கிறாயா?'', என்று எனக்குள் யோசித்தேன். . 192. “சரி. இதை திரும்பவும் படிக்கலாம்” என்று யோசித்தேன் ஒன்றுமில்லாத காரியத்திற்காக நான் ஆவலாயிருப்பதில்லை. "நல்லது, நான் என் கரங்களை உயர்த்தி, தேவனைத் துதிப்பேன்,” என்று நான் நினைத்தேன். நான் வேதாகமத்தை கீழே வைத்து, “என்னுடைய கரங்களை தேவனைத் துதிப்பதற்காக உயர்த்தின பொழுது, காற்றானது, "ஊ ஊ ஷ்” என்ற சத்தத்தோடே வீசிற்று, நான் கீழே பார்த்த போது அங்கு வேதாகமம் திரும்பவும் எபிரெயர் 6ம் அதிகாரத்திற்கு திருப்பப்பட்டிருந்தது. நான் மறுபடியுமாக அப்பகுதியை வாசித்தேன். 'இதன் தார்ப்பரியம் என்ன? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே' என்று யோசித்தேன். ஏனெனில் அந்த பெந்தெகொஸ்தே சகோதரர்களிடம் கிடைத்த அனுபவத்தை அச்சமயம் நான் மறந்து விட்டிருந்தேன். ஆகவே, நான், "இதன் தார்ப்பரியம் என்ன?” என்று யோசித்தேன். 193. அங்கு அமர்ந்தவனாய் நான், "இதில் ஏதாகிலும் இருக்கிறதா கர்த்தாவே"? என்று ஜெபித்தவனாய் யோசிக்கலானேன். "நான் முன்குறித்தலில் விசுவாசம் கொண்டவன், ஆம் ஒரு தரம் பிரகாசிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும் (பாருங்கள்?) தேவனுடைய நல் வார்த்தையை ருசிபார்த்தும்...'' உண்மையான காரியத்திற்குள் பிரவேசிக்க வந்தவர்களைப் போல் வந்து, பின்பு பின் வாங்கிப்போன யோசுவாவின் நாட்களின் எல்லையோர விசுவாசிகளாக இவர்கள் இருக்கக்கூடும் யோசுவாவும், காலேபும் கானானுக்குள் பிரவேசித்தார்கள், ஆனால் இந்த எல்லையோர விசுவாசிகள் (Border line Believers) தேவனுடைய நன்மைகளை ருசித்திருந்தும் தேவனு டைய கிரியைகளைக் கண்டிருந்தும் அதை புறம்பாக்கினார்கள் என்று யோசித்தேன். 194. ஜனங்கள் ஆலயத்தில் அமர்ந்திருந்து, “சகோ. பிரன்ஹாம், நாங்கள் அதை விசுவாசிக்கிறோம்" என்று கூறியும் அதினிடமாகச் செல்ல முயல்வதில்லை. பாருங்கள். கானானுக்குள் கடந்து போக அவர்களால் ஒருபோதும் முடியாது. குறைவான மயிர் வைத் திருக்கும் அத்தகைய பெண்களுக்கு நீ உபதேசம் செய்வாயானால், அடுத்த வருடம் நீ சென்று பார்க்கும் பொழுதும் அவர்கள் அப்படியேதான் இருப்பார்கள். புருஷர்களுக்குப் பிரசங்கத்தாலும், அவர்கள் அப்படியே இருக்கின்றனர். நீங்கள் பாருங்கள்? நீ என்னதான் பிரசங்கித்தாலும் அவர்கள் அவ்விதம் எல்லையோர விசுவாசிகளாயிருப்பார்கள். அவர்கள், "ஓ ஆம், அது உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன்," என்று மட்டுமே கூறுவார்கள். 195. “ஆகவே, அத்தகைய முன்குறித்தலை நான் விசுவாசிக்கிறேன்” என்று யோசித்து, மேலும், “முள்செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோதகாததாயும், சபிக்கப்படுகிறதற்கேற்றதாயு மிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதன் முடிவு என்று கூறப்பட்டதன் கருத்து என்ன? இது புரிய வில்லையே” என்றும் யோசித்தேன்.  196. “தேவனே, இதில் ஏதோ ஒன்றிருந்து அதை நான் அறிந்து கொள்ள வேண்டுமென்று நீர் சித்தங் கொண்டால், இதோ நான் இங்கிருக்கிறேன். ஒரு தரிசனத்தின் மூலம் நான் அதை தேடுகிறேன், கர்த்தாவே . அங்கு நடந்த அந்த ஊழியத்தைக் குறித்து நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன், தகப்பனே” என்று ஜெபித்தேன். பின்பு நான் மலையின் மேலிருந்து நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தேன், (நான் சார்லஸ்டன் என்னும் இடத்திற்கு மேலாக இருந்தேன்) அப்பொழுது ஒரு குழல் போன்ற ஒன்று மேல் நோக்கிச் சென்று புது சந்தை வரை பரவியுள்ள அந்த பள்ளத்தாக்கினிடமாய் வந்து, அங்கு ஒரு வானவில்லைப் போன்று அது தொங்கிக் கொண்டிருக் கிறதைக் கண்டேன். அந்த வான வில்லின் மூலமாக ஏதோ ஒன்று திருப்புவதைக் கண்டேன். சற்று உற்று பார்த்தபொழுது அது இந்த உலகமாயிருந்தது. அங்கே ஒரு மனிதன் வெள்ளை உடை உடுத்தி யிருந்தவனாய் சென்றுக் கொண்டிருந்தான்.  197. இங்கிருக்கும் ஜனங்களில் அநேகர் இதை அறிந்துகொள் வதற்கு மிகவும் சிறியவர்களாயிருக்கிறீர்கள். கக்கத்தில் விதை நிறைந்த பையை மாட்டி, அதனின்று விதைகளை தெளிப்பதை நீங்கள் ஞாபகம் கொள்கிறீர்களா? சகோ. உட் அவர்களே, இவ்விதமாய் விதைகளை தெளித்து, காற்றானது அதை நிலத்தின் மேல் விழச்செய்வதை ஞாபகம் கொள்கிறீர்களா  198. வெள்ளை ஆடை அணிந்த இந்த மனிதனும் அவ்வாறே விதைகளை தெளித்து கொண்டிருந்தான். அவன் உலகத்தின் எல்லா நெளிவு சுளிவுகளிலும் அவ்விதம் விதை தெளித்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான், “அதிசயமா யிருக்கிறதே, இதன் தார்ப்பரியம் என்ன.” என்று யோசித்துக் கொண்டே, பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மனிதன் தன் வேலையை முடித்துத் திரும்பினவுடன், அங்கு ஒரு தந்திரக்காரன் வந்து இங்கேயும் அங்கேயும் பார்த்தவனாய், பின்பு தான் கொண்டு வந்திருந்த கோணிப்பையின்று களைகளையும், முள்ளையும் அதே நிலத்தில் வீசியெறிந்து உலகத்தின் மூலைமுடுக்குகளிளெல்லாம் சுற்றிலும் விதைத்தான். 199. பின்பு அந்த பயிர்கள் வளர ஆரம்பித்து, கோதுமையாகவும், களையாகவும், முட்களாகவும் வெளிவந்தன. அந்த இரண்டு பயிர் களும் ஒன்றாக வளர்ந்தன. இவ்விதமாக அவை வளர்ந்து வரும் சமயத்தில் அங்கு ஒரு பெரிய வறட்சியுண்டாயிற்று, அப்பொழுது கோதுமை பயிர் தன் தலையைத் தொங்கப் போட்டு தண்ணீருக்காக தவனமாய் மரிக்கும் நிலையில் காணப்பட்டது. அது போன்றே இந்த களைகளும் தண்ணீருக்காக மரிக்கும் நிலையில் காணப்பட்டன. பின்பு இரண்டு பயிர்களும் தண்ணீருக்காக ஜெபிக்க ஆரம்பித்தன ஜெபத்திற்கு பதிலளிக்கும் வகையில் பெரிய மழை அங்கு உடனே பொழிந்து, உலக முழுமையும் பொழிந்தது, மழை பூமியைத் தொட்டவுடன் தானே, அந்த சிறிய கோதுமைப்பயிர், துள்ளி, "மகிமை!, மகிமை! மகிமை!" என்றது. அதே சமயத்தில் களைகளும் "மகிமை! மகிமை!" மகிமை! என்று கூக்குரலிட்டன. அப்பொழுது நான், "அது என்ன? கோதுமை குதுகலிப்பதை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அந்த களையும் குதுகலிக்கிறதே, அது என்ன?" என்று யோசிக்கலானேன். அப்பொழுதுதான் கர்த்தர் என்னிடம், "எபிரெயர் 6ம் அதிகாரத்தைப் படி” என்று கூறினார். 200. மழையானது நல்லோர் மேலும் தீயோர் மேலும் பொழிகிறதாயிருக்கிறது. அது தான் காரியம்; அதன் காரணமாகத் தான் கிறிஸ்துவின் மணவாட்டி இன்னுமாக ஆயத்தமாகவில்லை. நாம் வார்த்தைக்கு பதிலாக ஸ்தாபன வித்துக்களை விதைத்து விட்டோம். அது என்ன செய்தது? அது இன்னும் அதிகமான ஸ்தாபன பிள்ளைகளைக் கொண்டு வந்து விட்டது. ஆனால் அதன் மத்தியில் சில கோதுமை மணிகளும் விழுந்திருக்கிறது. அது உண்மை . 201. கவனியுங்கள், உண்மையான விசுவாசியை அன்னிய பாஷை பேசவைத்து அவனை கிறிஸ்தவனாக்கும் அதே ஆவி (ஏனெனில் அது வார்த்தையாகிய வித்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறது) தான் ஏவாளின் கலப்பினம் போன்ற களைகளையும் சந்தோஷிப்பிக்கின்றது. உண்மையைப் போலவே அதுவும் கூக்குரலிட்டு சந்தோஷமா யிருக்கிறது. ஆனால் சத்தியம் என்ன? .... அது ஆரம்பத்திலேயே தவறான வித்தாயிருக்கிறது. 202. ஆகவே உங்கள் மாம்சபிரகாரமான ஸ்தாபன கிரியைகள் எல்லாம் ஒன்றிற்கும் உதவாது! “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்த மிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனா யிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளை போர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்ப எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்குண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிரா விட்டால் எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை' என்று பவுல் கூறினான். ஸ்தாபனங்கள் சத்தமிடுகிற வெண்கலமும், ஓசை யிடுகிற கைத்தாளமுமாயிருக்கின்றன, சபையே கவனி : பெந்தெகொஸ்தேயினர் ஒன்றுமில்லாதவர்களுமாயிருக்கின்றனர்! ஏன்? அது ஒரு கலப்பின விதை. அது வார்த்தையிடம் வர முடியாது.  203. அதுதான் காரியம். கிறிஸ்துவின் சரீரத்தை பிறப்பிக்கும் சரீரமானது கன்னியின் கருப்பையினின்று வரவேண்டிய தாயுள்ளது. உண்மை ! இதைக் கவனியுங்கள். ஆகவே தான் அது, "நாற்பத்து நான் கோடு லட்சத்தை சேர்” (இது ஒரு பாட்டுஸ்டுகளின் சுலோகம்) என்ற விதமாக உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. ஆகவேதான் இந்த பெந்தெகொஸ்தேயினர் ஆவிக்குரிய வெளிப்பாட்டை பிரசவித்து கிறிஸ்துவைக் கொண்டு வரமுடிய வில்லை, அது வெறும் விதைக்கு மழையாயிருந்து ஒரு ஸ்தாபன சபையை உற்பவித்து அதை பெரிய சுவிசேஷர்களோடு இணைத்துவிட்டு கோராகைப் போன்று கெட்டுபோனது. 204. இப்பொழுது, பழைய ஏற்பாட்டிற்கு நாம் சென்று அங்கு சில நிமிடங்களில் நிழலான காரியங்களை இத்துடன் ஒத்துப் பார்த்து பிறகு கலைந்து செல்வோம். பழைய ஏற்பாட்டிற்கு நாம் சென்று அங்கு சில நிழலான காரியங்களை ஒத்துப் பார்த்து அதை நிரூபிப்போம். இக்காரியங்களிலே நான் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டேன். இப்பொழுது சற்று நம் பொருளையும் நிகழ்ச்சியையும் மாற்றுவோம். இப்பொழுது, முதலாவதாக நான் ஒன்றைப் பெற்றுள்ளேன், நான் .... நான் சில பக்கங்களை வைத்துள்ளேன். அதன்பின் நான்.... ஓ, என்னே, என்னே, நிச்சயமாகவே அதுவல்ல. நான் சற்று துரிதமாகவே முடிக்க வேண்டும். இப்பொழுது, நான் அதை வாசிப்பேன் (பாருங்கள்?), நமக்கு மிகவும் குறைவான நேரமே இருப்பதால், என்னால் முடிந்தவரை மிக துரிதமாகவே வாசிப்பேன். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் மிகவும் களைப்பாயிருக்கிறீர்களா? (சபையார் "இல்லை" என்கின்றனர் - ஆசி ) ஓ, நல்லது, அப்படியானால் அது நான்தான், சரி. நாம் தொடர்வோம்; அது சரி. கவனியுங்கள்.  205. நம்மிடம் இப்பொழுது சம்பவித்திருக்கும் காரியங்கள் எல்லாம் அதன் காரணமாகவேயுண்டாகியிருக்கின்றன. நான் கூறின எல்லா காரியங்களும், அவை வேதத்தோடு ஒத்துபோக வில்லையென்றால் அல்லது புறாச்கிறகுகள் போல் இணைய வில்லையென்றால் அவைகள் தவறானது ஆகும்.  206. நான் அதிகமாக விரும்பும் ஆவிக்குள்ளான பகுதி இங்கு ஒன்று உண்டு. காலந்தோறும் என்ன நடந்தது என்று சபைக்குக் காட்டி வார்த்தையினால் அதை நிரூபிக்கும் பட்சத்தில், நான், "கர்த்தாவே, இங்கு ஜனங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்; அவர்களுக்கு நான் என்னத்தைச் சொல்ல? நான் எதிர்காலத்தை முன்னறிவிக்க முடியாது. அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லக் கூடாத வனாயிருக்கிறேன். நான் அவர்களை இங்கு ஒரு விளிம்பில் நிற்கவைத்து விட்டேனே” என்று யோசித்து ஜெபித்தேன். மேலும், என்னுடைய கரங்களை உயர்த்தி, "தேவனே, இதை நான் உமது சித்தத்தின்படி செய்தேன், இதற்கு முன்போ , பின்போ , இவ்விதம் நான் செய்ததில்லை” என்று ஜெபித்தேன். ஏனெனில் வித்தானது இன்னுமாய் விதைக்கப்பட வில்லை. "அதை சொல்வதற்கு இதுதான் சமயம் என்று நான் விசுவாசிக்கிறேன்: இப்பொழுது நான் என்னத்தைக் கூறப்போகிறேன்?” என்று ஜெபித்தேன். 207. நீங்கள் எவ்வாறு தத்ரூபமாக என் சத்தத்தைக் கேட்கிறீர்களோ, அவ்விதமாய் அப்போது ஒரு சத்தமானது என்னோடு, “உன் எழுதுகோலை எடுத்துக்கொள்” என்று உரைத்தது. இன்னும் சிறிது நேரத்தில் அதை நான் உங்களுக்கு வாசிக்கிறேன். அவர் சொல்ல நான் எழுதி முடித்த பின்பு, நான் ஜெபித்ததற்கு பதில் கிடைத்து விட்டது. நான் என்ன எழுதுகிறேன் என்பதை அறியாதவனாயிருந்தேன். பின்பு நான் எழுதியதை பார்த்தபோது, "ஓ, தேவனே, கிருபையாயிரும், இதை தான் எதிர் பார்த்தேன் என்று எனக்குள்ளாக ஜெபித்தேன். கர்த்தருக்குச் சித்தமானால் இன்னும் சிறிது நேரத்தில் அதை நான் உங்களுக்குப் படிக்கிறேன். பாருங்கள்? 208. பழைய ஏற்பாட்டின் எல்லாக் காரியங்களும் நிழல்களாக கிறிஸ்துவையும் சபையையும் குறிகின்றன. ஆதாமும் ஏவாளும், யேகோவாவும் அவர் மணவாட்டியும், கிறிஸ்துவையும் சபையையும் சுட்டிக் காண்பிக்கிறவர்களாயிருந்தனர் என்பதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நல்லது. அவை நிழல்களாயிருக்கு மானால் இது நிஜமாக இருக்க வேண்டும் (உதாரணமும் - எதிர் உதாரணமுமாய்) கிறிஸ்து, தலைக் கல்லாயிருந்து தேவனுடைய உண்மையான கல்லாயிருக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? மணவாட்டி அவருடைய சரீரமாயிருக்கிறாள். 209. இதற்கு சில தேவவசனங்கள் தேவையானால், அவைகளை நீங்கள் பார்க்கலாம். (நான் வேதவசனங்களைப் படிக்க வேண்டுமென்றிருந்தேன், ஆனால் நான் அவைகளை வாசிக்கப் போவதில்லை .) 1 பேதுரு : 2:1-6, எபேசியர் 5:22, 23. இவ் வதிகாரத்தை தொடர்ந்து படியுங்கள், அப்பொருள் அவைகளில் காணப்படுகின்றன. பாருங்கள்? 210. பழைய ஏற்பாடு: கிறிஸ்து, இங்கு கவனியுங்கள்: ஒரு உதாரணத்தை நாம் பார்ப்போம். (ஒரு வேளை என் மனைவி என்னுடையதை எடுக்காமலிருந்தால், இதோ இது (டாலர்) இங்குள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு நாங்கள் எங்கள் சிற்றுண்டிக்காக செலுத்தினோம். நான் இதை கூறியிருக்கக் கூடாது. நண்பர்களே, என்னை மன்னியுங்கள். நான் ஒரு நல்ல மனைவியைப் பெற்றுள்ளேன்) ஒரு டாலர் நாணயத்தின் பின்பாகத்தில் அது நமது தேசத்தின் .... பணமாயிருக்குமானால், அதில் இடது பாகத்தில் முக்கியமான முத்திரையான அமெரிக்க தேசத்தின் முத்திரை அதின் இடது பக்கத்தில் இருக்க வேண்டும். அது உண்மையா? நல்லது. அந்த நுனிக் கோபுரம் (Pyramid) ஏன் ஒரு மகத்தான முத்திரை என்று அழைக்கப்படுகிறது? உங்களுடைய பணம் கூட சாட்சி கொடுக்கிறதாயிருக்கின்றது. ஆம். ஒவ்வொரு தடவை நீங்கள் தபால் அனுப்பும் போதும் அதின் மேல் முத்திரை குத்துகின்றார்கள், 1962 என்ற வருடம் ஆண்டவருடைய வருடத்தைக் குறிக்கின்றது.' எல்லாம் கிறிஸ்துவை சாட்சியிடுகின்றன. 211. கூர் நுனி கோபுரம், அந்த மகத்தான முத்திரியைக் கவனித்திருக்கிறீர்களா? டாலர் நாணயத்தின் முத்திரையிலுள்ள நுனிக்கோபுரம் தலைக்கல்லால் மூடப்படவில்லை என்று எத்தனைபேர் அறிவீர்கள்? நிச்சயமாக.. நான் எகிப்திற்கு கெய்ரோவிற்கு சென்றிருந்தபோது அதை கண்டேன். அந்த தலைக்கல் அங்கு வைக்கப்படவில்லை. ஏன்? மூலைக்கல்லானது புறம்பாக்கப்பட்டது. அந்த மூலைக்கல்லே கட்டிடத்தை தாங்குகிறது. அதுவே மையக் கல்லாயுமிருக்கிறது (Key stone). மையக்கல் என்றால் என்ன என்று எத்தனை பேர் அறிவீர்கள்? வளைவு கட்டப்படும்போது, இந்த மையக் கல்தான் அதைக் கூட்டி சேர்த்து பிடித்துக் கொள்கிறது. மூலைக்கல்லோ கட்டிடத்தை தாங்குகிறதாயிருக்கிறது. அது உண்மையா? நுனிகோபுரத்தின் தலைக்கல்லே அதன் மூலைக் கல்லா யிருந்தது. மையக் கல்லானது மற்றவைகளைத் தாங்குகிறதா யிருக்கிறது. இந்த மையக்கல்தான் புறம்பாக்கப்பட்டுவிட்டது. 212. அந்த நுனி கோபுரத்தை கவனித்தீர்களா? தலைக்கல் அதனுடன் சேராமல் அதற்கு மேல் நிற்கிறதாயிருக்கிறது. ஏனோக்கு அதைக் கட்டின பின்பு அது எதைக் குறித்ததாயிருந்தது?  213. சம்பவித்த காரியம் இதுதான்: அது ஒரு சுவிசேஷ சபை கட்டப்பட்டு வருவதைப் போன்றுள்ளது. நுனிக் கோபுரத்தின் அகன்ற அடிப்பாகம், ஆதி சீர்திருத்தக் காலங்களை குறிக்கின்றதா யிருக்கின்றது --- உன்னை கிறிஸ்தவன் என்று அழைத்து கொண்டு பின் கத்தோலிக்கச் சபையை மறுதலித்தால், நீ மரணத்திற்கு பாத்திரன் என்ற விதமாக கத்தோலிக்கச் சபையானது அதிகாரத்தைப் பெற்றிருந்தது. விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்ற செய்தியை அவர்கள் அங்கு பிரசங்கித்தார்கள். 214. கவனியுங்கள் --- அந்த மூன்று என்ற எண் திரும்பவும் வருகிறதை பாருங்கள். பின் ஜான் வெஸ்லி அங்கு வந்து பரிசுத்தமா குதலைப் பிரசங்கித்தார். சபையானது இன்னும் சிறுபான்மையோ ராக (Minority) மாறிற்று. (நுனிகோபுரம் மேலே செல்ல செல்ல குறுகுகிறது. தமிழாக்கியோன்)  215. ஜான் வெஸ்லியின் பரிசுத்தமாக்குதல் காலத்திற்கு பிறகு பெந்தெகொஸ்தே சபை வந்தது, வார்த்தையை ஏற்றுக்கொண்ட அதிலிருந்த ஒவ்வொரு மீதமானவர்களையும் தேவன் வெளியே எடுத்தார். பாருங்கள்? பெந்தெகொஸ்தே என்ற சபையின் காரியம் நுனி கோபுரத்தை சற்று நெருக்கமாக கிட்டி சேரும் வண்ணமாக இருந்தது. ஏனெனில் அது வரங்களைத் திரும்பி பெறுதலான ஊழியத்தை உடையதாயிருந்தது. அது என்ன? தலைக்கு சற்று நெருக்கமாக அது வந்தது. மற்றவைகளைப் போல பூரணமாகப் பொருந்தத்தக்கதாக அது தீட்டப்பட, அல்லது கூராக்கப்பட வேண்டியதாயிருந்தது. அந்த நுனி கோபுரக் கட்டிடத்தில் கற்களுக்கு இடையிலுள்ள சாந்து பூசியிருக்கும் இடத்தில் ஒரு சவரகக்கத்தியைக் (Razor blade) கூட நுழையச் செய்ய முடியாத படி அக்கட்டிடம் அவ்வளவு இணக்கமாக இடை வெளியில்லாமல் கற்பாறைகள் இணைக்கப்பட்டிருக்கிறது. சாலமோனின் ஆலயம் அவ்வாறே இருந்தது என்று சொல்லுகிறார்கள். பாருங்கள்?  216. தேவ வார்த்தையினால் முடிவு பெறத்தக்கதாக, தேவன் பெந்தெகொஸ்தே சபையினின்று (தங்களைக் கலப்பினமாக்கிக் கொண்டவர்கள்) தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களை வெளியே எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வார்த்தையோடு வார்த்தை யானது கலந்து அவ்வளவு நெருக்கமாக இணைய வேண்டும், அப்பொழுது தலைக்கல் அங்குவந்து, "கிருபை, கிருபை, பிரமிக்கத்தக்க கிருபை" என்ற கதறுதல் உண்டாகும். இங்கே நீங்கள் இவ்விதமாயுள்ளீர்கள் (சகோ பிரன்ஹாம் சபையோருக்கு பார்க்கத்தக்கதான உதாரணம் ஒன்றை காட்டுகிறார்.) இங்கு எப்படியிருந்தது என்பதை பாருங்கள்? அது மிகவும் நெருக்கமாக, நெருக்கமாக வந்து கொண்டேயிருக்கிறது (ஊழியம்). இங்கே லூத்தர் நீதிமானாக்குதலை பிரசிங்கித்தார்; நீதிமான்களாக்கப் பட்டார்கள். இங்கு வெஸ்லி வருகிறார்; பரிசுத்தமாக்கப்பட்ட கூட்டம். இங்கே பெந்தெகொஸ்தேயினர் வரங்கள் திரும்பப் பெறப்பட்டன.  217. இப்பொழுது தேவன், அதனின்று தீட்டப்பட்ட ஒரு கூட்டத் தினின்று அங்கே இருந்ததான வார்த்தையைப் போன்ற, சரியான ஒரு ஊழியத்தை உண்டாக்குகிறார், ஏனெனில் அது வார்த்தையில் சரியாகப் பொருந்த வேண்டும். அது தான் மணவாட்டி; அவளை அங்கிருந்து எடுக்கிறார். 218. கவனியுங்கள். பிசாசின் கிரியைகளை அழிப்பதற்காக கிறிஸ்து வெளிப்பட்டார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவை யெல்லாவற்றையும் என்னால் விவரிக்க முடியாது. நான் அதன் ஊடாக கடந்து முக்கியமான இடங்களை மட்டும் குறிப்பிடுகிறேன். பிசாசின் கிரியைகளை அழிப்பதற்காகவே கிறிஸ்து வெளிப்பட்டார். அது உண்மையா? நீங்கள் யாவரும் அதை விசுவாசிக்கிறீர்களா? அதனால் தான் .... அவர் யார்? பிசாசின் கலப்பினக் கிரியைகளை அழிப்பதற்காக வெளிப்பட்ட தேவனுடைய வார்த்தை. அது சரியா? அவர் அவ்விதம் செய்வதற்காக அவ்விதம் இருக்க, பிசாசின் கிரியைகளை அழிக்க பிறந்தார்.  219. அவருடைய சரீரம் அதே கிரியைகளைச் செய்ய வேண்டும், ஏனென்றால் சரீரமும், தலையும் இணைந்ததுதான் சரீரம். அது உண்மையா? வார்த்தையாகிய கிறிஸ்து தலையானால் அவருடைய சரீரமும் தலையைப் போல்தான் இருக்க வேண்டும். அது உண்மையா? வார்த்தையினின்று பிறந்த வார்த்தை அது. இப்பொழுது அது ஸ்தாபனத்தினால் பிறக்கவில்லை. அது வார்த்தையினால் பிறந்த கன்னிகையாயிருக்க வேண்டும்.  220. சரீரம் கிரியை செய்வது தலையின் இயக்க சக்தியினால் தான். அது சரியா? என்னுடைய தலை அசையச் சொன்னாலொழிய என் சரீரம் அசையாது. நல்லது, என் தலைமாம்சமாகவும், என் சரீரம் சாந்து கல்லாகவும் (concrete) இருந்தால் எப்படியிருக்கும்? தலையானது, "அசை, அசை" என்று கூறும். ஆனால் சரீரம் அசையாது. ஏனெனில் செய்தியை அனுப்புவதற்கு அங்கு ஒன்றுமில்லை. அது சரியா. "நல்லது” என்தலை கிறிஸ்துவாயும் என் சரீரம் ஸ்தாபனமாயு மிருந்தால், கிரியை எவ்விதம் அங்கு உண்டாகும்? பரிசுத்தமும் வேசியும் எவ்விதம் ஒன்றாக கிரியை செய்ய முடியும்?  221. ஓ, சகோதரரே, நான் அதை நேசிக்கிறேன். இவைகளின் ஒன்றின் மேல் சிறிது நேரம் பிரசங்கம் செய்ய நான் விரும்புகிறேன். தலையின் கட்டளையால் தான் சரீரம் அவ்விதமாக கிரியை செய்கிறது. அந்த தலை வார்த்தையாயிருக்கிறது. அது சரியா? அந்த தலை வார்த்தையாயிருக்கின்றது.  222. இப்பொழுதுள்ள நவநாகரீக சபையை ஒப்பிட்டு பாருங்கள். அதில் ஏன் அற்புதங்கள் காணப்படவில்லை? அதில் ஏன் வார்த்தையை நாம் காண்கிறதில்லை? வார்த்தையை அதனிடம் வர அது விடுவதில்லை; ஸ்தாபனமானது அதை நிறுத்தி விடுகிறது.  223. ஒரு நல்ல பரிசுத்த தேவமனிதன் இங்கு வந்து தேவனுடைய வார்த்தையை தன்னால் முடிந்த அளவு வெளிப்படையாக பிரசங்கிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அதைப்பற்றி ஸ்தாபனம்" "அம்மனிதனை இங்கிருந்து விரட்டியடி” என்று கூறும் பாருங்கள்? சரீரம் அசையவில்லை.  224. தலை எதைக் கட்டளையிடுகிறதோ அதையே சரீரமானது கிரியையாக நடப்பிக்கிறது. சரி. “ஸ்தாபனமாகு!” என்று தலை எங்கு கூறியிருக்கிறது என்று எனக்குக் கூறுங்கள். "பெண்கள் தங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளலாம்'' என்று தலை எங்கு கூறியிருக்கிறது என்று எனக்குக் கூறுங்கள். ஹும். அது அங்கே கூறப்படவில்லை. "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்யமாட்டீர்கள்” என்று தலை எப்பொழுதாவது கூறியிருக்கிறதா? எனக்குக் கூறுங்கள் ! ஆனால் தலையானது "என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத்தானும் செய்வான்" (நீங்கள் வேதவாக்கியங்களைக் அறிந்துக்கொள்ள விரும்பினால் அது யோவான் 14:12) என்று தான் கூறியிருக்கிறது. அவ்விதம் அக்கட்டளையை நிறைவேற்றுவது தான் சரீரம் பாருங்கள். 225. சரீரத்திற்கென்று, அந்த ஜாதியான வித்தை நான் ஊன்றியிருக்கிறேன் என்பதைக் குறித்து ஏன் அவ்வித பக்தி வைராக்கியம் கொண்டுள்ளேன் பாருங்கள்? மழையானது கூடிய சீக்கிரத்தில் பொழியப் போகிறது; உண்மையான மழையை நான் குறிக்கிறேன். அது விழுவதற்கு அங்கே வித்தானது இருந்தாக வேண்டும். அதைக்காண நான் உயிரோடிருப்பேன் என்று நம்புகிறேன். நீங்கள் புரிந்து கொண்டீர்களா? அது ஆதியிலே உரைக்கப்பட்ட வார்த்தையைப் போல் ஜீவிக்கிற வார்த்தையாயிருந்து வல்லமை யுடையதாயிருக்கும். ஏனெனில் அது அவருக்குள் அவருடைய சொந்த சரீரத்தில் இருக்கிறதாய் இருந்து, தன்வழியில் கிரியை செய்து கொண்டிருக்கிறது. அவர் தம்முடைய சரீரத்திற்கு தந்த வாக்குத்தத்தத்தைப் பாருங்கள். 226. நாம் இப்பொழுது ஒன்றிற்கு சீயோன் மலையினிடத்திற்கு வருகிறோம். கன்னி வயிற்றில் பிறந்த தம்முடைய சரீரத்திற்கு அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம் (சகோ. பிரன்ஹாம் ஏழு முறை பிரசங்கப் பீடத்தை தட்டுகிறார்) ஒவ்வொருநாளும் நாம் அதன் போலியான தோற்றங்களைப் பார்க்கிறோம். ஆனால் அவருடைய உண்மையான சரீரத்தைக் குறித்து அவர் என்ன கூறுகிறார் என்பதை பார்ப்போம். சரி, அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தார் என்பதை நாம் பார்ப்போம். 227. யோவான் 3:16ஐ சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? நான் அதைப் படிக்கப் போகிறேன். யோவான் 3:16ஐ விசுவாசிக்கின்ற ஒவ்வொருவரும் : "தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்'' ஆமென் என்று கூறுங்கள். ஆமென் (சபையார் "ஆமென்" என்கின்றனர்). நீங்கள் இதை தைரியத்துடன் விசுவாசிக்க வேண்டும். நான் அவருடைய சரீரத்தைக் குறித்துப் பேசுகிறேன். 228. யோவான் 20ம் அதிகாரம் படிப்போம். சரி. யோவான் 20ம் அதிகாரத்தை நாம் பார்ப்போம். ஓ, நாம் 19ம் வசனத்திலிருந்து படிப்போம். யோவான் 10 (நான் இதைத்தான் குறித்து வைத்துள்ளேன் என்று நம்புகிறேன்.) 19ம் வசனத்திலிருந்து .... கூர்ந்து கவனியுங்கள். 229. இதை விசுவாசிக்கும்படி நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் ! ஓ, நான் அதை நேசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் இங்கு நிழலிட்டு, "அது நான் தான்" என்று கூறுவதைக் காண விரும்புகிறேன். "வாரத்தின் முதல் நாளாகிய அன்றையத்தினம் சாயங்கால வேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில் (சீஷர்கள் கூடியிருந்த இடத்தில் கதவுகள் பூட்டப் பட்டிருந்தன) இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.  அவர் இப்படிச் சொல்லித் (அவர் அவ்விதம் சொன்ன பின்பு) தம்முடைய கைகளையும், விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். (தம்முடைய சீஷர்கள் தம்முடைய விலாவை பார்க்க அனுமதித்தப் போது) சீஷர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள்.  இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்கு சமாதானமுண்டாவதாக; (ஓ , நீங்கள் ஆயத்தமாயிருக் கிறீர்களா?) பிதா என்னை அனுப்பினது போல (அவர்தான் வார்த்தை ... வார்த்தை ... வித்து) --- நானும் உங்களை அனுப்புகிறேன். (நீங்கள் இதை விசுவாசிக் கிறீர்களா? இதோடு நின்று விடாதீர்கள்; இதற்கு மேலும் உண்டு) என்று சொல்லி, அவர்கள் மேல் ஊதி : பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்; எவர்களுடைய பாவங்களை மன்னிக் கிறீர்களே அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியா திருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.”  230. இது சத்தியமா? யாருக்கு அதை கூறினார் ... வார்த்தையாகிய வித்திற்கு. ஏன்? அவர்கள் மட்டுமே வார்த்தையினால் பிறக்க முடியும். அதுதான் காரணம். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நாம் மத்தேயு 16ம் அதிகாரம் 19ம் வசனத்தைப் படிப்போம். சரி. 'பரலோக ராஜ்யத்தின் திறவு கோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்" 231. இதை விசுவாசிக்கும்படி உங்களுக்கு சவால் விடுகிறேன். இவைகள் தேவனுடைய வார்த்தை இல்லையென்றால் யோவான் 3:16ம் தேவனுடைய வார்த்தை அல்ல. பின் ஏன் நீங்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு சிலவற்றை விட்டு விடுகின்றீர்கள்? எல்லா தேவனுடைய வார்த்தைகளும் சத்தியமாயிருக்கின்றன ஆனால் வித்து மட்டுமேயுள்ள கன்னி கருப்பைக்கு அது வர வேண்டியதா யுள்ளது. நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது இன்னும் கவனமாக கேளுங்கள். 232. அந்த வேசியானவள் தங்களுடைய (கத்தோலிக்கர்கள்..... தமிழாக்கியோன்) ஸ்தாபனத்தின் வல்லமையினால் பாவங்களை மன்னிக்க உரிமை கொண்டாடுகிறாள் என்று நானறிவேன். ஆனால் அவர்களின் பிள்ளைகளைப் பாருங்கள்: ஒவ்வொரு நடன அரங்குகளிலும் பங்கேற்றுக் கொண்டும், மயிரைக் கத்தரித்து கோமாளிகளைப் போல் முகத்தை வர்ண்ம் அடித்துக்கொண்டும், அவர்களின் ஆண்கள் வேறொவரின் மனைவியுடன் வாழ்ந்து கொண்டும், வீதிகளில் விபச்சாரம் செய்து கொண்டும், கலப்பு குளியல் (Mixed bathing) போன்ற இன்னும் அநேகக் காரியங்களைச் செய்து கொண்டும் காணப்படுகின்றார்கள். நிச்சயமாக அவர்கள், பாவங்களைத் தங்கள் சொந்த வழியில் மன்னிப்பார்கள். ஆனால் அவர்களுடைய கனிகள் அவர்களை யாரென்று வெளிப்படுத்து கின்றது. அது அவர்களுக்கு சத்தியமல்ல. இல்லை, ஐயா . அவர்கள் என்ன செய்கின்றனர். அவர்கள் குட்டைக் கால் சட்டை அணிந்து, தங்கள் தலைமயிரைக் கத்தரித்து முகத்திற்கு வர்ணம் பூசிக் கொள்கின்றனர். " அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்" என்று இயேசு கூறினார். அத்தகைய வித்துகள் தாம் அவர்கள். 233. ஸ்தாபனத்தின் வித்து ஸ்தாபனத்தின் மன்னிப்பைக் கொடுக் கின்றது. நான் கூறுவது சரியான வார்த்தை. தேவன், " வார்த்தை தன்னுடைய ஜாதியைப் பிறப்பிக்கட்டும்" என்றார். அதுதான் காரியம். ஓ, சகோதரனே, தேவவசனம் சத்தியமாயிருக்கிறது. நீ அதை விசுவாசிக்கிறாயா? 234. முன்குறிக்கப்பட்ட சபை தன்னிடம் உள்ள வரத்தை உரிமைக் கொண்டாடுவதை ஆவியானவர் சாட்சி பகருகிறார். அது என்ன? வார்த்தைக்கு நீர்பாய்ச்சி, ஒவ்வொரு வார்த்தையையும் "ஆமென்” என்ற விதமாக்குகிறார். வார்த்தை , "மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று கொள்'', என்றும், "மற்ற காரியங்களெல்லாவற்றையும் இவ்விதமாக செய்" என்றும் கூறுமானால், மணவாட்டி, "ஆமென்', "ஆமென்' என்று கூறுவாள். பாருங்கள். 235. அவள் ஒவ்வொரு வேத வார்த்தையையும் ஆமோதிப்பாள். தேவன் தம்முடைய முன் குறிக்கப்பட்ட வரத்தை வரச்செய்து, பாவங்களை மன்னிக்க செய்கிறார், ஆனால் அது ஆவியினால் நிரப்பப்பட்ட வார்த்தை சரீரத்திற்கு கொடுக்கப்பட்டதா யிருக்கிறது. ஏனெனில் வார்த்தை மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும், வார்த்தையே தேவனாயிருக்கிறது.  236. பரிசேயர்கள் இவ்விஷயத்தைக் குறித்து எவ்வளவு பொருத்த மாயிருந்தார்கள். பரிசேயர்களைக்குறித்து பின்பு நான் பேசுவேன் என்று இன்று காலை உங்களுக்கு குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? இப்பொழுது நான் அதைக் குறித்து பேசுகிறேன். பரிசேயர், 'தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? இவன் பாவங்களை மன்னிக்கிறானே?” என்று தங்களுக்குள் யோசனைப் பண்ணினார்கள். இயேசு வார்த்தையாயிருந்தார் என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள். வார்த்தை பாவங்களை மன்னிக்கிறது. ஏனெனில் அது தேவனா யிருக்கிறது. யார் இத்தகைய வரத்தை அடைவார்கள் என்று தேவன் தம்முடைய முன்குறிப்பில் அறிந்திருக்கிறார். யார் அவ்விதம் பெற்றிருக்கிறார்களோ, அவர்கள் வார்த்தையோடும் ஆவியோடும் வார்த்தையினால் நிரூபிக்கப்படுவார்கள். அது விளக்கமா யிருக்கிறதா?  237. அநேகர் அது வேதக்கல்வியினாலும், படிப்பறிவினாலும் பட்டங்கள் பெறுவதாலும் வருகிறது என்று உன்னை நம்பச் செய்வார்கள்; நீ அவ்விதம்; ஒரு கண்காணியாகவோ, போப்பாகவோ, அல்லது ஒரு கத்தோலிக்க அதிகாரியாகவோ (அங்கிருந்துதான் அவை வருகின்றன என்று அநேகர் நம்பச் செய்வார்கள்) ஆவதற்காகப் படித்து, மனிதன் தன் கரங்களை உன்மேல் வைத்து உன்னை ஏதோ ஒன்றாக்கி, எதையாகிலும் செய்யச் சொல்வார்களானால் அவர்கள் தேவனுடைய வார்த்தையை விட்டு விலகி விட்டார்கள் என்று அர்த்தம். 238. “தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே'' என்று ரோமர் 11:29ல் கூறப் பட்டுள்ளது, தேவன் அதைக் கொடுக்கிற வராயிருக்கிறார். நீங்கள் இதைக் குறித்துக்கொள்ள விரும்பினால், கூர்ந்து கவனியுங்கள், - யோவான் 15:16லும் அவர் எவ்விதமாகக் கூறியிருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். இயேசு தம்முடைய நாளில், ஸ்தாபனங்களினின்று எவ்வளவு வித்தியாசப்பட்டவராயிருந்தார்! இதை சிறிது நேரம் பேச நான் விரும்புகிறேன். வ்யூ. அவர்கள் அவருடைய முதுகுக்குப் பின்னால் சுட்டிக்காட்டினார்கள், “நாங்கள் மோசேயின் சீஷர், மோசேக்கு தேவன் எரிகிற முட்செடியில் தரிசனமானார் என்று நாங்கள் அறிவோம்” என்று கூறினார்கள். அது உண்மைதான். அவர்கள் சரித்திரவாயிலான மோசேயை அறிந்திருந்தார்கள், ஆனால் மோசேயின் தேவனை அறிந்திருக்க வில்லை. ஏனெனில் அவர் அவர்களுக்கு முன்பாக நின்று கொண்டு, "ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன். எரிகிற முட்செடி நானே'' என்று கூறினார். அவர்கள் மோசேயின் வரலாற்றை அறிந்திருந்தனர். 239. அது போல்தான் இன்றும் உள்ளது. அவர்கள் வார்த்தை யாகிய கிறிஸ்து தங்களுக்குத் தெரியும் என்று உரிமை பாராட்டு கிறார்கள், ஆனால் அவர்கள் கிறிஸ்துவிலிருக்கும் தேவனை அறிந்து கொள்ளவில்லை. நெருப்பை வர்ணம் தீட்டி, அதினின்று யார் அனலைப் பெற முடியும்? --- வேதப் பள்ளிகளின் அனுபவம் அது தான். அவர்கள் மோசேயை அறிந்திருந்தார்கள்; அவனுடைய தேவனையோ அறிந்திருக்கவில்லை.  240. இயேசுவால் 'ஆமென்!' என்று கூற முடிந்தது! இதை கவனியுங்கள் சகோதரரே. வ்யூ. ஓ! தாவீது தன் கவணை சுழற்றியது போன்ற உணர்ச்சி எனக்கு இப்பொழுது ஏற்படுகிறது நண்பர்களே, நான் பரிசுத்தக் குலைச்சலாய் உங்களுக்கு காணப்படமாட்டேன் என்று நம்புகிறேன். நான் சரியாக இருக்கிறேன். நல்லவிதமாகவும் உணருகிறேன். 241. "என்னை அனுப்பின பிதா என்னுடனே கூட இருக்கிறார், அவர் என்னை உலகத்தில் அனுப்பினது போல, நானும் உங்களை உலகத்தில் அனுப்புகிறேன். (அவருடைய சீஷர்களுக்கு) என்னை அனுப்பின பிதா என்னுடனே கூட இருக்கிறார், என் பிதாவினால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அக்கிரியைகளே என்னைக் குறித்து 'சாட்சி கொடுக்கிறவைகளாயிருக்கின்றன' என்று இயேசு கூறினார். அல்லேலூயா! ஓ, சபையே, நீ எங்கேயிருக்கிறாய்? இயேசு சொன்னார்.  242. அவர்கள் 'ஓ, தேவன் இவைகளை யெல்லாம் செய்தார் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் அது இன்றைய காலத்திற்கு இல்லை" என்று அவர்கள் கூறுகிறார்கள். இயேசுவும் அதையே கூறினார் .... “தேவன் மோசேயோடே இருந்தார் என்று நாங்கள் அறிவோம்." 243. "என்னுடனே கூட இருக்கிற தேவன் எனக்குள் இருக்கிறார், நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையென்றால் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளையாவது விசுவாசியுங்கள். நான் என்ன செய்வேன் என்று வசனம் கூறுகிறதோ அதன்படி நான் செய்யா திருந்தால் என்னை விசுவாசியா தேயுங்கள்” என்று இயேசு கூறினார். 244. நான் பிரசங்கிக்கிற செய்தியைக் குறித்து, அது பரிசுத்த குலைச்சலாயில்லை என்று நான் பிரசங்கிக்க அனுமதியுங்கள். இது சத்தியம் என்று தேவன் நிரூபிக்காவிடில் அது சத்தியமாயிராது. ஆனால் கூறுவதை தேவவார்த்தை நிரூபிக்குமானால் வார்த்தையை விசுவாசியுங்கள் ! வேத வார்த்தைகள் தாம், நான் சத்தியத்தைச் சொல்லுகிறேனோ இல்லையா என்று சாட்சியிடுகின்றன. அவைகள் தான் சாட்சிகளாயிருக்கின்றன. அவைகளே அவர் எனக்களித்த என்னுடைய ஊழியத்தின் சாட்சிகளாயிருக்கின்றன. கடைசி நாட்களில் அது வரும் என்று அவர் வாக்குத்தத்தம் செய் திருக்கிறார். இதோ அது இருக்கிறது! அவர் எதைச் சொன்னாரோ அதைச் செய்வார். அதுதான் இன்று சம்பவித்துக் கொண்டிருக் கின்றது; அதனூடாக இப்பொழுது நாம் சென்று கொண்டிருக் கிறோம்! அது சத்தியமா இல்லையா என்று நீங்கள் பாருங்கள். 245. தேவனே சாட்சி பகர்வாராக. நான் சொல்கிற கிரியைகளும் நான் பிரசங்கிக்கிறவைகளும் சத்தியம் தான் என்று தேவன் சாட்சி பகராவிட்டால் அது சத்தியமாயிராது; ஆனால் வார்த்தையானது அதை உரைத்து அவ்வண்ணமே அது இங்கு நிகழ்ந்து கொண்டிருந்தால், பின் அதைக் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? 246. இயேசு, "நான் உங்களை அறிவேன்; நீங்கள் மோசேயை அறிந்துள்ளதாக நினைக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள் - நீங்கள் மோசேயின் சரித்திரத்தை அறிந்திருக்கலாம். ஆனால் அவனுடைய தேவனை அறியீர்கள். ஏனெனில் நான் மோசேயிற்கு முன்னமே இருந்தேன். மோசேயுடன் பேசினவர் நானே. நான் இருக்கிறவராக இருக்கிறேன்; நான்தான் வார்த்தை,” என்றார். அவர்களால் அதைக் காண முடியவில்லை. ஏனெனில் அவர்கள், அவர்களுடைய பிதாவாகிய பிசாசினால் உண்டாயிருந்தார்கள். அவர்களுடைய ஸ்தாபனம் அதைக் காண அவர்களை அனுமதிக்கவில்லை. ஆனால் வார்த்தை தொடர்ந்து செல்வதை அதனால் நிறுத்த முடியவில்லை, வார்த்தை பலபேர் மேல் விழுந்து அந்த சந்ததியின் ஒரு மணவாட்டியைத் தெரிந்தெடுத்தது. 247. சரி. அது எவ்வளவு வித்தியாசமாயுள்ளது. அக்கினி சித்திரம். இயேசு, “என்னை அனுப்பிய பிதா என்னுடன் இருக்கிறார் - நான் செய்கின்ற கிரியைகள் சாட்சியளிக்கின்றன. ஏனெனில் நான் என்ன செய்ய வேண்டுமென்று வேதவசனங்கள் கூறினவோ அவைகளையே நான் செய்கிறேன்,” என்றார். 248. யூதர்கள் தங்களுடைய சரித்திரப் பிரகாரமான தேவனை அறிந்திருந்தார்கள்; இன்னும் அவ்விதமே. ஆம். அவர்கள் ஏன் சரித்திரப் பிரகாரமான தேவனை அறிந்திருந்தார்கள், ஏனென்றால் அவர்கள் சரித்திரப் பிரகாரமான விதையைக் கொண்டிருந்ததால் தான்! அவரை ஏன் அவர்கள் ஏற்று கொள்ளவில்லை? ஸ்தாபனத்தோடு தங்களைக் கலப்பினமாக்கின காரணத்தினால் தான். இயேசு தம்மை அனுப்பினவர் யார் என்று அறிந்திருந்தார், ஏனெனில் அவரை அனுப்பினவர் அவருக்குள் இருந்தார். எந்தவித ஸ்தாபன கட்டுபாடும் அவரில் காணப்பட வில்லை. ஆமென்! ஓ, சகோதரனே. அவர் எந்த வேதப் பள்ளியில் படித்தார் என்று எனக்குக் கூறுங்கள்? "இவனுக்கு இந்த ஞானம் எங்கிருந்து வந்தது?" "இவனுக்கு இந்த அறிவு எங்கிருந்து வந்தது?" என்று அவர்கள் கேட்டார்கள். அவர்களால் அவர் படித்த அத்தகைய பள்ளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் பன்னிரண்டாம் வயதில் அவர் சதுசேயரோடும், பரிசேயரோடும், வேதப்பாரகரோடும் வேதத்தைக் குறித்து விவாதம் செய்து அவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். ஓ, அது நிறைவேறின ஒன்று.  249. ஒரு சிறுவன் தானே என்று அவர்கள் அலட்சியம் செய்ய வில்லை, ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாயிருந்தது. அதன் முன்பாக அவர்களால் நிற்க முடியவில்லை. அவருடைய உபதேசத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியமடைந்ததில் வியப்பில்லை. அதை எப்பொழுதாவது படித்திருக்கிறீர்களா? அது மாற்கு 1:22ல் இருக்கிறது, "அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடைய ஒருவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள்.” அவர் எதைப் பேசினாரோ, அதைக் குறித்து அறிந்திருந்தார். பாருங்கள்?  250. இன்றுள்ள சபையானது இரட்டிப்பான ஆவியைப் பெற்றதாயிருக்க வேண்டும். அது உண்மையாயிருக்கிறது. ஏனெனில் எலியாவின் சால்வை எலிசாவின் மேல் விழுந்தது போன்று (இரண்டு மடங்கு) இயேசு கிறிஸ்துவிலிருந்து நமக்கு வரவேண்டியதாயுள்ளது. 251. ஒரு வேளை நீங்கள், "ஓ, சகோ. பிரன்ஹாமே, நீங்கள் இயேசுவின் சபையைக் குறித்துப் பேசுகிறீர்கள்' என்று கூறலாம். அது உண்மை . அது அவருடைய சரீரமாயிருக்கிறது, என்னுடைய மனைவி என்னுடைய பாகமாயிருக்கவில்லையா? அவ்விதமே உன்னுடைய மனைவி உன்னுடைய பாகமாயிருக்கவில்லையா? உன்னுடைய மாம்சத்தில் மாம்சமும், எலும்பில் எலும்புமாக பரிசுத்த விவாகத்தில் இணைக்கப்பட்டாளே. அது சரியா? அதன் காரணமாகத் தான் ஒரு கிறிஸ்தவன் ஒரு வேசியை விவாகம் செய்யக்கூடாது, பாருங்கள். பாருங்கள்? அது சரியானதல்ல. இல்லை, ஐயா, அது தேவனுடைய எல்லாவற்றையும் முறித்துவிடும்.'  252. "ஓ, சகோ, பிரான்ஹாமே, சற்று இருங்கள்; கிறிஸ்துவின் ஆவி அதன் மேல் ..... என்று பேசுகிறீர்களே....'' வேதம் அவ்விதம் கூறுகிறது. அது உண்மையா? ஏசாயா 9:6ல், "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர்.... 'என்ன?' (தோளின் மேலிருக்கும் என்று சபையார் கூறுகின்றனர்) அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்'' தோள் அவருடைய சரீரத்தின் ஒரு அங்கமா யிருக்கிறது. அது அவருடைய சரீரம். சரிதானா? அவருடைய தோள்கள் அவருடைய சரீரமாயிருக்கிறது. இப்பூமியின் மேல் ராஜாங்கம் எங்கேயிருக்கிறது? அவருடைய சரீரத்தில். பரிசுத்தவான்கள் பூமியை நியாயம் விசாரிப்பார்கள். அது உண்மையா? 253. “உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக் குண்டானால் வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல் அநீதிக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?" என்று பவுல் கூறினான். அது உண்மை . பாருங்கள்? பரிசுத்தவான்கள் பூமியை நியாயம் தீர்ப்பார்கள். அவருடைய கர்த்தத்துவம் எங்கே யுள்ளது? அவருடைய தோள்களின்மேல் - அவருடைய சரீரம். கர்த்தத்துவம் அவருடைய தோள்களின் மேல் இருக்கும், ஏனெனில் அது அவருடைய சரீரத்தின் பாகமாயுள்ளது. அது என்ன? தேவனு டைய பூமிக்குரிய வல்லமையானது இப்பூமியில், வார்த்தையானது மாம்சமான அவருடைய சரீரத்தில் இருக்கிறது, அது நிறைவேறுதலை கொண்டு வருகிறது. மோசஸ்.... 254. இங்கு கவனியுங்கள். தேவனுடைய தூதர்கள் எப்பொழுதும் புறம்பாக்கப்பட்டவர்களாயிருந்தனர். அதை நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? மோசே புறம்பாக்கப்பட்டான், அது உண்மையா? இயேசுவும் புறம்பாக்கப்பட்டார். லூக்கா: 10:16ல் (நீங்கள் அதைக் குறித்துக்கொள்ள விரும்பினால், சரி) அதைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. 1 சாமு 8:7ல் தேவனுடைய செய்தி புறம்பாக்கப்பட்டது. தேவன் சாமுவேல் என்ற ஒரு தீர்க்கதரி சியைத் தூதனாகக் கொண்டிருந்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவனையும் அவன் செய்தியையும் ஜனங்கள் தள்ளினார்கள். அதற்கு பதிலாக அவர்கள் உலகத்தை தெரிந்து கொண்டார்கள்.  255. இது தேவனுடைய பிரமாணமாயிருக்கிறது, இதை சொல்லலாமா கூடாதா என்று எனக்குத் தெரியவில்லை. இது தேவனுடைய பிரமாணமாயிருக்கிறது. தேவனுடைய பிரமாணம், நிரூபிக்கப்பட்ட ஊழியக்காரனை ஏற்றுக்கொள்ள வேண்டியதா யிருக்கிறது. இங்கு ஒரு வசனத்தை படிக்க விரும்புகிறேன். யோவான் 13:20ல் அதை சற்று பார்ப்போம். இங்கு நான் ஒன்றை எழுதி வைத்துள்ளேன். அது இப்பொழுதுதான் என் சிந்தையில் தோன்றினது. ஓ ... நாம் இங்குள்ளோம்.  'நான் அனுப்புகிறவனை ஏற்று கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான், என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்."  256. நிரூபிக்கப்பட்ட ஒரு ஊழியக்காரன், ஓ, சகோதரனே, ஆயிரக்கணக்கான பிரசங்கங்கள் இங்கே இப்பொழுது உள்ளன. அது உண்மை . ஓ, அது தேவனுடைய பிரமாணமாயிருக்கிறது; அதை பெற்றுகொள். 257. சாமுவேல் தீர்க்கதரிசி அவர்களிடம் வந்து, "உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். கர்த்தருடைய நாமத்தினால் நான் உங்களுக்கு சொன்ன ஏதாகிலும் நிறைவேறாமல் போனதா?'' என்றான். அவர்கள், "இல்லை” என்றார்கள். "நான் எப்பொழுதாவது உங்களுடைய காணிக்கைகளை எடுத்து பெரிய கட்டிடங்களை கட்டி எனக்கு மகிமையைத் தேடின துண்டா ?”, என்றான். அதற்கு அவர்கள், “இல்லை” என்றார்கள். நான் கூறின தேவவார்த்தைக்கு தேவன் பதிலளித்து நிரூபித்திருக்கிறாரா? என்றான். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள். பின்பு சாமுவேல், “நல்லது, பின் ஏன் எனக்கு செவிகொடுக்க மாட்டேன் என்கிறீர்கள்?" என்றான்.  258. இயேசு பரிசேயரைப் பார்த்து ...... “நீ விபச்சாரத்தில் பிறந்தவன் என்று நாங்கள் அறிவோம்.'' "என்னில் பாவம் உண்டு என்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? தேவனுடைய வார்த்தையை நான் உங்களுக்கு காண்பிக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா என்று பார்க்கலாம். தேவன் அதை உங்களில் நிரூபிக்கிறாரா இல்லையா பாருங்கள். நான் என்னைக் குறித்து பேசுவேனானால் பொய்யானாய் இருப்பேன்; ஆனால் நான் தேவனைக் குறித்துப் பேசி, பின் தேவன் என் மூலமாக வார்த்தையைப் பேசுவாரென்றால், அதுவே உண்மையாயிருக்கும். ஆகவே தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பது நானா அல்லது நீங்களா” என்றார். ஆ!  259. இயேசு, “நான் அனுப்பிகிற உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன், என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். இப்பொழுது, அவர் அனுப்புகின்ற அவர்கள் ...” என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் என்னை அனுப்பிய பிதாவை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்," என்றார். இதிலே நிலைத்திருக்க நமக்கு நேரம் கிடைக்குமானால் ... 260. தேவனுக்கு உங்களால் ஊழியம் செய்யமுடியும் ... தேவன் அனுப்புகின்ற அவருடைய ஊழியக்காரரை நீங்கள் விசுவாசிப் பதனாலேயே, நீங்கள் தேவனுக்கு சேவை செய்ய முடியும். தேவன் தம்முடைய ஊழியக்காரர்களை இப்பூமிக்கு திவ்விய ஆலோசனை யோடு வார்த்தையை வியாக்கியானப்படுத்த உன்னிடம் அனுப்பும் போது, அவர்களை நீ ஏற்று கொள்வதே நீ தேவனுக்கு செய்யும் சரியான ஆராதனை (பாருங்கள்?) நீங்கள் அதை விசுவாசிக் கின்றீர்களா? அதைக் குறித்ததான சில வேதாகம வசனங்களைக் குறித்துக் கொள்கிறீர்களா? I கொரி 4:16ல் பவுல், “என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன்" என்றான். 1 கொ. 11:1ல் "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்று கிறவர்களா யிருங்கள்” என்றான். சரி. இப்பொழுது லூக்கா 10:16ம் வசனத்தைப் படிப்போம். லூக்கா10:16ல் இயேசு இங்கே என்ன கூறினார் என்று நாம் பார்ப்போம். லூக்கா10:16 - இதோ நாம் அதை .... இதோ, இது இங்கே என்ன கூறுகின்றது என்று நாம் பார்ப்போம். அதை அவர்கள் குறித்துக்கொண்டிருக்கையில் - அது 1 கொரி 14:16 மற்றும் 11:1ல் - நாம் இப்பொழுது இதைப் படிப்போம். நான் லூக்கா 10:16ஐ படிப்பேன். சரி. அதில் இயேசு, சீஷரை நோக்கி:  “உங்களுக்குச் செவி கொடுக்கிறவன் எனக்குச் செவி கொடுக்கிறான். உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டை பண்ணுகிறான், என்னை அசட்டை பண்ணு கிறவன், என்னை அனுப்பினவரை அசட்டை பண்ணுகிறான்" என்றார். 261. இவ்வசனங்கள் தேவன் தம்முடைய செய்தியை தமது ஊழியக்காரர்களின் மூலம் பேசுகிறார் என்பதை நிரூபிக்கின்றன. எப்பொழுதும் அவ்விதமே செய்கிறார். அது உண்மை . 262. விசுவாசிக்கும் சபையின் வல்லமை என்பது: கிறிஸ்து வானத் திலும் பூமியிலும் எல்லா அதிகாரங்களையும் உடையவரா யிருக்கிறார் என்பதே. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால் அவர் உங்களில் இருப்பாரென்றால் என்னவா யிருக்கும்? கிறிஸ்துவுக்கு எல்லா வல்லமையும் உண்டா ? மத் 28:18ஐ வாசித்துப்பாருங்கள். அது உண்மை . 263. அவரே வார்த்தை .... விதையாய் தம்முடைய சரீரத்தில் இருக்கிறார், அவர் நம்மில் இருப்பது என்பது நம்மில் வார்த்தை ----- விதையாய் உருவாகிறார் என்பதாகும். தேவன் என்னப்படுவ தெல்லாம் கிறிஸ்துவில் ஊற்றப்பட்டது, கிறிஸ்து எனப்படுவ தெல்லாம் சபைக்குள்ளே ஊற்றப்பட்டது; அதுவே வல்லமையா, யிருக்கிறது. 264. இப்பொழுது கவனியுங்கள்! தேவனுடைய பிரதியுற்பத்தியை ஞாபகம் கொள்ளுங்கள். அதன்தன் ஜாதியின்படி அதை செய்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உண்மையா? கிறிஸ்து வாகிய வார்த்தை வித்து, அவருடைய சரீரத்தின் மூலமாய் வரவேண்டியதாயிருக்கிறது. (ஓ, நீங்கள் களைப்படைந்து கொண்டிருக்கிறீர்களா? சரி. இன்னும் சில நிமிடத்தில் நாம் அமைதலாயிருந்து ஜெபிப்போம்) இது சற்று ஆழமாக பதிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது உங்கள் உள்ளூரச் சென்று பணிதீர்க்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் வித்து நிச்சயமாக (நி - ச் - ச - ய - மா - க) அவருடைய சரீரத்தின் மூலமாக வரவேண்டியதாயிருக்கிறது --- ஸ்தாபனத்தின் மூலமாயல்ல, ஆனால் வார்த்தை வித்தின் மூலமாக, மறுபிறப்படைந்த சரீரத்தின் மூலமாகவே வரவேண்டியதாயிருக்கிறது.  265. நினைவில் கொள்ளுங்கள். அது என்ன? கிறிஸ்துவின் வித்து ..... என்னுடைய வித்து எங்கிருந்து வருகிறது? என்னுடைய சரீரத்தின் மூலமாகவே. ஒரு ஆப்பிள் மரத்தின் வித்து எவ்விதமாய் வருகிறது? அதனுடைய சரீரத்தின் மூலமாகவே. ஆகவே வித்து சரீரத்தின் மூலமாய் வருகிறதாயிருக்கிறது? சபையானது கிறிஸ்துவின் சரீரமாயிருக்கிறது. அது உண்மையா? இந்த வேதாகம சபை தன் சரீரத்தில் அவரை உற்பத்தி செய்கிறது (மறுபிறப்பு). அவருடைய சபை அவருடைய வார்த்தையாகவேயிருப்பதினால் ஜனங்கள் எபி: 13:8ல் கூறப்பட்ட படி "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்பதின் நிறைவேறுதலைக் காண்பார்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவர்கள் இப்பொழுது ஸ்தாபனத்தின் கலப்பினங்களாய் இல்லை. இவர்கள் அங்கு நிறைவேறுதலின் எண்ணுதலுக்காக (count down) எடுத்துக் கொள்ளப்படுதலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஸ்தாபனக் கலப்பல்ல. இங்கு நிற்பவர்கள் அவர்களல்ல. மகிமை! இவர்கள் வித்தாயிருக்கிறார்கள். இல்லை. ஐயா. 266. பவுல், தான் ஏதாவது மிகப்பெரிய வார்த்தைகளை (அவனு டைய சில வேதக் கல்வியறிவு) கூறக்கூடும், அதை ஜனங்கள் கவனித்து விடுவார்களோ என்று பயந்திருந்தான். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் 1 கொ. 2:1.8ஐ குறித்துக்கொள்ளுங்கள், அதில் பவுல், "அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். உங்கள் விசுவாசம் மனுஷருடைய (வேத பள்ளியின்) ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், எளிமையுள்ளதாயிருந்து, ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப் படுத்தப்பட்டதாயும், உங்கள் விசுவாசம் தேவ வார்த்தையில் இளைப்பாறத்தக்கதாகவும் இருந்தது" என்று கூறினான். ஆம் ஐயா!  267. மணவாட்டி சபையில் ஒரு பிள்ளை பிறந்தால், ஸ்தாபன சபைகளில் ஆயிரம் பிள்ளைகள் என்ற விதமாக, அங்கத்தினர்களால் மணவாட்டி சபையை ஸ்தாபன சபை மிஞ்சுவதாயிருக்கிறது ...... அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்விதம் போதிக்கிறது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது அவ்விதம் இருக்கும் என அவர் வாக்குத்தத்தம் செய்து இருக்கிறார். சரி. ஏசாயா: 54:1ல் அதைக்குறித்து கூறியிருப்பதைப் படிப்போம். நான் அதைப் படிக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? சரி. நாம் அந்தப் பகுதிக்கு செல்வோம். அவர்கள் இவ்விதமாக மிஞ்சுவதா யிருப்பார்கள் என்பதை அவர் எங்கே வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்று நீங்கள் காண விரும்பினால் அது ஏசாயா 54 - 53 - 54:1 - ல் "பிள்ளை பெறாத மலடியே, மகிழ்ந்து பாடு; கர்ப்பவேதனைப் படாதவளே, கெம்பீரமாய் பாடி ஆனந்த சத்தமிடு; வாழ்க்கைப்பட்ட வளுடைய பிள்ளைகளைப் பார்க்கிலும். அநாதை ஸ்திரியினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார்"  268. அது உண்மையா? விவாகம் செய்யப்பட்ட மனைவியின் பிள்ளைகளைப் பார்க்கிலும் வேசியின் பிள்ளைகள் எண்ணிக்கையில் அதிகமாயிருக்கின்றனர். அவர்கள் நம்மைவிட அதிகமாயிருப் பார்கள். அவர்கள் அநேகம் பிள்ளையாயிருந்தாலும் அவர்களுக்கு உண்மையான தகப்பன் இல்லை!  269. இந்த ஸ்தாபன ஜாதி தனிப்பட்ட விதமான சபையென்று யூதா: 8.13 வசனங்களில் கூறப்பட்டுள்ளது. "இவர்கள் காற்றுகளால் அலையுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப் போன மரங்களும், தங்கள் அவமானங்களை நுரை தள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக் கிறார்கள். " பெந்தெகொஸ்தே ஸ்தாபன ஜாதியினர் II தீமோ: 3:1-8ல் கூறப்பட்டுள்ளனர். “தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப் பட்டவர்களை நீ விட்டு விலகு" (5ம் வசனம்) அவர்களுடைய வித்து அவர்களுடைய ஜாதியைப் பிறப்பித்து விட்டது.  270. இந்த எத்தியோப்பிய மந்திரியைக் குறித்து கவனியுங்கள் ... ஓ இங்கே, நாம் சில ஆழமான காரியங்களை இப்பொழுது காணப்போகிறோம். உண்மையான வித்தையுடைய உண்மையான சபையை, வித்து சபையை இப்பொழுது கவனியுங்கள். கவனியுங்கள், இந்த எத்தியோப்பிய மந்திரி எல்லாவித D.D பட்டயங்களையுமுடையனாயிருந்தான். தேவன் தமது சுவிசேஷத்தை ஒரு போதும் ஒரு தேவ தூதனுக்கு ஒப்படைக்க வில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? "வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது. வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்'' என்று கலா: 1:8ல் கூறப்பட்டிருப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆகவே ஒரு வான தூதனும் வார்த்தையினின்று வித்தியாசப்பட்டிருந்தால் அவன் தவறானவனாகும். தேவன் தேவதூதருக்கும் கீழாக வந்து சுவிசேஷத்தை அவருடைய குமாரர்களான மனிதனிடம் ஒப்படைத்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, கவனியுங்கள். அவர் அதை ஒருபோதும் தூதரிடம் ஒப்புக் கொடுக்கவில்லை. கவனியுங்கள், அவர் அதைச் செய்யவில்லை.  271. பிலிப்பு பெந்தெகொஸ்தே பண்டிகைக்கென எருசலேமில் பணிந்துக் கொள்ள சென்றிருந்தான். எத்தனைபேர் "ஆமென்” என்பீர்கள்? அந்த எத்தியோப்பியனான (ஆங்கிலத்தில் அண்ணகன் என்று எழுதியிருக்கிறது ...... தமிழாக்கியோன்) மந்திரி, எருசலேமிலிருந்த எல்லா பட்டம் பெற்ற மேதாவிகளோடும் தேவனைத் தொழுது கொண்டான். ஆனால் ஏன் அவன் ஒன்றையும் பெற்று கொள்ள முடியாமல் திரும்பி வந்து ஏசாயாவின் தீர்க்கதரிசன ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான்?  272. ஒரு தூதன் பிலிப்புவை அங்கு போகும்படி வழி நடத்தியிருந் தாலும், ஜீவனின் வித்து பிலிப்புவின் சரீரத்தினின்று வரவேண்டி யிருந்தது. ஓ சகோதரனே, நாம் இப்பொழுது அந்த வரிசையில் இருக்கிறோம்! ஜீவ வித்து எங்கிருந்து வருகிறதாயிருக்கிறது? ஒரு வான தூதனின் மூலமாகவா? ஒரு வானத் தூதன் எங்கு போக வேண்டும் என்று அவனுக்கு வழிக்காட்டி ஊழியஞ் செய்தான். ஒருவான தூதன் செய்தியைக் கொண்டு வருகிறவனாயிருக்கிறான்; ஆனால் பிலிப்பு வோ குமாரனாயிருக்கிறான். பிலிப்பு ஜீவவிதை யாகிய வார்த்தையென்னும் செய்தியைக் கொண்டிருந்தான், அந்த விதமாகத்தான் ஒரு பிள்ளை பிறக்க முடியும். பிலிப்பு தன் கரங்களை அவன் மேல் வைத்து அவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான். அப்பொழுது அங்கு பரிசுத்த ஆவியானவர் வந்தார். நிச்சயமாக.  273. ஜீவவித்து சரீரத்தினின்று வரவேண்டியதாயிருந்தது. என்ன சரீரம்? கிறிஸ்துவின் சரீரம். உண்மை . பிலிப்பு அந்த சரீரத்தின் ஒரு அங்கமாயிருந்தான்,  274. கவனியுங்கள். அப்போஸ்தலர் 10:48லும் இதே காரியம்தான் நடந்தது. பேதுரு மேல் வீட்டில் இருந்தான். அப்பொழுது ஒரு தூதன் அவனைக் கொர்நேலியுவின் வீட்டிற்கு வழிநடத்தினான். ஆனால் வார்த்தை எங்கிருந்து வந்தது? பேதுருவின் சரீரத்தினின்று. ஓ, நான் இப்பொழுது நல்லவிதமாக உணருகிறேன் பறைப்பதைப் போல. ஒரு தூதன் அவனிடம், "தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே" என்றும், "ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களுடனே கூடப்போ" என்றார். அங்கு சென்று பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தபோது ..... ஒரு தேவதூதன் அல்ல, ஒரு கத்தோலிக்க மதகுருமார்கள் அல்ல (Cardinal) ... பேதுரு பேசிக் கொண்டிருந்தபோது என்ன சம்பவித்தது? அவன் வார்த்தை தங்கியிருந்த சரீரமாயிருந்தான். வார்த்தை பற்றிக்கொண்டது. ஓ, சகோதரனே . வ்யூ ஊம். ஓ, என்னே , தூதன் நடத்தினான், ஆனால் ஓ, சகோதரனே! ஜீவன் கிறிஸ்துவின் சரீரத்தின் மூலமாய் வருகிறதாயிருக்கிறது.  275. தமஸ்குவிற்கு போகிற வழியிலே பவுல் ஒரு தரிசனத்தின் மூலம் வழி நடத்தப்பட்டான்; ஆனால் அனனியா ஜீவவித்து இவனிடமிருந்தது, வார்த்தையை உடையவனாயிருந்தான். ஆமென்! “அங்கே சென்று அவன் மேல் உன் கைகளைவை” என்ற ஒரு தரிசனத்தை அனனியா என்னும் தீர்க்கதரிசி கண்டான்.  276. "சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர்” என்று கூறினான். அவன் அதை எவ்விதம் அறிந்தான்? அவனிடம் வார்த்தை இருந்தது. தேவனு டைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு வருகிறதாயிருக்கிறது. அவன் அங்கு சென்று, தீர்க்கதரிசனம் உரைத்து, "நீ பார்வையடையும் படிக்கும், பரிசுத்த ஆவியினால் நிரப்பும் படிக்கும் அவர் என்னை அனுப்பினார், பார்வையடைவாயாக!” என்றான். உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தன. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றான். பின்பு இக்காரியங்களை பற்றி ஆராய அரபு தேசத்திற்குச் சென்றான். தேவ தூதன் வழி நடத்தினான். அது உண்மை . ஆனால் பவுலுக்காக் கிரியை செய்ய ஒரு வார்த்தை வித்து இருந்தது. நித்திய ஜீவனைக் கொடுக்க வித்தானது தேவனுடைய ஆவியை எடுக்க வேண்டியதாயுள்ளது. வ்யூ. என்னே.  277. இப்பொழுது இன்னும் இரண்டு மணி .... நான் அதை அறிந்துள்ளேன். நான் சிலவற்றை படிப்பேன். நான் பத்து நிமிடங்களுக்கு அதைப் படிக்கட்டும், சரியா? நான் இதிலே சிறிது நேரம் தரித்திருக்க வேண்டுமென்ற ஓர் நல்லெண்ணம் பெற்றிருந்தேன். ஆனால் நாம் தொடர்ந்து செல்வோம் - நமக்கு நேரம் கடந்துவிட்டது. இப்பொழுது ஐந்து மணிக்கு இருபத்தைந்து நிமிடங்கள் உள்ளன. ஜார்ஜியாவில் இப்பொழுது என்ன நேரம் என்பதை நான் அறியேன். நான் சிறிது நிறுத்தி இதைக் குறித்து சிறிது வியாக்கானம் அளிக்க வேண்டும் என்று விரும்பினேன் - ஆனால் நான் இதை மிகவும் மெதுவாகப் படிப்பேன்.  278. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது நான், ஆவியானவர் என் எழுதுகோலை எடுத்து எழுதச் சொன்னதை உங்களுக்கு மிகவும் மெதுவாக படிக்கப்போகிறேன். நண்பர்களே, ஸ்தாபனங்களை விட்டு வெளியே வந்து ஒரு உண்மையான சபையை அடைய நான் ஏன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களால் காணமுடிகிறதா? அது ஏன் வார்த்தை மூலமாக வரவேண்டும் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? மனித ஞானத்தினால் ஒரு போதும் அது வரமுடியாது; தேவ வார்த்தை யினால் மட்டுமே வரமுடியும், அதன் காரணமாகத்தான் நான் எழுதப்பட்ட வார்த்தையை அதன் வழியின்படியே விசுவாசிக் கிறேன். அதனோடு ஒன்றையும் சேர்க்காமல் ஒன்றையும் கூட்டாமல் அது இருக்கிறவண்ணமாகவே அதை பிரசங்கித்துக் கொண்டு செல்லுகிறேன். 279. சகோதரர்களே (ஒலிப்பதிவு செய்பவர்கள்) நீங்கள் என்னோடு ஒவ்வாமலிருந்தால், நான் உங்களுக்காக ஜெபம் செய்வேன்; நான் தவறாயிருப்பேனென்றால், நீங்கள் எனக்காக ஜெபம் செய்யுங்கள். நான் இப்பொழுது படிக்கப் போகிறதை மிகவும் நெருக்கமாக கவனியுங்கள். ஆவியானவர் என்னோடு பேசி , "உன் எழுதுகோலை எடுத்துக்கொள்'' என்று கூறினார். நான் என் பிரசங்கத்தின் சிலவற்றை இப்பொழுது விடவேண்டிவனாயிருக்கிறேன், ஆனால் சிலவற்றைக் கட்டாயமாக இங்கு கொடுக்க வெண்டியவனாக இருக்கின்றேன்.  280. சரி. இப்பொழுது, இதைத்தான் நான் உங்களுக்கு கூற முயற்சிக்கிறேன். பிரதியுற்பத்தியின் பிரமாணமானது தங்கள் தங்கள் ஜாதியை பிறப்பிக்கிறதாயிருக்கிறது (ஆதி 1:11). இந்த கடைசி நாட்களில், உண்மையான மணவாட்டி சபையானவள் தலைக்கல்லினிடத்திற்கு நெருங்குவாள். அவள் அவ்விதம் அந்த மகத்துவமான தலைக்கல்லை நெருங்கும் போது ஒரு விசேஷமான சபையாயும், விசேஷமான ஜாதியாயும் இருப்பாள். அவரோடு அவள் இணைக்கப் படத்தக்க தாய் அவரைப் போலவே அவருடைய சாயலைப் பெற்றிருப்பாள். அவர்களிருவரும் ஒன்றாயிருப்பார்கள். ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாய் அவர்களிருப்பார்கள். ஸ்தாபனங்கள் இதை ஒரு போதும் உற்பத்தி செய்ய முடியாது. அவர்கள் கொள்கைகளோடும் கோட்பாடுகளோடும் தேவனு டைய வார்த்தையைக் கலந்து ஒரு கலப்பினத்தை உற்பத்தி செய்வார்கள்.  281. முதலாம் குமாரன், உரைக்கப்பட்ட தேவவார்த்தை ... விதையாயிருந்தான். அவனுக்கு ஒரு மணவாட்டி கொடுக்கப் பட்டது. (ஆவியை நான் திரும்ப பெறுகிறேன், நான் எதைக் கூறினேனோ அதை திரும்பவும் பொறுக்கி எடுக்கிறேன். பாருங்கள்?) தன்னை பிரதியுற்பத்தி செய்து கொள்ள ஒரு மணவாட்டி அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அவள் விழுந்து போனாள் (அவன் தன்னைப் போல இன்னுமொரு தேவ குமாரனை உற்பத்தி செய்யவே மணவாட்டி கொடுக்கப்பட்டாள். ஆனால் அவள் கலப்பினத்தினால் விழுந்து போனாள். பாருங்கள்). அவள் விழுந்து போனாள்; அதன் காரணமாக அவனும் மரித்தான். 282. இரண்டாவது குமாரனும், உரைக்கப்பட்ட தேவ வார்த்தை .... விதையாயிருந்து, ஆதாமுக்கு ஒரு மணவாட்டி கொடுக்கப் பட்டது போன்று, இவருக்கும் ஒரு மணவாட்டி கொடுக்கப் பட்டது; ஆனால் அவர் விவாகம் செய்யும் முன்பு அவள் விழுந்து போனாள்; ஏனெனில் அவள் ஆதாமின் மணவாட்டியைப் போன்று சுயாதீனப் பிரமாணத்திற்குட்பட்டவளாய் வார்த்தையை ஏற்றுக் கொண்டு ஜீவிப்பாளா அல்லது வார்த்தையைச் சந்தேகித்து அதன் காரணமாக மரிப்பாளா என்று சோதிக்கப்பட்டாள். அவ்விதமே அவள் வார்த்தையைச் சந்தேகித்து மரித்தாள்.  283. பின்பு, உண்மையான வார்த்தை --- விதையாகிய ஒரு சிறு கூட்டத்தினின்று தேவன் ஒரு நேசமுள்ள, கற்புள்ள மணவாட்டியை கிறிஸ்துவுக்கு கொடுப்பார். அவள் ஒரு வார்த்தை கன்னிகையாயிருப்பாள் ...... மனித கோட்பாடுகளையும், கொள்கைகளையும் அறியாத அந்த கன்னிகையான அவர்களாலும், அவர்கள் மூலமாயும் வாக்குத்தத்தம் செய்யப்பட்டயாவும் நிறைவேறும். தேவன் மரியாளிடம் வாக்குத்தத்தம் செய்தது போல தம்மிலே வார்த்தையாகிய வாக்குத்தத்தத்தை உடையவராய், தேவன் தாமே தம்மை வெளிப்படுத்துவார். தம்மைக் குறித்து எழுதியிருப்பவைகள் யாவையும் நிறைவேறுவதற்காக தம்முடைய சொந்த வார்த்தை யாகிய வாக்குத்தத்தின் பேரில் தாமே கிரியைச் செய்வார். கன்னியின் கருப்பையினின்று (இப்பொழுதுள்ள ஆவிக்குரிய கருப்பையைப் போன்ற உதாரணம்) அவர் வந்தபோது செய்த விதமாக, எழுதப்பட்ட வார்த்தையாக இருந்தபோதிலும் (ஏசாயா 9:6) ஒரு தேவதூதன் மூலம் உரைக்கப்பட்டபோது, 'உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக் கடவது'' என்று அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்ட மரியாளைப் போன்று இப்பொழுது உள்ள மணவாட்டியும் கிரியைச் செய்வாள். அவர்கள் அவரில் அன்பு கூறுவர், (அவருடையவைகளை நேசிப்பார்கள்). அவர் சபையின் தலைவராக இருந்து எல்லா அதிகாரத்தையும் பெற்றிருக்கிறபடியால் இவர்களும் அவருடைய தன்மைகளைப் பெற்றிருந்து, சரீரத்தின் அவயவங்கள் தலைக்குக் கட்டுபட்டிருக்கும் வண்ணமாக அவர்கள் தலையாகிய கிறிஸ்துவுக்குக் கட்டுப்பட்டிருப் பார்கள். 284. ஒரு ஒற்றுமையைக் கவனியுங்கள். பிதா முதலில் எதையாகிலும் காண்பியாமல் இயேசு தாமாக கிரியை செய்யாதது போல (தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உள்ள ஒரு மனம் --- யோ: 5:19 ஐ பார்க்கவும்) மணவாட்டியும் இருப்பாள். அவளுக்கு அவர் தம்முடைய வார்த்தையாகிய ஜீவனைக் காண்பிக்கிறார். (அவளுக்கு அவர் காண்பிக்கிறார்). அவள் அதைப் பெற்றுக்கொள்ளுகிறாள். அதைக் குறித்து அவள் ஒருபோதும் சந்தேகம் கொள்வதில்லை.  285. ஆகையால் யாதொன்றும் --- மரணம் கூட --- அவளை சேதப்படுத்துவதில்லை; ஏனெனில் விதையானது விதைக்கப் பட்டால் தண்ணீரானது பயிரை வளரச் செய்ய வேண்டும். ஆமென். (இப்பொழுது என்னிடம் ஒரு மகத்தான அல்லேலூயா உண்டு) இங்கே தான் இரகசியம் இருக்கிறது; வார்த்தையும் கிறிஸ்துவின் மணவாட்டியினுள் இருப்பதால், வார்த்தையைக் கொண்டு அவர் என்ன செய்ய சித்தமாயிருக்கிறாரோ, அதை அவள் அவருடைய நாமத்தினாலே செய்கிறாள். கர்த்தருடைய நாமத்தினாலே செய்கிறாள். "கர்த்தர் உரைக்கிறதாவது” என்ற வார்த்தை அவளிடம் இருக்கிறது.  286. பின்பு அது உயிர்ப்பிக்கப்பட்டு, தனது நோக்கத்தை நிறைவேற்றும் வரை அது வளர்வதற்காக பரிசுத்த ஆவி அதற்கு நீர்பாய்ச்சுகிறது. அவர்கள் அவருடைய சித்தத்தை மட்டும் செய்வார்கள். (ஆமென்! அதை நான் விசுவாசிக்கிறேன்) வித்தியாசமாக கிரியை செய்ய யாராலும் அவர்களை பலவந்தப் படுத்த முடியாது. அவர்கள் ''கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதை உடையவர்களாயிருப்பார்கள்; அல்லது அமைதலா யிருப்பார்கள். அவர்கள் தேவனுடைய கிரியையைச் செய்வார்கள். ஏனெனில் அவர் இவ்வுலகத்திலிருந்த போது எல்லாக் கிரியை களையும் முடிக்காததன் காரணத்தால், அவரே அவர்களுக் குள்ளிருந்து கிரியை செய்து முடிக்கிறார். அவர் இப்பொழுது அவர்கள் மூலமாய் நடப்பிக்கும் கிரியைகளை அவர் மாம்சத்திலிருந்த போது நிறைவேற்றுவதற்கு அது ஏற்ற சமயமா யிருக்கவில்லை. 287. யோசுவா, காலேப் என்பவர்களைப் போன்று நிற்போமாக (உன்னிப்பாக கவனியுங்கள், இப்போது நாம் ஆவிக்குரிய பின்னணியைப் பெற்றுகொள்ளப் போகிறோம்). வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசம் நமது கண்களுக்குத் தெரிகிறதினால், யோசுவா, காலேப் என்பவர்களைப் போன்று உறுதியாக நிற்போமாக. அதற்குரிய நேரமானது நெருங்கிவிட்டது. யோசுவா என்பதற்கு எபிரெய பாஷையில் இரட்சகர் என்றும், சபையை கானானுக்குள் கொண்டு செல்லும் கடைசிக் கால தலைவன் என்றும் அர்த்தம். காலேப் என்பதற்கு யோசுவாவுடன் நிலைத்திருந்த உண்மையான விசுவாசி என்று அர்த்தமாம். தேவன் இஸ்ரவேலை தம்முடைய வார்த்தையோடு ஒரு கன்னியாக ஆரம்பித்தார், ஆனால் அவர்களோ வித்தியாசமான தொன்றை விரும்பினார்கள். கடைசி கால சபையும் அதுபோலவே இருக்கிறது.  288. கவனியுங்கள். குறித்த சமயம் வரும் வரையில் தேவன் இஸ்ரவேலரைப் புறப்படப் பண்ணவில்லை. (இப்பொழுது, கவனியுங்கள். இது ஒரு பொருளை சுட்டிக் காட்ட போகின்றது) யோசுவா அந்த நேரத்திற்காக காத்திருந்தான்! "தேவன் நமக்கு தேசத்தைக் கொடுத்தார், வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், நாம் சென்று அதை சுதந்தரித்துக் கொள்வோம்'' என்று ஜனங்கள் சொல்லியிருக்கக் கூடும், "யோசுவாவே, உனக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தை நீ இழந்து விட்டாய், நீ பின் வாங்கி விட்டாய். ஏன் நீ ஏதாகிலும் ஒரு காரியத்தைச் செய்யக் கூடாது? "கர்த்தர் உரைக்கிறதாவது" என்று ஒரு நிமிடத்தில் காரியங்களைச் செய்வாயே! இப்பொழுது என்ன?" என்றெல்லாம் அவர்கள் ஞானமுள்ள தீர்க்கதரிசி தேவனுடைய வாக்குத்தத்தத்தை அறிந்திருந்தான், அது மட்டுமல்ல, அவன் வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கென்ற காலத்திற்கான திட்டவட்டமான தீர்மானம் தேவனிடத்தினின்று வர காத்திருந்தான்.  289. (இந்த உவமைகளை கவனியுங்கள்) சமயமானது வந்தபோது, தேவனுடைய வார்த்தையோடு நிலைத்து இருந்த யோசுவாவிடம் அவர் அதை ஒப்படைத்தார், அவனைத் தவிர வேறு யாரையும் அவர் நம்பவில்லை. இதுவே இக்கடைசிக் காலத்திலும் திரும்ப சம்பவிக்கும். 290. வல்லமையாய் அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியான மோசே தன்னை அவர் உபயோகிப்பார் என்று அறிந்திருந்தான். ஏனெனில் அவன் அவருக்கு ஊழியக்காரனாயிருப்பான் என்பதை அவனு டைய விநோதமான பிறப்பினால் தேவன் உறுதிப்படுத்தியிருந்தார். ஆபிரகாமின் வித்தை விடுவிக்கும் சரியான சமயம் வந்தபோது (நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா?) மோசே, ஒருபோதும் எகிப்தில் தங்காமல் எகிப்திலுள்ள மக்களோடு வேதத்தைக் குறித்து தர்க்கியாமல், ஜனங்கள் அவனை ஏற்று கொள்ளும் சமயம் வரும்வரை வனாந்தரத்தில் தேவனிடத்தில் காத்திருந்தான். அவர்களைக் குறித்து சாட்சிகொடுக்க அவன் வந்தான்; ஆனால் அவர்களோ அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை வனாந்தரத்திற்கு அழைத்துக் கொண்டார். தேவன் அவனைத் தெரிந்தெடுத்ததை சாட்சி பகிர்ந்தார். ஆனால் மோசே தன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கருதி தேவன் அவனை வனாந்திரத்துக்கு கொண்டு செல்லவில்லை. மோசேயை ஏற்றுக்கொள்ள ஜனங்கள் ஆயத்தமாயிராததன் காரணத்தால் அவன் அங்கு கொண்டு போகப்பட்டான். ஜனங்கள் இதைப் புரிந்து கொள்வார்களென்று நினைத்தான். ஆனால் அவர்களோ இதைப் புரிந்து கொள்ளவில்லை. (இதை நான் எழுதவில்லை. அவரே இதை எழுதினார்).  291. தேவனுடைய வார்த்தையை தன்னிடம் வரப்பெற்ற அந்த வல்லமையான நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசி எலியா தன்னுடைய செய்தியை, தேசத்தில் தன் தலைமயிரை கத்தரித்துக் கொண்ட முதல் பெண்ணாகிய யேசபேலுக்கும் அவளைச் சார்ந்த நவநாகரிக வர்ணந்தீட்டிக்கொண்ட அமெரிக்கக் குழுக்களுக்கும் பிரசங்கித்த பின், தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை நிரூபிக்கிறவராயிருந்தார்; ஒவ்வொரு தடவையும் அவன் தீர்க்கதரிசனம் உரைத்த போது, அது சத்தியமாயிருந்தது. தேவனுடைய தீர்க்கதரிசியையும் அவர்களுக் காக அவன் மூலமாய் அனுப்பியிருந்த தேவனுடைய வார்த்தை யையும் அவர்கள் புறக்கணித்ததின் காரணமாக தேவன் இந்த சந்ததியை மகா வாதைகளினால் வாதித்தார்.  292. தேவன் தமது தீர்க்கதரிசியை வனாந்திரத்திற்கு அனுப்பி அங்கு அவனை மறைத்து வைத்தார். தேசத்தின் ராஜாவாலும் அவனை வெளிக்கொண்டு வரமுடியவில்லை. தேவனுடைய சித்தத்திற்கு விரோதமாக அவனை பலாத்காரமாக அழைத்து வர் முயற்சி செய்தவர்கள் மரித்தார்கள். ஓ மகிமை! ம்ம்ம் .... ! ஆனால் தேவன் தமது உண்மையுள்ள தீர்க்கதரிசிக்கு ஒரு தரிசனத்தைக் காண்பித்தார். அப்பொழுது அவன் ஒளிப்பிடத்திலிருந்து வெளி வந்து “கர்த்தர் உரைக்கிறதாவது” என்று உரைத்தான். அவன் என்ன செய்தான்? நேராக வார்த்தைக்குத் திரும்பிச்சென்றான். தகர்க்கப்பட்ட பன்னிரண்டு கற்களையும் ஒன்று சேர்த்து பலி பீடத்தைச் செப்பனிட்டான். பண்ணப்பட்ட உண்மையுள்ள தீர்க்கதரிசியான யோவான் ஸ்நானன், மேசியாவாகிய ஆட்டுக்குட்டி வருகிறார்! என்ற தேவனு டைய சத்தத்தைக் கேட்கும் வரை அவன் தேவனால் வனாந்தரத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு சென்றான். அவனுடைய தகப்பனுடைய ஆசாரிய முறைமையின் பள்ளியோ, பரிசேயருடைய பள்ளியோ அல்லது அந்த ஸ்தாபனமோ, வனாந்தரத்தினின்று அவனை அழைக்க முடியவில்லை . ஆவிக்குரிய சிந்தையோடு கவனிக்கின்றீர்களா? இன்னும் எவ்வளவோ நான் சொல்லக் கூடும்! நான் இங்கே சிலவற்றை விட்டுவிடுகிறேன், இப்பொழுது.  294. இன்றைக்கு எவ்வளவு வித்தியாசப்பட்டதாயிருக்கின்றது! ஜனங்களுக்காக செய்தியை தேவனிடத்தில் பெற்று கொண்டதாக கூறும் இக்காலத்திய அநேக சுவிசேஷகர்கள் கோராகைப் போல் இருக்கின்றனர். அபிஷேகம் பெற்றிருந்து நீரூபிக்கப்பட்ட தேவ ஊழியக்காரனான மோசே பெற்றிருந்த அதிகாரத்தை இந்த கோராகு மறுதலித்து அதைக் குறித்து விவாதம் செய்தான். இஸ்ரவேலர் அவனோடு சேர்ந்து பொன் கன்றுக்குட்டியைச் செய்தது போன்று இன்றும் அநேகர் பணம் சம்பாதிக்கும் வழிகளை உற்பத்தி செய்து, பெரிய கட்டிடங்களைக் கட்டியும், பெரிய பள்ளிக் கூடங்களைக் கட்டியும், தங்கள் சொந்த வித்தை செயற்கை முறையாக குஞ்சு பொறிக்கச் செய்கிறார்கள். அபிஷேகிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மையான தேவ தீர்க்கதரிசியின் செய்தியைக் கேட்ட பின்பும் ஜனங்கள் அன்று அவனுடைய காரியத்திற்கு விழுந்து போனது போன்று இன்றும் விழுந்து போனார்கள். 295. அவர்கள் கோராகின் பொய்க்கு விழுந்து போனார்கள். தம்முடைய தீர்க்கதரிசிகளைத் தம்முடைய வார்த்தையினால் நிரூபிப்பார் என்று தேவன் தெளிவாக இஸ்ரவேலருக்கு கூறி யிருந்தார். கோராகு வேதப்பிரகாரமான தீர்க்கதரிசியா யிராமலிருந்தும் மக்களுக்கு நல்லவனாகக் காட்சியளித்தது போல, இன்றும் சுவிசேஷகர்கள் நெற்றியில் இரத்தத்தையும் கைகளில் எண்ணெயையும், மேடையில் தீப்பந்தங்களையும் வருவிக்கின்றனர். அவர்கள் பெண்கள் பிரசங்கிக்கவும் தலை மயிரைக் கத்தரிக்கவும் ஆண்களின் உடையை அணியவும் அனுமதித்து இவ்வித காரியங்களை உற்பத்தி செய்கின்றனர். நீங்கள் பெற்றிருப்பது என்ன? ஜனங்கள் இவைகளுக்கு விழுந்து போவார்கள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லையா? அவர்கள் கோராகுக்கு விழுந்தது போன்றே உண்மையான வார்த்தையினின்று திரும்பி ஸ்தாபனத்திற்காக விழுந்து போனார்கள். அவர்களுக்குள்ளிருக்கும் வித்தின் தன்மையை அவர்களுடைய குறைவான ஆடைகள் காட்டுகின்றன.  296. ஆனால் முழு இஸ்ரவேலும் கோராகின் பொய்க்கு விழுந்து விடவில்லை. தேவனுக்கு துதி உண்டாவதாக. அபிஷேகிக்கப்பட்ட தீர்க்கதரிசியான மோசேயோடும், தேவனுடைய வார்த்தை யோடும் சிலர் துணை நின்றனர். இக்காலத்திலும் அநேகர் அழைக்கப் பட்டிருந்தாலும் சிலரே அவருடைய வார்த்தைக்கும் ஆவிக்கும் நிலை நிற்கின்றனர். 297. கோதுமை மணிகளையும் களைகளையும் குறித்த உவமையை நினைவுகூறுங்கள். களைகள் சுட்டெரிக்கப் படுவதற்கென முதலில் கட்டப்பட வேண்டும். அது உண்மையா? இது நிறைவேறப் போகிற ஒன்று. இந்த விசுவாசமில்லாத ஸ்தாபன சபைகள் முன்பிருந்ததைவிட மிக நெருக்கமாகக் கட்டப்படுவார்கள். அவர்கள் ஐக்கிய ஆலோசனை சபையின் சங்கமாக கூட்டிக் கட்டப்பட்டு தேவனுடைய நியாத்தீர்ப்பின் அக்கினிக்கு இரையாக்கப்படுவதற்கு ஆயத்தமாகின்றனர். (நான் இதை எழுதவில்லை; அவரே அதை எழுதினார் என்று உணர்கிறேன்.) இந்த பெந்தகோஸ்தேயினரும் அவ்விதமேயாவார்கள். ஆனால் வார்த்தையாகிய கோதுமை மணிகள் என்றாவது ஒரு நாள் கூட்டி சேர்க்கப்பட்டு எஜமானின் களஞ்சியத்தில் சேர்க்கப்படுவார்கள். 298. கடைசி காலங்களில் மல்கியா 4ம் அதிகாரத்தில் (ஜாக்கிரதைப் படுங்கள்!) கூறப்பட்ட வாக்குத்தத்தம் நிறைவேறும் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்; அது நிச்சயமாக நிறைவேறும். ஏனெனில் அது உயிர்ப்பிக்கப்பட்ட தேவ வார்த்தையாயிருந்து மல்கியா என்னும் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டதாயிருக்கிறது. இயேசு அதைக் குறிப்பிட்டார். அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னதாக சம்பவிக்க வேண்டும். 299. (இப்பொழுது நன்கு கவனியுங்கள்) இயேசு வருவதற்கு முன்பு நிறைவேறாத எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேறியாக வேண்டும். வேதம் நிறைவேறியாக வேண்டும். இந்த அபிஷேகிக்கப் பட்ட தூதன் வரும்போது,, புறஜாதியின் காலம் சபையின் காலங்களோடு முடிவு பெறவேண்டும். அவன் முன்மாரி தொடங்கி பின்மாரி வரையிலான சத்தியங்களான சர்ப்பத்தின் வித்திலிருந்து ஆரம்பித்து முழு வேதத்தையும் விதைப்பான். தன்னுடைய முற்பிதாக்களான எலியா, யோவான் ஸ்நானன் என்பவர்களைப் போன்று அவனும் ஸ்தாபனங்களால் புறக்கணிக்கப்படுவான். எலியா, முதலாவதாக ஆகாபின் காலத்தில் புறக்கணிக்கப்பட்டான். ஆகாப் காலத்தில் இஸ்ரவேலில் நடந்த சம்பவம், மல்கியாவினால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசி தோன்றும் காலத்தில், அமெரிக்காவில் நடைபெறும். ஏனெனில் இந்த தேசம் இஸ்ரவேலுக்கு உதாரணமாயிருக்கிறது.  300. "யேசபேல் மார்க்கம்” என்ற செய்தியைப் படியுங்கள் அல்லது கேளுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் சுதந்திரமாக வழிபட எகிப்தை விட்டு வெளியேறி அவர்கள் குடியேறிய நாடுகளிலுள்ள ஜாதிகளைப் புறம்பே தள்ளி, ஒரு பலத்த ஜனமாகி, தாவீதைப் போன்ற உத்தம தலைவர்களால் அரசாளப்பட்டு, பின்பு ஆகாப் எனும் கொடியவனை சிம்மாசனத்தில் ஏற்றி, அவனுடைய மனைவியாகிய யேசபேல் இஸ்ரவேலின் நிர்வாகத்தை நடத்தியது போன்று, நம் முற்பிதாக்களும் சுதந்தரமாக வாழ எண்ணி தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி, அமெரிக்காவின் சுதேசிகளை விரட்டியடித்து, அந்நாட்டை கைப்பற்றினர். வாஷிங்டன், லிங்கன் போன்ற மகத்தான தேவமனிதர்கள் நாட்டின் நிர்வாகத்தை நடத்தி வந்தனர். சிறிது காலம் கழித்து, தரம் குறைந்தவர்கள் பதவியேற்று, யேசபேலைப் போன்ற அவர்களுடைய மனைவி மறைவாக நிர்வாகத்தை நடத்தினாள். இந்த சமயத்தில் தான் அந்த மனிதன் தோன்ற வேண்டும். அது "கர்த்தர் உரைக்கிறதாவது" என்பதாகும்.  301. கர்மேல் பர்வதத்தில் தேவனுடைய மகிமை காணப்பட்டது போன்று, பின்மாரிக் காலத்திலும் சம்பவிக்கவேண்டும். வேதம் முற்றிலுமாக நிறைவேறியாக வேண்டும். மல்கியா 3ம் அதிகாரத்தில் கூறப்பட்ட முன்னோடியானவன் ( fore runner) யோவான் ஸ்நானனாகும். அவன் முன்மாரியில் விதை விதைத்து, ஸ்தாபனங்களினால் புறக்கணிக்கப்பட்டான், (பரிசேயர் சதுசேயர் என்ற ஸ்தாபனத்தார்). பின்னர் இயேசு வந்து, மறுரூப மலையின் பலப்பரீட்சை நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடுடவன் பின்மாரிக்கென விதைப்பான். இயேசு (வார்த்தையானவர்) ஸ்தாபனங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் மத்தியில் ஒரு மகிமையான சவாலாயிருப்பார். இயேசு வரும்போது ஸ்தாபனங்களையும் பிராமணங்களையும் உதறித் தள்ளி தம்முடைய மணவாட்டியைக் கொண்டு செல்வார். முதலாம் பலப்பரீட்சை கர்மேல் பர்வதத்திலும், இரண்டாம் பலப்பரீட்சை மறுரூப மலையிலும் நிகழ்ந்தன. மூன்றாம் பலப்பரீட்சை கூடிய விரைவில் சீயோன் பர்வதத்தில் நடைபெறும். 302. மோசே எலியா, யோவான் ஸ்நானன் இம்மூவரும் மக்களின் சமூகத்தினின்று விலகி வனாந்திரத்துக்குச் சென்ற சம்பவம் அநேகரை குழப்பத்திற்குள்ளாக்கினது. அவர்களையும் அவர்களு டைய செய்திகளை மக்கள் ஏற்று கொள்ளாததால் அவர்கள் வனாந்தரத்திற்கு செல்ல வேண்டியதாயிருந்தது. ஆயினும் விதை விதைக்கப்பட்டாயிற்று; அடுத்தது நியாயத்தீர்ப்புதான். வரப்போகும் நியாத்தீர்ப்பை அறிவிக்க இவர்கள் அனுப்பப் பட்டனர். விதைத்தலானது முடிவு பெற்று விட்டது. 303. என்றாவது ஒரு நாள் கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி தேவ வார்த்தையைப் பிரசங்கிப்பதற்கு தடை செய்யப்படுவாள். (நீங்கள் குறித்துக்கொள்ள விரும்பினால்,) வெளி: 13:16ல் வேதம் அதைக் குறித்து தீர்க்கதரிசனமாயுரைக்கிறது. ஸ்தாபனங்கள் மணவாட்டியை தடை செய்யும்; அல்லது, “மிருகத்தின் முத்திரையை” அணிந்துகொள்ள வற்புறுத்தும். அப்பொழுது தான் ஆட்டு குட்டியானவர் மணவாட்டியை எடுத்துக் கொள்வார். பின்பு வேசியை நியாயந்தீர்ப்பார். 304. ஒரு முக்கியமான காரியத்தை செய்ய மோசே பிறந்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்கிரியைகளைச் செய்ய அவசியமான விஷேச வரங்களைப் பெறும்படி அவன் கர்த்தரிடத்தில் காத்திருக்க வேண்டியதாயிருந்தது. (அவன் திரும்பிச் சென்று காத்திருக்க வேண்டியிருந்தது) தேவனால் குறிக்கப்பட்ட அச்சமயம் வரும்வரை சிம்மாசனத்தில் ஒரு பார்வோன் இருக்க வேண்டியதா யிருந்தது. தேவன் மோசேயை திரும்பவும் வனாந்தரத்திலிருந்து அவர்களிடமாய் கொண்டு செல்வதற்கு முன்பு ஜனங்கள் ஜீவ அப்பத்திற்காக பசியடைய வேண்டியதாயிருந்தது. ஆயிரக் கணக்கானவர்கள் இந்த கடைசி நாட்களில் அடையாளக் கிரியைக்காரராயிருந்து அதன் விளைவாக, வார்த்தையைக் குறித்தும் தேவனுடைய அசைவைக் குறித்தும் ஒன்றும் அறியாத அடையாளங்களைத் தேடும் சந்ததி உண்டா யிருக்கிறது.  305. நான் உங்களுக்கு கூறினது போன்று, "இரத்தத்தையும், எண்ணெயையும் மேடையில் வரவழைப்பது போன்ற மாம்சமான கிரியைகளை செய்தால் அது தேவனுடைய வார்த்தையா யிராவிட்டாலும் அதை ஆதரிப்பார்கள்." கடைசிக் காலங்களில் என்ன நிகழும் என்பதைக் குறித்து இயேசு நம்மை எச்சரித்து இருக்கின்றார். மத் 24ல் இரண்டு ஆவிகள் நெருக்கமாக இருந்து கூடு மானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று நான் கூறியிருக்கிறேன். அதை எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்? வார்த்தை பரிசோதனையை அவர்களிடம் கொடுங்கள். நீங்கள் அதை எப்படி அறிந்துகொள்ளுவீர்கள்? வார்த்தையை அவர்களிடம் பேசுங்கள்; அதைக் குறித்து அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பாருங்கள்? அவர்கள் வார்த்தையை விசுவாசிக்கவில்லையென்றால், அவர்களிடம் வித்து இல்லையென்று பொருள். அவர்கள் பிசாசாய் இருந்து உங்களை வஞ்சிப்பார்கள். முதல் இரண்டு மணவாட்டிகள் வஞ்சிக்கப் பட்டது போன்று, வார்த்தையைக் கலப்பினமாக்குவதால் மூன்றாவது மணவாட்டியையும் வஞ்சிக்கிறார்கள். 306. தேவன் ஒருக்காலும் தம்முடைய வார்த்தைக்கு மேலாக அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. (ஆமென்! அது ஒரு கடுஞ்சொல்) தேவன் வார்த்தைக்கு முன்பாக ஒருபோதும் அடையாளங்களை வைத்ததில்லை. ஆனால் அடையாளங்கள் அவருடைய வார்த்தையை நிரூபிப்பதற்கென கூட சேர்க்கப்பட்ட ஒரு காரிய மாகும். ஆனால் வார்த்தையே முதன்மையானது.  307. இதை நிரூபிக்க, எலியா அந்த விதவையிடம், “முதலில் எனக்கு ஒரு சிறு அடையை செய்து கொடு , பின் அற்புதம் நிகழ்வதை கவனி” என்றான். வார்த்தையை முதலில் நீங்கள் ஏற்றுக் கொண்டு, பின்பு உங்கள் ஜீவியத்தில் அற்புதம் நடப்பதைப் பாருங்கள். தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியினால் உயிர்ப்பிக்கப்படும். தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதன் சில வசனங்களை மட்டும் விசுவாசித்து மற்றவைகளை எவ்வாறு மறுதலிக்க முடியும்? வார்த்தையின் ஒரு பகுதியை மறுதலிக்க ...... 308. கடைசி காலத்தின் உண்மையான தீர்க்கதரிசி வார்த்தை முழுவதையும் மக்களுக்கு எடுத்துரைப்பான்; ஸ்தாபனங்கள் அவனைப்பகைக்கும். “விரியன்பாம்பு குட்டிகளே” என்று அழைத்த யோவான் ஸ்நானனின் சொற்களைப் போன்று அவனுடைய சொற்கள் கடூரமாக இருக்கும். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மட்டும் அவனுக்கு செவிகொடுத்து எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்படுவர். ஆபிரகாமின் ராஜரீக சந்ததியார் ஆபிரகாமோடு முன்குறிக்கப்பட்டு அவன் விசுவாசத்தை (அவனைப் போல) பெற்றவர்களாய் அவனோடு கூட தேவனுடைய வசனத்தை உறுதியாய் கடைபிடிப்பர். தேவன் நிர்ணயித்தக் காலத்தில் மல்கியா 4ல் கூறப்பட்ட தூதன் தோன்றுவான். நாமெல்லோரும் அவனுக்காகக் காத்திருக்கிறோம். அவன் வருவானென்று நாமெல் லோரும் விசுவாசிக்கிறோம். அது அவருடைய வார்த்தையின் படியே கடைசி காலத்தில் தோன்றும். அதைக் காணத்தக்கதான நேரம் இன்றேயாகும். 309. தேவனுடைய வார்த்தைக்கு அவன் சரியாக சமர்ப்பிக் கப்பட்டிருப்பான். அவருடைய தீர்க்கதரிசிகள் எல்லோரும் அப்படித்தான். அவர்கள் நிரூபிக்கப்பட்டவர்களாயிருப்பர். எலியாவை தேவன் நிரூபித்தது போன்று அவன் பிரசங்கிப்பதை தேவன் சத்தியம்தான் என்று நிரூபிப்பார்; ஏனெனில் அவனுடைய வருகை எலியாவின் வருகையாயிருந்து, சீயோன் மலையின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தமாக்குகிறதாயிருக்கிறது. லோத்தின் நாட்களில் நடந்தது போலவும் கடைசி நாட்களில் நடக்கும் என்று இயேசு கூறினார். அவனுடைய பிரசங்கம் ஆவியினால் சார மேற்றப்பட்டதாயிருந்து தேவனுடைய வார்த்தைக்கு நேராக ஜனங்களை வழி நடத்தும். அநேகர் வேதத்தை தவறான முறையில் கற்றுக் கொண்டிருக்கிற படியால் இந்த தூதனையும் அவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்கள். (நான் இங்கு தீர்க்கதரிசனம் P-R-O-P-H-E-C-Y என்று எழுதி வைத்திருக்கிறேன்) பொய்யர்களால் அநேகர் வேதத்தை தவறான முறையில் கற்றுக் கொண்டிருக்கிற படியால், அநேக உண்மையான ஊழியக்காரரும் இத்தூதனைத் தவறாகப் புரிந்துக்கொள்வார்கள். 310. கடைசி கால தீர்க்கதரிசனங்கள் திரும்பக் கூறப்படுவது போல முதலாவது முன்னோடியானவன் வனாந்திரத்திலிருந்து வந்து, "இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று அறைகூவியது போன்று, அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னோடுபவனும் வார்த்தையினால் பிறந்த மணவாட்டியை ஜனங்களுக்கு சுட்டிக் காண்பிப்பான். வானத்தில் இயேசு மகிமையில் தோன்றுவதை மணவாட்டிக்கு சுட்டிக் காண்பித்து, "இதோ தேவனுடைய ஆட்டுக்குட்டி மகிமையில் வருகிறார்" என்று அறைகூவுவான். இந்த நிறைவேறப்போகின்ற சம்பவத்திற்காக தேவன் தாமே நம்மை ஆயத்தப்படுத்துவாராக.  311. இப்பொழுது, நான் இங்கேயே நிறுத்திவிடுவது நல்லது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவைகள் ஏன் இவ்விதமிருக்கின்றன என்பதை இப்பொழுது நீங்கள் நல்லவிதமாய் புரிந்து கொண்டீர்களா? அது வார்த்தை, நண்பர்களே, அநேக காரியங்கள் சொல்லப்பட வேண்டியதாயுள்ளது. நாம் - இதன்பேரில் ஐந்தரை அல்லது ஆறு மணி நேரம் பிரசங்கித்துள்ளேன். ஆனால் நான் எதை பேசிக்கொண்டிருக்கிறேனோ அது இந்நேரம் பரிசுத்த ஆவியினால் உங்களில் ஆழமாக பதிந்திருக்கும் என்று எண்ணுகிறேன். நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விதைகள் பின்மாரிக்கென இப்பொழுது விதைக்கப்பட்டு விட்டன. 312. நினைவில் கொள்ளுங்கள். வெகுவிரைவில் ஸ்தாபனங்களின் ஒரு கூட்டு சேர்க்கை உண்டாகப் போகிறது. அது மிகவும் பயங்கரமாயிருக்கும். ஐக்கிய சபைகள் என்ற அமைப்பினுள் அவர்கள் தங்களைக் கூட்டி சேர்ப்பார்கள்; பின்பு நம் போன்ற சபையை கிரியை செய்யக்கூடாதவாறு செய்வார்கள் (அவர்கள் அறிந்த வரை). அந்த நேரத்தில் தான் இயேசு தோன்றி யார் மணவாட்டி, யார் மணவாட்டியில்லையென்று காண்பிப்பார்.  313. நினைவில் கொள்ளுங்கள். கிறிஸ்தவ நண்பர்களே, நான் ஒரு மனிதன்; நான் தவறுகள் செய்யக் கூடியவன். ஆனால் தேவன் தேவனாயிருப்பதால் தவறு செய்ய முடியாது. எல்லா எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களும் நிறைவேற வேண்டும் என்று இயேசு கூறினார். வேதவசனத்தில் கூறப்பட்டுள்ளவைகளும் - இதை அவைகளில் ஒன்று - காரியமும் இங்கே நிறைவேற வேண்டும். ஆனால் அத்தகைய கட்டுபாடு உண்டாகும் முன்பு (மிருகத்தின் முத்திரை யிடுதல்) மணவாட்டி சபையை எடுக்கத்தக்கதாக தேவன் விதையை விதைக்க வேண்டியவராயிருக்கிறார். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? விதையானது விதைக்கப்பட வேண்டும். ஸ்தாபன வித்து... இந்த ஸ்தாபனங்கள் மிருகத்திற்கு (ரோம சபை) ஒரு சொரூபத்தை உண்டாக்க வேண்டும். ஆனாலும் அவைகளின் மத்தியில் ஒரு உண்மையான மணவாட்டி இருந்தாக வேண்டும். 314. தன்னை மணவாட்டி யென்று அழைத்துக் கொண்ட ஆதாமின் மணவாட்டி ஜீவனைக் கொண்டு வரத் தவறினாள் ! அவள் மரணத்தைக் கொண்டு வந்தாள்; நாம் அவளுடைய உற்பத்தியா யிருந்து (நம்முடைய சரீரம் ) எல்லோரும் மரிக்கிறோம்.  315. யேகோவாவின் மணவாட்டி மரித்தாள்; அவளை அவர் தள்ளி ஒரு கூட்ட ஜனத்தை தம்முடைய நாமத்திற்கென்று புறஜாதி யினிடத்தில் தெரிந்தெடுத்தார். அது உண்மையா? ஒரு பெண் தன் புருஷனுடைய பெயரை தனக்கு எடுத்துக் கொள்வது போன்று மணவாட்டியும் இருக்கிறாள். இவளும் எதைச் செய்தாள்? அக் காலங்களில் அவர்கள் செய்தது போன்று இவளும் தன்னை ஸ்தாபனமாக்கிக் கொண்டாள், சிதைப்பட்டுப்போனாள். ஆனால் ஒவ்வொரு சந்ததியிலும் ஒவ்வொரு எழுப்புதலின் போதும் ஒரு தேவனுடைய தீர்க்கதரிசி (தீர்க்கதரிசி, பிரசங்கியும், வார்த்தையில் நிலைநிற்கும் உண்மையான பிரசங்கியுமாயிருக்கிறான்) தோன்று கிறான். அவன் எழுப்புதலைக் கொணர்ந்து அந்த சந்ததியில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைக் கூட்டி சேர்க்கிறான். அவள் வித்திற்குள் செய்கிறாள். பின்பு தேவன் விடப்பட்ட மற்றவர்களை விட்டு ஒருபோதும் திரும்பவும் அதை அவர் உபயோகிப்பதில்லை. ஸ்தாபனமான பின்பு எப்பொழுதாவது அது திரும்பவும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறதா என்று எல்லா சரித்திரக்காரர்களையும் நான் கேட்கிறேன். அவள் தன்னை ஸ்தாபித்தவுடனே மரித்து விடுகிறாள். 316. மூடி என்பவரைக் குறித்து நான் யோசிக்கிறேன். அவருடைய காரியங்கள் நடு இரவைப் போன்று மரித்தாகிவிட்டது. மெத்தோடிஸ்டு, பெந்தகோஸ்தேயினர், பிரஸ்பிடேரியன்கள், லூத்தரன்கள் நசரேயர்கள், பில்கிரீம் ஹோலினஸ்; என்ற அமைப்புகளைக் குறித்து நான் யோசிக்கிறேன். பரிசுத்த மனிதர்களான ராபின்சன், ஜார்ஜ் ஒயிட்பீல்டு போன்றவர்களை நான் யோசிக்கிறேன். அவர்களெல்லோரும் சுவிசேஷ்த்தைப் பிரசங்கித்தார்கள், அந்தந்த சந்ததிகள் ஒரு பகுதியாக விதைக்கப் பட்ட விதையைப் பெற்றுக்கொண்டனர். அந்த ஊழியக்காரன் அந்த காலத்தின் வார்த்தையைக் கொண்டு வந்தான். ஒரு பயிரைப் போன்று அவைகள் கீழ் தண்டாகவோ, இலையாகவோ, பட்டு குஞ்சமாகவோ, அல்லது மணியாகவோ அந்தந்த காலத்தின் ஊழியக்காரர்களால் கொண்டு வரப்பட்டன. பூமியின் நான்கு காற்று திசைகளினின்றும் அவைகள் அழைக்கப்பட்டு பின் அதினின்று தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அச்சந்ததிக்காக எடுக்கப்பட்டனர். அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மூலமாக ஜீவிக்கிற தேவனுடைய சபையானது கட்டப்பட்டது.  317. இந்த ஊழியமானது, இயேசு கிறிஸ்துவின் அதே கிரியைகளை நடப்பிக்கும் வரை, அது பொருந்தத்தக்கதாக கூர் தீட்டப்பட வேண்டியதாயிருக்கிறது, ஏனெனில் அவர் வரும்போது தலைக்கல் லானது அதனுடன் சேர்ந்திட வேண்டும். எடுத்துக்கொள்ளப் படுதல் என்று ஒன்று உண்டு; அதில் அவர்கள் எடுத்துக்கொள்ளப் படுவார்கள்; பின்பு சரீரத்தின் மற்ற பாகமும் அவர்களோடு சேர்ந்து கொண்டு, பரலோகத்திற்குள் சென்று விடுவார்கள். ஒரு ஸ்தாபனம் அவ்விதம் செல்லாது நண்பர்களே; வார்த்தையாகிய தேவனின் சபையே அவ்விதம் செல்லும். நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா? இங்கே சில கைக் குட்டைகள் உள்ளன. 318. இங்கிருந்து எங்கு செல்வேன் என்று எனக்குத் தெரியாது. உங்களைப்போலவே நானும் தேவ சித்தத்தை தேடிக்கொண்டிருக் கிறேன். இங்கேயே கூடாரத்தில் நான் தங்கியிருக்க விரும்புகிறேன். ஆனால் அவ்விதம் என்னால் செய்ய முடியாது. பிசாசானவன் ஆயிரக் கணக்கான ஜனங்களுக்குள்ளிருந்து அவர்களைக் கிழித்துக் கொண்டிருக்கிறான். என்னால் அதிக நேரம் தூங்க முடியவில்லை. ஜெப வரிசையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வைத்துக் கொண்டு வருவதையும், பிள்ளைகள் அழும் சத்தத்தை நான் கேட்கும் போதும், சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விசிறிக் கொண்டிருப்பதை காணும்போதும், வெளியிலே நின்று கொண்டு மழைத் தண்ணீர் தங்கள் பிள்ளைகளின் மேல் படாதவாறு மறைத்த வண்ணமாய் நிற்பதைக் காணும்போதும் என்னுடைய இருதயம் அவர்களுக்காக இரத்தத்தை கசிக்கின்றது. 319. இந்த கூடாரம் கட்டப்பட்ட போது, நான் அந்த மூலைக்கல்லை நாட்டினபோது உண்டான தரிசனத்தை நான் நினைவு கூறுகிறேன். அந்த மூலைக் கல்லின் மேல் எழுதப்பட்ட வார்த்தை இதுதான். "இது உன்னுடைய கூடாரம் அல்ல; சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று." இதைதான் நேசிக்கிறேன்; எல்லா இடங்களிலுமுள்ள தேவ பிள்ளைகளை நான் நேசிக்கிறேன். அவர் என்னை எங்கு நடத்தப்போகிறார் என்பதை அறியாதவனா யிருக்கிறேன். எனக்குத் தெரியாது; நான் காத்துக் கொண்டிருக்கி றேன். கடந்த ஒரு வருடமாக காத்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் இரண்டு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிருக்கும்; எனக்குத் தெரியாது. அடுத்த அசைவு என்ன என்பதை அறியாதவனாயிருந்து அதற்காக காத்து கொண்டிருக்கி றேன். வேத வார்த்தையின்படி வசனமானது விதைக்கப் பட்டாயிற்று என்று நான் எண்ணுகின்றேன். வரவிருக்கும் அடுத்தக் காரியம் அவருடைய ஆவிதான். 320. பில்லி கிரகாமும், ஓரல் ராபர்ட்சும் எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கலாம். வேறு எங்கெங்கோ (சில ஊழியங்கள்) விதைகள் விதைப்பதற்காக கர்த்தர் ஒரு வேளை என்னை அனுப்பக்கூடும் ஆனால் நம்முடைய தேசமானது விதைக்கப்பட்டு அறுவடைக்கு ஆயத்தமாயிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன்.  321. ஆவியானது விழும்போது அங்கு ஜனங்கள் மத்தியில் ஒரு அசைவு ஏற்படுகிறது, அதே சமயத்தில் நான் இங்கு மேடையில் நிற்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அந்த ஸ்தாபனங்களும் கோதுமையோடு குதித்தெழுந்து அசைவில் காணப்படுகின்றது. பின்பு தேவனுடைய சபையானது அங்கிருந்து துரத்தப்படுகிறது. அவர்கள் (ஸ்தாபனங்கள்) தங்களை ஐக்கியப் படுத்தி தங்களைச் சார்ந்தவர்களின் மேல் ஒரு கட்டுப்பாட்டை விதிக்கும் வரை அங்கே அவர்கள் பலவிதமான வியாபாரங்களை உற்பத்தி செய்கின்றார்கள். ரோமாபுரி இவ்வுலகை ஒரு காலத்தில் அரசாளப் போகிறது, கம்யூனிசம் அல்ல; தேவனால் தள்ளப்பட்ட ஸ்தாபன சபையாகிய இந்த ரோமானிசமும், ப்ராடஸ்டானிசமும் ஒரு ஐக்கியத்தின் அடிப்படையில் உலகை ஆளுவார்கள். தேவனுடைய வார்த்தையை நான் அறிந்த மட்டில் அது மிகவும் சமீபமாயிருக்கிறது. 322. நான் உங்களை நேசிக்கிறேன். பாராட்டுகிறேன். ஒருவேளை ஒருவாரம் கழித்து திரும்பவும் உங்கள் மத்தியில் நான் வரக்கூடும். ஃப்ளாரிடாவுக்கும், நாளை இரவு ஜார்ஜியாவிற்கும் கர்த்தருக்குச் சித்தமானால் செல்லவிருக்கிறேன். சில கூட்டங்கள் பரவலாக எனக்கென்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கர்த்தருக்குச் சித்த மானால் சகோ. ராபர்சன், பார்டர்ஸ் அவர்கள் ஒழுங்கு செய்யும் கூட்டங்கள் எனக்கு ஏராளம் உண்டு. ஏறத்தாழ 40 சபைகள் ஐக்கியம் கொள்ள தங்கள் விருப்பத்தை தெரியப்படுத்தியுள்ளனர் என்று நான் யூகிக்கிறேன், ஆனால் ஆவியானவரோ அதை தடை செய்வது போல காணப்படுகின்றது. ஏன் என்று எனக்கு தெரிய வில்லை. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் எனக்காக ஜெபம் செய்யுங்கள். நானும் உங்களுக்காக ஜெபம் செய்வேன். ஐக்கியமாக நாம் நிற்போம், தேவன் நமக்கு உதவி செய்வாராக இங்குள்ள ஒருவராவது அந்த மகத்தான சமயத்தை தவறவிடக் கூடாது.  323. நான் அநேக காரியங்களில் குற்றம் சாட்டப்பட்டவனாக இருக்கிறேன், நண்பர்களே, அவ்விதம் அநேக காரியங்களில் நான் குற்றமுள்ளவனாகவும் காணப்படுகிறேன்; அது உண்மை . அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. யாராகிலும் என்னை மூலையில் தள்ளி சண்டையிட வைப்பது போல் இருக்கிறது. எனக்குத் தெரியாது; அது ஒரு சுபாவம். நான், கண்டிப்பாக செய்யக்கூடாது என்று நிச்சயித்த காரியத்தை நானே செய்திருக்கிறேன். என் மனப்பூர்வமாக இல்லை, ஆனாலும் நான் அதற்கு கொள்ளையாகி விட்டேன். இந்த நாளில் (நாம்வாழ்கின்ற காலத்தில்) அதுதான் என்னை மிகவும் பயப்படுத்துகிறது. நான் அவை வருவதற்கு முன்பாக கூடுமானால் தேவனிடத்தினின்று பதிலைப் பெற்று கொள்ள விரும்புகிறேன், ஏனெனில் நான் அவரை விட்டுவிட விரும்பவில்லை. எல்லா இடங்களிலும் நான் அவரோடு இருப்பதையே விரும்புகிறேன். நீங்கள் எனக்காக ஜெபம் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.  324. நான் உங்களுக்கு சத்தியத்தைக் கூறினேன் என்பதை நினைவு கூறுங்கள். இன்று முழுவதும் (காலையிலிருந்து) நீங்கள் இங்கே இருந்ததற்காகவும், அநேகர் கால்வலிக்க நின்று கொண்டும், வெளியே வாகனங்களிலும் அமர்ந்து பாட்டரிகள் தீர்ந்து போகும்வரை செவிகொடுத்துக் கொண்டும் இருந்தமைக்காக நான் நன்றி கூறுகிறேன். இவை யாவும் ஒலிநாடாவில் உள்ளன. சகோதரர் அதை ஒலிப்பதிவு செய்துள்ளனர்; நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த செய்திகள் அடங்கிய ஒலி நாடாக்கள் உங்களுக்கு கிடைக்குமானால், அதை வீட்டிற்குக் கொண்டு சென்று ஞானத்துடன் மிகவும் சிரத்தையுடன் பரிசீலனை செய்து, கர்த்தர் உங்களுக்கு எதை வெளிப்படுத்துகிறார் என்பதை பாருங்கள். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? எப்படி எங்கே? இங்குள்ள இந்த கைக் குட்டைகளுக்கு நான் ஜெபம் செய்யுமுன் உங்கள் ஒவ்வொரு வருக்காகவும் ஜெபம் செய்ய விரும்புகிறேன். இப்பொழுது அந்த பாடலை நான் பாடவிரும்புகிறேன். நேசிக்கிறேன், நேசிக்கிறேன் (அவருடைய வார்த்தையை நீங்கள் நேசிக்கிறீர்களா? அப்படியானால் அவரை நீங்கள் நேசியுங்கள்) முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் .... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி.) 325...... எங்களை வழிநடத்தினவரே, நான் எதற்காக அந்த காரியங்களைக் கூறினேன், ஏன் அவைகளைக் செய்தேன் என்பதை என் உடன் சகோதரர் புரிந்துகொள்ள நான் இவ்வளவு நேரமாக பிரசங்கித்து, விளக்கிக் கூறினேன். ஆண்டவரே, இங்கு காணப்படுகின்றவர்களையும், இந்த ஒலி நாடாக்களை கேட்க இருப்பவர்களையும் நான் உம்மிடம் கொண்டு வருகிறேன். தேவனே நீரே அவர்களுக்கு தெய்வீக வியாக்கியானத்தைத் தாரும். கர்த்தாவே, நான் வார்த்தையைக் கொண்டு வந்திருந்தால், யார்மேல் விழவேண்டும் என முன் குறிக்கப்பட்டதோ அவர்மேல் அது விழட்டும். உமது வார்த்தையே சத்தியமாயிருக்கிறது. பிதாவே, நான் அநேக தடவை உம்மை அதிருப்திபடுத்தியிருக்கிறேன், என்னை மன்னியும். நான் பார்க்கக் கூடியதும். பார்க்க கூடாமலு மிருக்கிற சபையோரின் பாவங்களை மன்னிக்கும்படி கேட்டு கொள்கிறேன்; தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் யாத்திரையின் முடிவில் இருக்கிறோம் என்பதை உணருகிறோம். எல்லா அடையாளங்களும் இதோ எங்கள் முன்பாக இருக்கிறது. சிறிது நேரத்திற்கு முன்பு நான் கூறியவைகளை ஆவிக்குரிய சிந்தை கிரகித்துக் கொள்ளும் என நிச்சயித்திருக்கிறேன். அவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென அவர்களுக்காக நான் வேண்டிக் கொள்ளுகிறேன். நாங்கள் ஏதோ ஒன்றின் அருகாமையில் இருக்கின்றோம். நாங்கள் பேரிரைக் சல்களைக் கேட்கிறோம்; நாங்கள் மிக அருகில் உள்ளோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவைகளைக் கேட்டு கொள்ளுகிறேன். ஆமென்.  326. பரலோகப் பிதாவே, எங்களுக்கு உதவிச் செய்யும். இங்கு அமர்ந்துள்ள ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். என்னை நம்புவதற்கு அடையாளமாய் வியாதியஸ்தர் வைத்துள்ள கைக்குட்டைகளுக்காக நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே நான் எல்லாருக்குமாக விசுவாச ஜெபத்தை ஏறெடுக்கிறேன். இப்பொழுது, தேவனுடைய வார்த்தைக்கு திறந்த இருதய முள்ளவர்களில் இந்த விதையை நான் நடுகிறேன். கர்த்தராகிய தேவனே, தேவனாகிய உம்மில் விசுவாசம் உள்ளவனாய், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உரிமை கோரி, நான் அவர்களை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். அதை நீர்ப்பாய்ச்சி, ஆண்டவரே, நீரே சுகமளிக்கின்ற அதே மகத்தான தேவன், இரட்சிக்கின்ற அதே மகத்தான தேவன், உயிர்த்தெழுந்த அந்த மகத்தான தேவன் நீர் அங்கே முளைத்தெழுந்த அந்த வித்தின் மீது உம்முடைய ஆவியை அனுப்பும். நீரே தேவன். வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்படியாய் அவர்களுடைய இருதயமாகிய கருப்பையை நீர் பரிசுத்த படுத்தி, கிறிஸ்துவுக்கென்று ஒரு மணவாட்டி மணியை உற்பவித்தருளும். கர்த்தாவே இதை அருளும். தேவனே, உமக்குச் சித்தமானால் இங்குள்ள ஒவ்வொரு வரையும் உம்முடைய மணவாட்டியாக எடுத்துக் கொள்ள நான் அவர்களை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென்.  327. நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில்... நம்முடைய கரங்களை உயர்த்தி, நாம் எல்லாரும் ஒன்றாக . நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முத்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் ....  328. இப்பொழுது, வார்த்தையானது ஆறு மணி நேரம் பிரசங்கிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ஒன்று. உங்கள் முதற்படி .... தான் மெச்சுகிறேன். மனந்திரும்பி .... ? அவர்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே தங்கள் பாவமன்னிப்புக்கென்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பதாக வாக்குதத்தம் கொடுத்துள்ளார். ஏனெனில் வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும், தூரத்திலுள்ளவர்க்கும் அது மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட், சுத்தோலிக், பிரஸ்பிடரியன், மற்றும் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளுகிற ஒவ்வொருக்கும் ஆகும் - வருகிறவன் எவனோ அவன் வரட்டும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?  329, நான் உங்கள் போதகரை ... தாம் இப்பொழுது சகோதரன் நெவில் அவர்களைக் கேட்கப்போகிறேன் ... சிறிது நேரம் அமர்ந்திருங்கள். சகோ. நெவில் மற்ற ஆராதளையைப்பற்றிய அறிவிப்புகளை உங்களுக்குக் கூறுவார்.